இந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்

ஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார்களின் விலை 63.17 லட்ச ரூபாயாகும். டீசல் வகை எஃப்-பேஸ் கார்களுக்கான விலை 63.57 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் வகை கார்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

You May Like:வெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது

ஜாக்குவார் நிறுவனம் பெட்ரோல் வகை எஃப்-பேஸ் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே எஃப்-பேஸ் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அசம்பிள் செய்யும் பணிகளை தொடங்கியது. ஆனாலும் முதலில் டீசல் வகைகளை அசம்பிள் செய்தது.

F-Pace petrol

You May Like:புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்

எஃப்-பேஸ் வகை கார்கள் ஜாகுவார் லேண்ட் ரோவர் குடும்பத்தின் ஆறாவது வாகனமாக வெளி வந்துள்ளது. இந்த கார்கள், ஜாகுவார் XE, XF, XJ, டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக்யூ கார்களை போன்று இந்தியாவில் அசம்பிள் செய்யப்பட்டது.

எஃப்-பேஸ் பெட்ரோல் வகைகள், 2 லிட்டர் இங்க்னியும் இன்ஜின்களுடன், 247bhp ஆற்றல் மற்றும் 365Nm டாரக்யூ-வை கொண்டிருக்கும். மேலும் இந்த இன்ஜின்கள் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் ஆல்-வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும். எஃப்-பேஸ் கார்கள் 0-100 kmph வேகத்தை வெறும் 7 செகண்ட்களில் எட்டி விடும். இதுமட்டுமின்றி இந்த காரின் டாப் ஸ்பீட் 217 kmph ஆக ரேட்டிங் செய்யப்பட்டுள்ளது

You May Like:2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம்? உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com

இந்த கார் குறித்து பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ரோகித் சுரி தெரிவிக்கையில், இந்தியாவில் எஃப்-பேஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த கார்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இங்க்னியும் பெட்ரோல் வகை எஃப்-பேஸ், எங்கள் நிறுவனத்தின் முதல் ஜாக்குவார் எஸ்யூவியாக இருக்கும்” என்றார்.

You May Like:உங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்

தற்போது எஃப்-பேஸ் வகை கார்கள் உள்ளூரில் தயாரிக்கப்படுவதால், இதில் எந்த வசதிகளும் குறைவாக இருக்காது. புதிய எஃப்-பேஸ் வகை கார்களில், பார்க் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் கண்டிஷன் மானிட்டர், 360 டிகிரி பார்கிங் சென்சார்கள், அடப்டிவ் LED ஹெட்லைட்கள், வை-பை ஹாட்ஸ்பாட் & புரோ சர்வீஸ் மற்றும் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக, 2019 மாடல் எஃப்-பேஸ் வகை கார்கள், இலுமினேட்டட் மெட்டல் டிரீட்பிளேட்கள், குரோம் சுவிட்ஸ்களுடன் 10-வகை சீட்கள், ஸுடி துணியுடன் கூடிய ஹெட்லைனர் மற்றும் பிரைட் மெட்டல் பெடல்களும் பொருத்தப்பட்டுள்ளன.