இந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்

Skoda Superb Sportline

ஸ்கோடா நிறுவனம், புதிய சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் 1.8 TSI பெட்ரோல் வகைகள் 28.99 லட்ச ரூபாய் விலையிலும், 2.0 TDI டீசல் வகைகள் 31.49 லட்ச விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மேற்குறிய அனைத்து விலைகளும் இந்தியாவில் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும். புதிய ஸ்போர்ட்ஸ்லைன் கார்கள் ஆக்டேவியா VRS கார்களை போன்றே இருக்கும். புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களின் மிட்-ஸ்பெக் வகை மற்றும் ஸ்டைல் வகை கார்கள் லாரின் மற்றும் க்ளெமென்ட் டிரிம்களில் முன்னிலை பெற்றதாக இருக்கும்.

Skoda Superb Sportline Launched

You May Like:ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறமாக கிளாஸி பிளாக் கிரில் மற்றும் ரியர் லிப் ஸ்பாயிலர், கிளாஸ் பிளாக் டிரிட்மென்ட் செயப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிள் மற்றும் சைட்களிலும், மேட் பிளாக் ரியர் டிஃப்யூசர்களுடன் ஸ்போர்ட்ஸ் குரோம் எக்ஸ்ஹாஸ்ட் பைக்கள், 17 இன்ச் டூயல் டோன் டிராகன் அலாய் வீல் மற்றும் ஸ்போர்ட்ஸ்லைன் பேட்ஜ்ஜிங் செய்யப்பட்டுள்ளது.

Skoda Superb Sportline Dashboard

You May Like:விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது

2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்கள், ஆக்டேவியா V போன்ற இருக்கும். மேலும் இந்த காரில் பிளாக் இன்டீரியர் தீம்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவிலான வசதிகளுடன் கார்பன் டிக்கர் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரில் பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்கள், பேடல் ஷிஃப்ட்டினர், ஸ்போர்ட்ஸ் சீட்களுடன் இடம் பெற்றுள்ளது. ஹெட்ரெஸ்ட்களுடன் உள்ள இந்த சீட்கள் அல்கேன்ட்ரா லெதர் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

You May Like:விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்

ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களில் 1.8 லிட்டர் TSI, நான்கு சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 180bhp மற்றும் 300 Nm டார்க்யூ பீக்கில் 14.81 kmpl ஆக இருக்கும். ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் டீசல் வகைகள் 2.0 லிட்டர் TDI, நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 177bhp மற்றும் 350Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார்களின் எரிபொருள் செலவு 18.66 kmpl ஆக இருக்கும்.

Skoda Superb

You May Like:SWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்

புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்கள் மார்க்கெட்டில் வோக்ஸ்வாகன் பாசட் மற்றும் ஹோண்டா அக்கார்டு கார்களுக்கு போட்டியாக இருக்கும்.