வெளியானது 2019 பிஎம்டபிள்யூ இசட்4-ன் அதிகாரப்பூர்வ டீசர்

Release of BMWZ4 2019

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள மிராம்ஸ் நகரில் உள்ள பாவாரியன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் சோதனை மையத்தில் இசட்4 எம்40ஐ கார்கள் சோதனை செய்யும் மாதிரி படங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரும் 2019 பிஎம்டபிள்யூ இசட்4 கார்கள் தயாரிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள  பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்த கார் குறித்த பல்வேறு மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஆறு சிலிண்டர்களை உள்ளடக்கிய இன்ஜின் கொண்ட இந்த கார்கள் புதிய தலைமுறைக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசட்4-ல், டிரைவிங் டைனமிக்ஸ் சரியாக வடிவமைக்கப்பட்டதோடு, சஸ்பென்ஸன் சிஸ்டமில் இடம் பெற்றுள்ள அனைத்து கருவிகளையும் சரியாக பொருத்துவதே தற்போது நோக்கமாகும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Release-of-BMWZ4-2019-front

புதிய பிஎம்டபிள்யூ இசட்4-ல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை முறை மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் குறித்து சஸ்பென்ஷன் அப்ளிகேஷன் தலைவர் ஜோஸ் வேன் தெரிவிக்கையில்,  “பிஎம்டபிள்யூ இசட்4 வாகனத்தின் வேகம் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் ஆகியவற்றை அதிகப்படுத்தும் அமைப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தரம் கொண்ட கார் வடிவமைப்பு மற்றும் சிறப்பான முறையில் சஸ்பென்ஷன் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தவகை கார்கள் மிகச் சிறப்பான வடிவமைப்புடன், ஸ்டியரிங் சரியான வடிவத்திலும் உள்ளது. மேலும், நீள் மற்றும் குறுக்குவெட்டு வடிவமைப்பு  நேர்த்தியாகவும் உள்ளதால் ஸ்போர்ட்ஸ் கார்களை போன்று செயல் திறனுடன் இயங்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்” என்றார்.

Release-of-BMWZ4-2019-teaser-front

இதுமட்டுமின்றி, பிஎம்டபிள்யூ இசட்4 ஆறு சிலிண்டர் இன்ஜின் கொண்டதால் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இதுமட்டுமின்றி கீழிறக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன்,  எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் டேம்ப்ர்ஸ், புதிதாக மேம்படுத்தப்பட்ட முன்பக்க ஆக்ஸில், எம் லைட், கலப்பு உலோகம் கொண்ட வீல் மற்றும் டயர், எம் ஸ்போர்ட்ஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் முறையில் கட்டுபடுத்தப்படும் பின்புற ஆக்ஸில் வேறுபாடு போன்ற உபகரணங்களை கொண்டது. இந்த கார்களின்  இன்ஜின்கள் குறைந்த பட்சமாக 190 குதிரை திறன் முதல் அதிகபட்சமாக 425 குதிரை திறன் கொண்டது வரை பல்வேறு வகைகளில் கிடைக்கும். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ப அதிக ஆற்றலுடன் செல்ல 204 குதிரை திறன் கொண்ட ஹைபிரிட் இன்ஜினும் இந்த காரில் இடம் பெற்றுள்ளது.

Release-of-BMWZ4-2019-Rear

சாதரணமாக பார்க்கும் போது பிஎம்டபிள்யூ இசட்4, சாதரண காரில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளது போன்று தோன்றினாலும், இதில் நவீன மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவ கார்கள் மூலம் உண்மையான கார் எப்படி இருக்கும் என்று நம்மால் சரியான தெரிந்து கொள்ள முடியாது. பிஎம்டபிள்யூ இசட்4 காரை முழுமையாக தெரிந்து கொள்ள இந்தாண்டு இறுதி வரை நாம் காத்திருக்க வேண்டும் ஏன்னென்றால், இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.