2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களுக்கான புக்கிங் எண்ணிக்கையில் 12,000-த்தை கடந்தது

Maruti Suzuki Wagon R 2019

புதிய 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள் இந்தியாவில் கடந்த 14ம் தேதி வெளியானது. ஏற்கனவே இந்த கார்களுக்கான புக்கிங் 12,000-த்தை கடந்து விட்டதாக கார் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள் அதிகாரபூர்வமாக நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் 4.19 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார்களுக்கான புக்கிங் இந்த மாத துவக்கத்தில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த கார்களை புக்கிங் செய்ய 11,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்த கார் தயாரிப்பு நிறுவனம், ஏற்கனவே இந்த கார்க்ளுகான புக்கிங் 12,000-த்தை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளது.

2019 Maruti Suzuki Wagon R Bookings

You May Like:2019 புதிய நிசான் கிகஸ் ரூ. 9.55 லட்ச விலையில் இந்தியாவில் அறிமுகமானது

புதிய மாருதி சுசூகி வேகன் ஆர்கள் LXI, VXI மற்றும் ZXI என மூன்று வகைகளிலும், 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்சன்களிலும் கிடைக்கிறது. மேலும் ஆப்சனாக மெனுவல் அல்லது AGS யூனிட்களும் உள்ளன.

மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள் இந்திய மார்க்கெட்டில் 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் மாருதி நிறுவனம் இதுவரை 2,2 மில்லியன் யூனிட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேகன் ஆர் கார்கள் மூன்றாம் தலைமுறை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக அட்வான்ஸ் வசதிகளை கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கிறது.

Maruti Suzuki Wagon R 2019 Dashboard

You May Like:2019 மாருதி சுசூகி பலேனோ டீசர் வெளியானது; புக்கிங்கும் தொடங்கப்பட்டது

புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள் 5வது தலைமுறை ஹெர்ட்டேக் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது. மேலும் புதிய ஸ்விப்ட் மற்றும் டிசையர்களை போன்று இருந்தாலும், தற்போது பெரியளவிலும், உறுதியாகவும், பல்வேறு உபகரணங்களுடனும் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்த கார், 60mm அதிக நீளத்துடன் 3655mm அளவிலும், 145mm அதிக அகலத்துடன் 1620mm அளவிலும் இருக்கிறது. இதன் வீல்பேஸ்கள் 35mm அதிக நீளத்துடன், 2435mm அளவில் இருக்கும்.

Maruti Suzuki Wagon R 2019 Interior

You May Like:2019 யமஹா FZ25 மற்றும் ஃபஸர் 25 டூயல் சேனல் ABS வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமானது

புதிய வேகன் ஆர் கார்கள் அதிக வசதிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த வசதிகள் ஃப்ளோடிங் டிசைன், ORVMகளுடன் திரும்புவதை அறிவிக்கும் இண்டிகேட்டர்கள், ரியர் விண்ட்ஷீல்ட் வைப்பர் மற்றும் முற்றிலும் புதிய டைல்லேம்ப்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். காரின் கேபினில், ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, கிளைமேட் கண்ட்ரோல், புதிய ஸ்டீயரிங் இதன் மூலம் மியூசிக் மற்றும் டெலிபோனி போன்றவற்றை கட்டுபடுத்தும் வசதிகளை கொண்டிருகிறது. பாதுகாப்பு வசதிகள், டிரைவர் சீட் ஏர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS, முன்புற சீட் பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki Wagon R 2019 Rear

You May Like:2019 யமஹா FZ V3.0 ரூ.95,000 விலையில் இன்று இந்தியாவில் அறிமுகமானது

மேலும் இதில் அதிக ஆற்றல் கொண்ட 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்கள், இவை 83bhp மற்றும் 113Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருக்கும் வகையில் டூயூன் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்கனவே உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 67bhp மற்றும் 90Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருக்கும். இரண்டு மோட்டர்களும் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆப்சனலாக 5-ஸ்பீட் ஆட்டோமேட்டட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது மாருதி நிறுவனத்தால் ஆட்டோ கியர் ஷிப்ட் என்று அழைக்கப்படும் AGC உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Wagon R variant-wise prices

Variant Price (ex-showroom, Delhi)
Wagon R 1.0 LXi Rs 4.19 lakh
Wagon R 1.0 VXi Rs 4.69 lakh
Wagon R 1.0 VXi AMT Rs 5.16 lakh
Wagon R 1.2 VXi Rs 4.89 lakh
Wagon R 1.2 VXi AMT Rs 5.36 lakh
Wagon R 1.2 ZXi Rs 5.22 lakh
Wagon R 1.2 ZXi AMT Rs 5.69 lakh