வெளியானது 2019 ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர்

2019 Ford Explorer

புதிய தலைமுறை ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி-கள் உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகியுள்ளது. இந்த கார்கள் கடந்த 14 முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ள டெட்ராய்ட் மோட்டார் ஷோ காட்சிக்கு வைக்கப்பட்டது. அதிகார்பூர்வ அறிமுகத்திற்கு முன்பு, ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தினர், இந்த் கார் குறித்த படங்களை வெளிட்டனர். இதில், காரின் டிசைன் மற்றும் இன்டீரியர் தகவல்கள் வெளியானது. இந்த கார்கள் நான்கு வகைகளில் – XLT லிமிடெட், லிமிடெட் ஹைபிரிட், ST மற்றும் பிளாட்டினம் வகைகளில் வெளியாக உள்ளது. புதிய ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் 2020 கார்கள் அதிக திறன், அதிக ஆற்றல் மற்றும் அதிக இட வசதிகளுடன் இருக்கும்.

2019 Ford Explorer

You May Like:நிசான் கிக்ஸ்-ஐ புக்கிங் செய்து உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட்டை இலசமாக பெறுங்கள்

அமெரிக்க மார்க்கெட்டில், புதிய ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் 2020 கார்கள் இரண்டு வகை பவர்டிரெயின் ஆப்சன்களில் – 3.0L டர்போசார்ஜ்டு எக்கோபூஸ்ட் V6 மற்றும் டூயூன் செய்யப்பட்ட 2.3L எக்கோபூஸ்ட் கொண்டதாக இருக்கும். இதில் முதலில் உள்ளவை 350bhp, இரண்டாதாக உள்ளது 300bhp ஆற்றலையும் உருவாக்கும். இந்த எஸ்யூவி-க்கள் FWD சிஸ்டம் மற்றும் புதிய நிலப்பரப்பு மேலாண்மை சிஸ்டம்களுடன் வெளியாக உள்ளது. இவை, நார்மல், எக்கோ, ஸ்போர்ட், டிரைல், சிலிப்ப்ரி மற்றும் டோ/ஹவுல் என ஆறு டிரைவிங் மோடுகளை கொண்டதாக இருக்கும். டிரான்ச்மிஷ்னை பொருத்தவரை இந்த கார்கள் முற்றிலும் புதிய 10 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

2019 Ford Explorer Dashboard

You May Like:அறிமுகமானது ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் மாடல் விலை ரூ.12.75 லட்சம்

இது மட்டுமின்றி 8-இன்ச் டிஜிட்டல் டச்-ஸ்கிரீன்களுடன் SYNC 3, போர்டுபாஸ் கனெக்ட் மற்றும் 10 டிவைஸ்களை இணைக்கும் அளவிலான வை-ஃபை சர்விஸ்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இதில் ஃபோர்டு நிறுவன பைலட்360 சூட்களுடன் டிரைவர் அசிஸ்ட் டெக்னாலஜியையும் கொண்டிருக்கும். இது ப்ரீ-கொலிசன் அசிஸ்ட்களுடன் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேகிங், பாதசாரிகளை அறிந்து கொள்ளும் சிஸ்டம், முன்புற மோதுவதை அறிவிக்கும் வார்னிங் மற்றும் டைனமிக் பிரேக் சப்போர்ட் போன்றவைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

You May Like:மகேந்திர எக்ஸ்யூவி 300-களுக்கான புக்கிங் தொடங்கியது

பாதுகாப்பு வசதிகளாக இதில் பிளைன்ட் ஸ்பாட் இன்பர்மேஷன் சிஸ்டம்களுடன் கிராஸ்-டிராபிக் அலர்ட், ரியர் வியூ கேமராக்களுடன் பில்ட்-இன் லென்ஸ் கிளினர், லேன் கீப்பிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்கள் மற்றும் ஆட்டோ ஹைபீம்கள் போன்றவை உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்டலிஜென்ட் அடப்டிவ் குரூஸ் கண்ட்ரோல்களுடன் ஸ்பீட் சிக்னல்களை அறிந்து கொள்ளும் வசதிக்கும் இதில் உள்ளன.

2019 Ford Explorer Rear

You May Like:வெளியானது புதிய 2019 லம்போர்கினி ஹர்யாகன் EVO

ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் சிக்காகோவோல் உள்ள தயாரிப்பு ஆலையில், புதிய ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் 2020 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி-கள் இந்தாண்டு கோடை காலத்தில் அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது.