2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்

2019 Honda Civic Launched In India

முற்றிலும் புதிய 2019 ஹோண்டா சிவிக் கார்கள் இந்தியாவில் 17.70 லட்ச ரூபாய் முதல் 22.30 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா சிவிக் கார்கள் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தனது 10-வது ஜெனரேசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய சிவிக் கார்களில் பெரிளவிலான அப்டேட்களுடன் அதிக திறன் மற்றும் டெக்னாலஜிகளோடு வெளியிட்டுள்ளது. 10-வது ஜெனரேசன் ஹோண்டா சிவிக் கார்கள் முதலில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட்டதுடன், ஓராண்டுக்கு பின்னர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் கார்கள் டீசல் இன்ஜினிலும் கிடைக்கிறது. இதற்கு முன்பு வெளியான ஹோண்டா சிவிக் கார்கள் பெட்ரோல் இன்ஜின்களாக மட்டுமே வெளியானதுடன், டீசல் வகைகள் இந்தியாவில் வெளியான ஹோண்டா நிறுவன கார்களில் இல்லாமலேயே இருந்தது.

ஹோண்டா சிவிக் வகை பெட்ரோல் (CVT மட்டும்) டீசல் (M/T மட்டும்)

V ரூ. 17.70 லட்சம்
VX ரூ. 19.20 லட்சம் ரூ. 20.50 லட்சம்
ZX ரூ. 21.00 லட்சம் ரூ. 22.30 லட்சம்

2019 Honda Civic Launched

You May Like:ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்

முந்தைய சிவிக் கார்களில் இருந்த கோர் ஸ்டிரந்த்கள் 2019 சிவிக் கார்களில் இருக்காது. புதிய சிவிக் ஹோண்டா சிவிக் செடான் கார்களில், பார்த்த உடன் கவர்ந்து இழுக்கும் புதிய டிசைன்களுடன் உறுதியான முன்புற தோற்றதுடன் ஆங்குலர் பம்பர் மற்றும் முற்றிலும் புதிய LED ஹெட்லேம்ப்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த காரின் ரியர் ஸ்டைல்கள் முழுவதும் புதிய C-வடிவிலான டைல்லைட்கள் மற்றும் பாஸ்ட்பேக் ரூப்லைன்களுடன் பின்புற பகுதியை கவர் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய சிவிக் கார்களில் அழகான லுக்குடன் சாலையில் செல்லும் போது சிறப்பாக பயணிக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது. புதிய சிவிக் கார்களில் ஸ்டைலான டூயல் டோன் 5-ஸ்போக் 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், சிலிக் ORVM-கள் மற்றும் சுறாமீன்-முள் போன்ற வடிவம் கொண்ட ஆண்டனா போன்றவை இந்த காரை ஒரு சுறா மீன் போன்ற தோற்றத்துடன் காட்டுகிறது.

2019 ஹோண்டா சிவிக் கார்கள், 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களை கொண்டிருகிறது. இந்த சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்.

2019 Honda Civic India

You May Like:மாருதி சுஸுகி வேகன்ஆர் S-CNG ரூ. 4.84 லட்ச விலையில் அறிமுகமானது

மற்ற முக்கிய வசதிகளாக, 2019 ஹோண்டா சிவிக் கார்கள், குரூஸ் கண்ட்ரோல், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் சீட்கள், எலக்ட்ரிக் சன்ரூப், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் கீ இன்ஜின்களும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இதில் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் டிஜிட்டலாக இருப்பதுடன், 7-இன் யூனிட்டாகவும் இருக்கும். இதுமட்டுமின்றி இந்த காரை புஷ்-பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்யும் சிஸ்டமும் இதில் உள்ளது.

புதிய 2019 ஹோண்டா சிவிக் கார்கள், 6 ஏர்பேக், ABS, EBD, அஜைல் ஹாண்ட்லிங் அஸிஸ்ட், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட்களுடன் இந்த வகை கார்களில் முதல் முறையாக லேன் வாட்ச் கேமரா அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்களையும் கொண்டிருக்கும்.

தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஹோண்டா சிவிக் கார்கள், ASEAN N-CAP பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இந்திய ஸ்பெக் மாடல், இதே கிட்டை பயன்படுத்தும் என்று தெரிகிறது. கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு பின்னரே இந்த மாடல் கார்கள் குறித்து உறுதியாக சொல்ல முடியும்.

2019 Honda Civic On Road Price

You May Like:டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் இந்தியாவில் அறிமுகானது; விலை ரூ. 15.57 லட்சம்

புதிய ஹோண்டா சிவிக் கார்கள், 1.8 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மோட்டார்களுடன், 139bhp ஆற்றலில் 6,500rpm-லும் 174 Nm பீக் டார்க்கில் 4,300rpm-லும் இயங்கும்.

புதிய சிவிக் கார்கள், 1.6 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின்களுடன் முதல் முறையாக 118bhp ஆற்றலில் 4,000rpm-லும், 300 Nm பீக் டார்க்யூ வில் 2,000 rpm-லும் இயங்கும். பெட்ரோல் இன்ஜின்களில் மட்டுமே CVT யூனிட் உள்ளது. டீசல் இன்ஜின்கள் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ARAI சர்டிபிகேட் பெற்றுள்ளதுடன் பெட்ரோல் வகை கார்களின் எக்னாமி அளவு 16.5kmpl-ஆகவும், டீசல் வகை மாடல்களில் எக்னாமி அளவு 26.8 kmpl-ஆகவும் இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஹோண்டா சிவிக் கார்கள், ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலன்ட்ரா, மற்றும் வோக்ஸ்வாகன் ஜெட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.