2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி வெளியானது

2019 Ford Endeavour Facelift Launch Date Revealed

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தின் பெரியளவிலான அறிமுகமாக 2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இந்த கார்கள் அறிமுகமாகும் தேதி இறுதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் வரும் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் பல்வேறு வகையான காஸ்மெடிக் அப்டேட்களுடன், புதிய மற்றும் மேப்படுத்தப்பட்ட வசதிகளுடன், புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வெளியாக உள்ளது.

உண்மையில், இந்தியாவில் உள்ள சில ஃபோர்டு நிறுவன டீலர்கள், எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கை தொடங்கியுள்ளனர். ஆனாலும் அதிகாரப்பூர்வ புக்கிங் இந்த கார் அறிமுகமாகும் தேதிக்கு முன்பே இருக்கும் என்று தெரிகிறது.

You May Like:2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது

புதிய 2.0 லிட்டர் இன்ஜின்கள், நான்கு சிலிண்டர் டீசல் இஞ்சின்களுடன் தாய்லாந்து ஸ்பெக் போர்டு எவரெஸ்ட் (எண்டீவர்) கார்கள் கடந்த ஆண்டு அறிமுகமானது. புதிய ஆயில் பர்னர்களை மாற்றி அமைத்த நிறுவனம், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களை இந்தியாவில் வெளியாகும் கார்களுக்கு பொருத்த உள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி

இந்த கார் குறித்து டீலர்களிடம் பேசுகையில், இந்த கார்கள் 2.0 லிட்டர் இன்ஜின்களுடன் குறைந்த-ஸ்பெக் டிராண்ட் மற்றும் டைட்டானியம் வகைகள், 3.2 லிட்டர் மோட்டார்களுடன் டாப்-ஸ்பெக் மாடல்களும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில், 2.0 லிட்டர் இன்ஜின்களுடன் இரண்டு அவுட்புட்களை கொண்டு இந்த கார்கள் வெளியாகியுள்ளது. அதாவது, 180bhp மற்றும் 420Nm டார்க் மற்றும் 213bhp மற்றும் 500Nm டார்க் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் இதை முன்பு குறிப்பிட்டது போன்று வெளியாகும் என்று தெரிகிறது. அதாவது 3.2 லிட்டர் இன்ஜின்களுடன் 197bhp மற்றும் 470Nm டார்க் கொண்டுள்ளது.

You May Like:ரெனால்ட் டஸ்டர் AMT விலை குறைந்தது ; இப்போது விலை ரூ. 12.10 லட்சம்

காரின் வெளிப்புற அப்டேட்களாக, முன்புறத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட கிரில், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட்கள், மற்றும் மாற்றியமைக்கப்பட பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்த காரில், அலாய் வீல்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். தாய்லாந்து ஸ்பெக் கொண்ட கார்களின் கேபின் டிசைன்கள், வெளியேறும் மாடல்களை போன்றே இருக்கும். தாய்லாந்தில் முழு பிளாக் இன்டீரியர்களுடன் வெளியானது அதே ஸ்பெக் இந்தியாவில் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த காரில் இடம் பெற்றுள்ள வசதிகளாக, கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், காலால் இயக்கும் ஆற்றல் கொண்ட டைல்கேட் மற்றும் தானியங்கி அவசரகால பிறேகிங் சிஸ்டம், முன்புற மோதலை அறிவிக்கும் வார்னிங் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டயர் பிரசர் மானிட்டரிங் மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் போர்டு SYNC 3 இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம் ஆப்சனலாக இருக்கும்.