2019 ரெனால்ட் க்விட் ரூ. 2.66 லட்ச விலையில் அறிமுகமானது

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவுக்கான மேம்படுத்தப்பட க்விட் ஹாட்ச்பேக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.66 லட்ச ரூபாயில், தற்போது வெளியேறும் மாடல்களின் விலையை போன்றே இருக்கிறது. (இதில் டாப்-ஸ்பெக் 1.0 கிளைம்பர் AMT கார்களின் விலை 4.63 லட்ச ரூபாயாகும்). 2019 க்விட் கார்களில் இடம் பெற்றுள்ள வசதிகளாக மேம்படுத்தப்பட்ட இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் கூடுதலாக பாதுகாப்பு கிட்களும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து டீலர்கள் வெளியிட்ட அறிக்கையில், ரெனால்ட் நிறுவனம் கார்களின் விலையை வரும் மார்ச் மாதம் முதல் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்கள் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்களுடன், ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, தற்போது இந்த சிஸ்டம், ப்ளுடூத் வழியாக வீடியோ பிளேபேக் வசதியும், புஷ்-டு-டாக் வசதியும் இடம் பெற்றுள்ளது. இதில் USB சார்ஜர்களுடன் அதிவேக சார்ஜிங் பங்கஷனும் இருக்கும் படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2019 Renault Kwid launched in India

You May Like:2019 மாருதி சுசூகி பலேனோ RS பேஸ்லிஃப்ட் விலை ரூ. 8.76 லட்சமாக அறிவிப்பு

பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்களில் இடம் பெற்றுள்ள பாதுகாப்பு வசதிகளாக, டிரைவர் ஏர்பேக், EBD உடன் கூடிய ABS, பயணிகள் சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஸ்பீட் அலர்ட் சிஸ்டம்களுடன் வழக்கமாக உள்ள அனைத்து வகைகளிலும் இடம் பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ள விதிகளுக்கு உட்பட்டே இருக்கும்.

க்விட் கார்களில் எந்தவித மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இந்த கார்களின் 54hp, 0.8 லிட்டர் மற்றும் 68hp, 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்சன்களும் கிடைக்கும். இரண்டு இன்ஜின்களும் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். மேலும் 1.0 லிட்டர்களில் கூடுதல் ஆப்சனாக 5 ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் கிடைக்கும்.

ரெனால்ட் க்விட் கார்கள் மாருதி சுசூகி ஆல்டோ மற்றும் டட்சன்ஸ் ரெடிகோ கார்களுக்கு போட்டியாக இருக்கும். இரு கார்களும் விரைவில் அறிமுகமாக உள்ளன. இதில் ரெடிகோ கார்களில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மாருதி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ காரை வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.