2019 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 கூபே இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.75 லட்சம்

2019 Mercedes-AMG C 43 Coupe India launch

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 43 கூபே கார்கள், 75 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ்ஷோரூம் விலை) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களின் பேஸ்லிஃப்ட் வெர்சன்கள் சர்வதேச மார்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது, CBU ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 4MATIC கூபே கார்கள், புதிய தலைமுறைக்கான AMG ஸ்டீயரிங் வீல்களுடன் புதிய தலைமுறை டெலிமேட்டிஸ் NTG 5.5-களுடன் 10.25 இன்ச் உயர்ந்த ரெசலுசன் கொண்ட மீடியாகளை டிஸ்பிளே செய்யும் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆடியோ 20 சிஸ்டம்களுடன் நேவிகேஷன்களும் உள்ளது. மேலும் இந்த காரில், கார் தயாரிப்பாளர்கள் 64 கலர் அம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் மேம்பாடுகளையும் செய்துள்ளனர். இதில் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியும் உள்ளது.

You May Like:2019 மசெராட்டி குவாட்ரோபோர்ட் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.1.74 கோடி

கூடுதலாக, 2019 சி43 4MATIC கூபே கார்களில் மல்டிபீம் எல்இடி ஹெட்லேம்களுடன் அடப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் பிளஸ், ரெட் கலர் சீட் பெல்ட்கள், அழகிய சன்ரூப் மற்றும் 18 இன்ச் AMG 5-ஸ்போக் லைட் அலாய் வீல்களும் உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட புதிய ஏஎம்ஜி சி43 4MATIC கூபே-களுடன் கம்பெனியின் டிசைனோ பிளாட்பார்மில் தயாரித்துள்ளது.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் சி43 எஎம்ஜி கூபே கார்கள் 3.0 லிட்டர் V6 பிடர்போ இன்ஜின்களுடன், 9 ஸ்பீட் எஎம்ஜி ஸ்பீட்ஷாப்ட்கள் ஆட்டோமேடிக் டிரான்மிசன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை 384.66bhp ஆற்றலில் 6.100rpm மற்றும் 520Nm-ல் 2,500-5,000rpm-லும் இயங்கும். இந்த கார்கள் 0-100 km/h வேகத்தை 4.7 செகண்டுகளில் எட்டிவிடும். மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் எலக்டிரானிக் முறையில் 250 km/h-ஆக கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

2019 Mercedes-AMG C 43 Coupe Price

You May Like:இப்போது சந்தா அடிப்படையில் கிடைக்கிறது ஹூண்டாய் கார்கள்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்டின் ஸ்வ்வெக் கூறுகையில், இந்தியாவுக்கான ஏஎம்ஜி தயாரிப்பு திட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த காரின் செயல்திறன் 43,45,63 மற்றும் GT ரேஞ்ச் அடிப்படையிலேயே உள்ளது. இந்த காரின் ரெஸ்பான்ஸ் ரேஞ்ச் ஏஎம்ஜி GLE 43 அறிமுகம் செய்தது முதல் சிறப்பாக உள்ளது. இன்று நாங்கள் மற்றொரு காரான 2019 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 கூபே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

You May Like:ஹார்லி-டேவிட்சன் 48 ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைடு ஸ்பெஷல் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.10.98 லட்ச ரூபாய் முதல்

மேலும் பேசிய அவர், வாடிக்கையாளர்களின் டிமாண்டை பொறுத்து, இந்த வகை கார்களை புதியதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளோம். புதிய வரவாக வந்துள்ளது 2019 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 4MATIC கூபே கார்கள் 2 கதவு கொண்ட கூபே டிசைன், ஸ்போர்ஸ் வசதிகளுடன் மற்றும் திரிலிங் செயல்திறன்களுடன் அட்ரியன்ல் ஒவ்வொரு முறையும் வீல்களை தாண்டி ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். குறிப்பாக இளைய தலைமுறை டிரைவர்களுக்காகவே இந்தியாவில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த காரின் டிரைவிங் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்பதை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உறுதியாக தெரிவித்து கொள்கிறது என்றார்.