வெளியானது 2019 பார்ஸ்ச் மெக்கன் பேஸ்லிப்ட் வெளியீடு

Porsche Macan Facelift Tamil News

பார்ஸ்ச் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட பார்ஸ்ச் மெக்கன்-ஐ சீனாவில் வெளியிட்டது. இந்த புதிய மெக்கன் பேஸ்லிப்ட்கள், மாற்றியமைக்கப்பட்ட ஸ்டைல்களுடனும், புதிய தொழில்நுட்பத்திற்கு பொருந்தும் வகையிலும் இருக்கும்.

இந்த புதிய பேஸ்லிப்ட்கள், மறுமுறை வடிவமைக்கப்பட்ட பிரண்ட் பம்ம்பர், புதிய LED புராஜெட்க்டர் ஹெட்லைட்கள் மற்றும் வால் பகுதி மற்றும் லைட்கள் இடையே முழு அகலம் கொண்ட LED ஸ்டிரிப்கள்,  இதுமட்டுமின்றி புதிதாக 20 இஞ்ச் மற்றும் 21 இஞ்ச் அலாய்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் உட்பகுதியில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் மற்ற புதிய மாடல்களில் உள்ளதை போன்று போர்ட்ச்ஸ் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில் பெரியளவிலான 11.0 இஞ்ச் ஸ்கிரின், தற்போது உள்ள 7.0 ஸ்கிரினை ஒப்பிடும் போது இது பெரியளவில் உள்ள ஸ்கிரின் ஆகும்.சென்ட்ரல் ஏர் வெண்ட்ஸ்-களின் இடம் மாற்றியக்கப்பட்டுள்ளது, இது மட்டுமின்றி உள்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில், அப்சன்லாக GT ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், “ஸ்போர்ட்ஸ் ரெஸ்பான்ஸ் பட்டன்”- உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மெக்கன்-னில் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி உள்ளதாக தெரிவித்துள்ள கார் தயாரிப்பாளர்கள், மெக்கன்-னை வழக்கமான கனெக்ட் பிளஸ் மாடுலில் கனெக்ட் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். இது ரியல்-டைம் தொகுப்பு சார்ந்த போக்குவரத்து த்கவ்ள்க்ளுக்கு ஆதரவாக இருக்கும். இந்த தகவல்கள் ‘Here’ என்ற மேப்பிங் நிறுவனம் மூலம் பெறப்படுகிறது. இந்த நிறுவனம் ஆடி நிறுவனத்தின் VW குழும பிராண்ட்டுக்கு சொந்தமான நிறுவனமாகும்.

இதுமட்டுமின்றி பார்ஸ்ச் நிறுவனம், தங்கள் கார்களில் வழக்கமான டிரைவர் அசிஸ்டன்ஸ் செட்அப்-பை இணைத்துள்ளது. இது டிராபிக் ஜாம் அஸிட் பங்ஷனையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது அதிவேக கட்டுபாடு மற்றும் குறிப்பிட்ட லேன்-களில் பயணிக்க அறிவுறுத்தும் அசிஸ்ட் ஆகியவைகளை பயன்படுத்துகிறது. இந்த அசிஸ்ட்கள் மூலம்  37mph வரை வேகத்தில் ஓரளவு தன்னியக்க ஓட்டுநர் திறன் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள டர்போ-சார்ஜ்டு 3.6 லிட்டர் V6-கள் மெக்கன் எஸ், மெக்கன் GTS மற்றும் மெக்கன் டர்போ ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு, பார்ஸ்சுக்கும் ஆடிக்கும் இடையே உள்ள பொறியியல் கூட்டுத்தளத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு V6 என்ஜின்களை பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் வைப்ரன்ட்கள் பார்ஸ்சு கென்யனில் உள்ளதை போன்று காணப்படும். மெக்கன் எஸ்-களில் 3.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6 மற்றும் 340hp திறன் ஆகியவையே, இன்றைய 3.6 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6-ல் இருக்கும். இதே யூனிட்கள் எதிர்காலத்தில் மெக்கன் GTS பொருத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தற்போதுள்ள 380hp என்ஜினில்  20hp உயர்த்தப்பட்டு, 400hp வரை உந்தும் திறன் கொண்டதாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கன் டர்போ, 2.9 லிட்டர் டர்போ-சார்ஜ்டு V6-ஐ பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. புதிய யூனிட்கள் 250hp-ல் இருந்து தற்போதைய மெக்கன்-களில் காணப்படுவது போன்று 420hp என்ஜினாக மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை கூறியுள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் மெக்கன் டர்போ எஸ், 420hp திறன் கொண்டதாக தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.

பல சந்தைகள் வலுவான விற்பனை அனுபவித்த போதிலும்,  பார்ஸ்ச் நிறுவன தலைவர் ஆலிவர் ப்ளூம் சமீபத்தில் வெளியிட்ட கருத்தில், இருந்து மெக்கன் லைன்அப்களில் டீசல் என்ஜின்கள் முழுவதுமான நிறுத்தப்படும் என்று தெரிகிறது. இருந்தபோதும், பார்ஸ்ச்  நிறுவனம், டீசல் மெக்கன்களை தொடர்வே முடிவு செய்துள்ளது. ஆடி நிறுவனத்துடன் சட்ட வழக்குகள் உள்ளதால், மெக்கன் எஸ் டீசல் அறிமுகம் செய்வதை, பார்ஸ்ச் நிறுவனம் தாமதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தங்கள் பிளாட்பார்மில் உள்ள அடிப்படை பொறியியல் கட்டுப்பாடுகள் காரணமாக ஹைபிரிட் டிரைவ் டிரயன்களை தானாக  தயாரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்பு ஆடி Q5 உடன் பகிர்ந்து கொண்டு தயாரித்தது. ஆனாலும் போதுமான அளவு கொண்ட பேட்டரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆடி Q5 உடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்தியது.

மெக்கன் கியர்பாக்ஸ்களில் எந்த மாற்றும் செய்யப்படவில்லை, அனைத்து என்ஜின்களும் செவன்-ஸ்பீடு டுயல் கிளாட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஸ்டியரிங் வீல்-ம்வுண்டட் ஷிப்ட் பெடல்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி மல்டி-பிளேட்-கிளட்ச் போர்-வீல்-டிரைவ் சிஸ்டம் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

மெக்கன் டிரைவிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள், எதிர்வரும் பேஸ்லிப்ட்-களிலும் மாற்றம் செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

பார்ஸ்ச் நிறுவன வரலாற்றில், நிறுவனம் தயாரித்த மாடல்களில் அதிகமாக விற்பனையாகும் மாடலாக மெக்கன் SUV இருந்து வருகிறது. இருந்த போதும், பேஸ்லிப்ட் மாற்றங்களால் பிரிமியம் SUV கிளாஸ்  Q5, பிஎம்டபிள்யூ X4, ஜாகுவார் எஃப்-பேஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே கார்களுடன் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது.

மெக்கன் கார்கள் இந்தியாவில் ரூ.80.38 லட்சம் முதல் ரூ.1.52 கோடி வரையிலான  (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை)  விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மெக்கன், 252hp, மெக்கன் பெட்ரோல் மற்றும் 440hp மெக்கன் டர்போ என இரண்டு வைப்ரன்ட்களில் கிடைக்கிறது.