எந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்

car discounts December 2018

ஆண்டு கடைசியையொட்டி அனைத்து கார் நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் குறித்து முழுமையான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

புத்தாண்டில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்த இருப்பதால் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தொகுப்பை வழங்குகிறோம்.

ஃபோர்ட் இந்தியா வழங்கும் டிஸ்கவுண்ட்கள்

Ford India Discounts

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃபோர்ட் இந்தியா நிறுவனம் மிட்நைட் சர்ப்ரைஸ் சேல்-ஐ இந்த மாத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த சேல்-லில் கார் வாங்குபவர்களுக்கு உறுதியான கிஃப்ட்கள் உண்டு என்று தெரிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் டிசம்பர் 7 முதல் 9-ம் தேதி வரை ஃபோர்ட் இந்தியா நிறுவன காரை புக்கிங் செய்யும் செய்தால், அவர்களுக்கு ஹோம் அப்ளையன்ஸ், கோல்டு காயின், ஐபோன் X, உயர்தரம் கொண்ட LED டிவிக்கள் மட்டுமின்றி கோடைகால பாரிஸ் பயணம் டிக்கெட்டும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் லக்கி டிரா ஒன்று நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பம்பர் பரிசும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி ஃபோர்ட் டீலர்களும், பல்வேறு சலுகைகளை அளித்துள்ளனர். இவர்கள் அறிவித்துள்ள சலுகைகள், அவர்களிடம் உள்ள ஸ்டாக் நிலவரத்தை பொருத்து வேறுபடும்.

ஃபோர்ட் ப்ரீஸ்டைல் – டீலர்கள் வழங்கும் பெனிபிட் 40 ஆயிரம் ரூபாயாகும் (இன்சூரன்ஸ் பிரிமியம் டிஸ்கவுன்ட் ரேட் உள்பட)

ஃபோர்ட் ஆஸ்பயர் வகைகளில் புதிய ஆஸ்பயர் எகோ ஸ்போர்ஸ் கார்களுக்கு 5 ஆண்டு வாரண்ட்டி, டீலர்கள் வழங்கும் பெனிபிட்டாக 50K வரை பெறலாம் (இன்சூரன்ஸ் பிரிமியம் டிஸ்கவுன்ட் ரேட் உள்பட)

ஹோண்டா கார்ஸ் இந்தியா வழங்கும் டிஸ்கவுண்ட்கள்

Honda Cars Discounts

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதேபோலவே ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனமும் இந்த மாதத்தில் சிறப்பு சேல்-ஐ அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த நிறுவனம் சர்வதேச அளவிலான 70-ம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், சில சிறப்பு டிஸ்கவுண்ட் ஸ்கீம்கள் மற்றும் பயன்களை தங்களது பல்வேறு மாடல்களுக்கு அதாவது பிரியோ முதல் BR-V வரை அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகமான CR-V கார்களுக்கு எந்த விதமான டிஸ்கவுண்டும் அறிவிக்கப்படவில்லை.

ஹோண்டா பிரியோ கார்களை வாங்குபவர்களுக்கு, 19 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட முதல் ஆண்டு இன்சூரன்சை ஒரு ரூபாய் விலையில் கொடுக்கிறது.

ஹோண்டா அமேஸ் கார்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டு நீடிக்கப்பட்ட வாரண்டி + 3 ஆண்டு ஹோண்டா புரோ கார் சர்விஸ் AMC + எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு, 70 ஆயிரம் வரை பெனிபிட் பெறலாம். (ஓராண்டு இன்சூரன்ஸ் + ஜாஸ் VX கார்களுக்கு 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ். மேலும் கூடுதலாக ஜாஸ் எஸ் மற்றும் வி டிரிம்களுக்கு 25 ஆயிரம் கேஷ் டிஸ்கவுன்ட்)

ஹோண்டா சிட்டி கார்களுக்கு 62 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட் பெறலாம். (ஓராண்டு இன்சூரன்ஸ் + 20 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் + 10 ஆயிரம் மதிப்பு கொண்ட உதிரி பாகங்கள்)

ஹோண்டா WR-V கார்களுக்கு 32 ஆயிரம் வரை பெனிபிட் பெறலாம் ( ஓராண்டு இன்சூரன்ஸ் + 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட்)

ஹோண்டா BR-V கார்கள் 1 லட்சம் வரை பெனிபிட் பெறுகிறது ( ஓராண்டு இன்சூரன்ஸ் + 50 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் + 16,500 மதிப்பு கொண்ட உதிரிபாகங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும், எக்ஸ்சேஞ்ச் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 26,500 ரூபாய் வரையிலும் கிடைக்கும்.

டாடா மோட்டார்ஸ் வழங்கும் டிஸ்கவுண்ட்கள்


பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தாண்டு இறுதி டிஸ்கவுண்ட்கள் மற்றும் பயன்களை அறிவித்துள்ளன. கார் தயாரிப்பாளர் அனைத்து மாடல்களுக்கு சலுகை அறிவித்துள்ளனர். இருந்தபோதும், புதிய டியாகோ JTP மற்றும் டிகோர் JTP ஆகிய கார்களுக்கு இதுபோன்ற சலுகை அறிவிக்கப்படவில்லை.

டாடா டைகோ கார்கள், ஓராண்டு இன்சூரன்ஸ் டிஸ்கவுண்ட்களுடன் 7,400 ரூபாய் + 10 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் பெறலாம்.

டாடா டிகோர் கார்களுக்கு ஓராண்டு இன்சூரன்ஸ் மற்றும் டிஸ்கவுன்ட் 15 ஆயிரம் ரூபாய் + 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் பெறலாம்.

டாடா நெக்சான் கார்களுக்கு ஓராண்டு இன்சூரன்ஸ் டிஸ்கவுண்ட் 13 ஆயிரம் + 15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் பெறலாம்.

டாடா ஹெக்ஸா ஓராண்டு இன்சூரன்ஸ் டிஸ்கவுண்ட் 27 ஆயிரம் + 25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் பெறலாம்.

டாடா நிறுவனம் டாடா ஜெஸ்ட் டீசல் வகைகளுக்கு 45 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிக்கிறது. இத்துடன் 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

ஹூண்டாய் இந்தியா வழங்கும் டிஸ்கவுண்ட்கள்

2018 Hyundai Discounts

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தற்போது இந்தாண்டு இறுதி சேல்ஸ்களை “டிசம்பர் டிலைட்” என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பல்வேறு டிஸ்கவுண்ட் மற்றும் பயன்களை அளித்து வருகிறது. இந்த சலுகைகளில் புதிய ஜென் ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் கிரேட்டா எஸ்யூவி கார்கள் மட்டும் இடம் பெறாது என்று ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பயன்கள்களும் கிடைக்கும். இந்த சலுகை வரும் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிரான்ட் i10 பெட்ரோல் கார்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரையும், டீசல் வெர்சன்களுக்கு 85 ஆயிரம் ரூபாய் வரையும் பெனிபிட்களை பெறலாம்.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் சப்காம்பேக்ட் செடான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரை
பெனிபிட்களை பெறலாம்.

ஹூண்டாய் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை டிஸ்கவுன்ட் பெனிபிட் பெறலாம்.

ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட் கிடைக்கும்.

ஹூண்டாய் எலக்டிரா கார்களுக்கு ஒரு ஆண்டு இலவச இன்சுரான்ஸ் மற்றும் 30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் கிடைக்கும்.

ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவிகளுக்கு ஒரு ஆண்டு இலவச இன்சுரான்ஸ் மற்றும் 30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட் கிடைக்கும்.

ஹூண்டாய் கிரான்ட் i10 ஸ்போட்ஸ் மற்றும் எக்ஸ்சென்ட் VTVT S டிரிம்கள் விலை முறையை 5.99 லட்சம் மற்றும் 5.39 லட்சமாகும் (இவை எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்)

டொயோட்டா இந்தியா வழங்கும் டிஸ்கவுண்ட்கள்

Toyota India Discounts December 2018

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

டொயோட்டா இந்தியா நிறுவனமும் இந்தாண்டு இறுதி சேல்-ஐ “ரிமம்பர் டிசம்பர்” என்ற பெயரில் இந்த மாதத்தில் தொடக்கியுள்ளது. டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் 2019 ஜனவரி முதல் உயர்த்த உள்ளது. அதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் இந்த மாதம் 31ம் தேதி மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு மார்ச்சில் புதிதாக அறிமுக செய்பபட உள்ள டொயோட்டா யாரிஸ் கார்களுக்கு ஒரு லட்சம் வரை பெனிபிட் பெறலாம்.

டொயோட்டா கொரோலா அல்டிஸ் கார்களுக்கு 1.1 லட்சம் வரை பெனிபிட் கிடைக்கும்.

டொயோட்டா போர்ட்டுனர் கார்களுக்கு 45 ஆயிரம் பெனிபிட் பெறலாம்.

இடோஸ் மற்றும் லிவா கார்களுக்கு முறையே 38 மற்றும் 23 ஆயிரம் பெனிபிட் பெறலாம்.

இதுமட்டுமின்றி அரசு மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு சிறப்பு பெனிபிட்களும் உள்ளது.

மாருதி சுசூகி இந்தியா வழங்கும் டிஸ்கவுண்ட்கள்

Maruti Suzuki Discounts December 2018

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மாருதி சுசூகி ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 கார்களை வாங்குபர்கள் 30 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம். இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்தால் எந்த நேரடி டிஸ்கவுண்ட்டும் இந்த மாதத்தில் அளிக்கப்படவில்லை. ஆனாலும் டீலர்கள், சிறப்பு டிஸ்கவுண்ட்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பயன்களை வழங்குகின்றனர்.

மாருதி சுசூகி ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 கார்களை வாங்குபர்கள் 30 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட் பெறலாம்.

மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களில் பெட்ரோல் வகை கார்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையும், CNG வகைகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரையும், AMT வகைகளுக்கு 45 ஆயிரம் வரையும் பெனிபிட்களை பெற்றுள்ள கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி சலேரியோ கார்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட்களை பெற்று கொள்ள முடியும்.

மாருதி சுசூகி ஸ்ப்ட் கார்களில் பெட்ரோல் வகைகளுக்கு 35 ஆயிரம் வரையும், டீசல் வகைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும் பெனிபிட்களை பெற முடியும்.

மாருதி சுசூகி டீசயர் கார்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட்களை பெற்று கொள்ள முடியும்.