அறிமுகமானது 2018 டாடா டிகோர் ஃபேஸ்லிப்ட்; விலை ரூ. 5.20 லட்சம்

Tata Tigor Facelift Launched

புதிய டாடா டிகோர் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலில், இதற்கு முந்தைய மாடலை விட சில குறிப்பிட்ட  அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்கள் 5.20 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய டிகோர் கார்கள், ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி டிசைர் மற்றும் ஃபோர்ட் ஆஸ்பியர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tata Tigor Facelift

You May Like:ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த விழாகால சீசனை முன்னிட்டு தனது புதிய டாட்டா டிகோர் கம்பெக்ட்-செடான் கார்களில் முதல்முறையாக ஃபேஸ்லிப்ட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

2018 டாட்டா டிகோர் கார்களில் அதிகமாக தேவைப்படும் பிரிமியம் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பெட்ரோல் வகை, 5.20 முதல் 6.65 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் வகைகள் 6.09 முதல் 7.38 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதுமட்டுமின்றி டாட்டா நிறுவனம் புதிய XZ+ டிரிம் பெட்ரோல் வகைகளை, AMT கியர் பாக்ஸ் உடன் வெளியிட்டுள்ளது.

You May Like:அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்

புதிய 2018 டாட்டா டிகோர் கார்களின் வெளிப்புறத்தில், புதியதாக முன்புறம் டைமண்ட் முன்புற கிரில், புரொஜெக்டர் ஹெட்லேம்கள் மற்றும் 15 இன்ச் அலாய் வீல்களுடன் டாப் வைப்ரன்ட்களாக வெளியாகியுள்ளன.

பின்புறத்தில் அதிலவிலான குரோம் மற்றும் கிரிஸ்டல்களுடன், கவர்ந்திழுக்கும் டைல்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. டாட்டா டிகோர் 5 பெட்ரோல் வைப்ரண்ட்களிலும், 5 டீசல் வைபரண்ட்களிலும் கிடைக்கிறது. டாட்டா டிகோர் 2018 கார்கள் இந்த விழா கால சீசனில் புதிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.
2018 Tata Tigor Facelift Dashboard

You May Like:ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I

டாட்டா டிகோர் கார்களின் இடம் பெற்றுள்ள பெரிய மாற்றம், அதன் கேபின்களில் செய்யப்பட்டுள்ளது. கேபின்களில் உள்ள டாஷ் போர்டுகள் பிளாக் மற்றும் கிரே உள்அலங்காரங்களுடன், டைட்டானியம் கலரில் லெதர் சீட்கள் மற்றும் அழகாக பின்னல்களுடன் கூடிய ரூப் லையனர்களையும் கொண்டுள்ளது. மேலும் இதில் பின்புறம் கையை வைத்து கொள்ள கப்ஹோல்டர் ஒன்றும் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது. இந்த காரில் முழுமையான ஆட்டோமேடிக் காலநிலை கட்டுபாட்டு மற்றும் காரின் பூட் ஸ்பேஸ் 419L-ஆகவும் இருக்கும்.

இந்த காரில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெரிய மாற்றம், இந்த காரில் 7 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், இவை ஹர்மன் நிறுவனத்தில் இருந்த பெறப்பட்டது. மேலும் தற்போது இந்த கார்களில் ஆண்டிராய்டு ஆட்டோ சப்போர்ட்டும் உள்ளது. ஆப்பிள் கார்பிளே இடம் பெறாதது ஒரு குறையாகவே உள்ளது.
2018 Tata Tigor Facelift Front View

You May Like:ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

டாட்டா மோட்டார்ஸ் நிறுவன சிஇஒ மற்றும் எம்டி குயின்டர் புட்ஸ்செக் தெரிவிக்கையில், “காம்பேக்ட் செடான் வகை கார்கள், அதன் பிரிமியம் வசதிகள் மற்றும் உறுதியான மற்றும் கவர்ந்திழுக்கும் லூக் போன்றவைகளால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தொடர்ந்தே நிலைக்க செய்யும் நோக்கில், புதிய டிகோர் கார்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பல்வேறு புதிய வசதிகளுடன் விற்பணைக்கு வந்துள்ள இந்த கார்கள், பொருத்தமான வகையில் அழகிய வடிவமைப்பையும் பெற்றுள்ளது. மேலும் இதன் சிறந்த செயல்திறன், பயணத்தின் போது கிடைக்கும் சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்புகிறோம்” என்றார்.
2018 Tata Tigor Facelift Seating

டாட்டா டிகோர், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.01 லிட்டர் டீசல் இன்ஜின்கள் என இரு வகைகளை கிடைகிறது. டிகோர் பெட்ரோல் கார்களில் AMT கியர்பாக்ஸ்களுடன் 5-ஸ்பீட் MT ஆப்சன்களும் உள்ளது. பெட்ரோல் இன்ஜின்கள் 84 bhp ஆற்றல் மற்றும் 114 Nm டார்க்யூகளுடனும் டீசல் வகை கார்கள் 68 hp ஆற்றல் மற்றும் 140 Nm டார்க்யூகளுடனும் விற்பனைக்கு வந்துள்ளது.