வெளியானது 2019 டாட்டா ஹாரியர் கார்களின் இன்டீரியர் டீசர்

2019 Tata Harrier Interior

தற்போது வெளியாகியுள்ள டாட்டா ஹாரியர் கார்களின் டீசர் வீடியோவில், டூயல்-டோன் டாஷ்போர்டுகளுடன் 8.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது.

Tata-Harrier-in-Red

You May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பானிகேல் V4R; விலை ரூ. 51.87 லட்சம்

இந்திய ஆட்டோ நிறுவனமான டாட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவிகள், ஹூண்டாய் கிரட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும். தயாரிப்பு நிலையில் டாட்டா ஹாரியர் கார்களுக்கான இன்டீரியர் தற்போது வெளியாகியுள்ளது. டாட்டா நிறுவனம் தற்போது இந்த காரின் இன்டீரியர் குறித்த டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Tata-Harrier-in-Orange

You May Like:ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா

இந்த வீடியோவில் இருப்பது போன்றே, அடுத்த மாதம் வெளியான உள்ள 2019 மாடல் காரின் இன்டீரியர் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. புதிய டாட்டா ஹாரியர் முதலில் வரும் டிசம்பர் மாத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிமுகம் வரும் 2019ம் ஆண்டு ஜனவரில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata-Harrier-in-White

You May Like:ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

இந்த டீசர் வீடியோவில், புதிய டாட்டா ஹாரியர் கார்களின் டாஷ் போர்டுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இதில், 8.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில், டூயல் டோன் பிஷின்ஸ்களுடன் பிரவுன் நிறத்தில் டாஷ் போர்டு இடம் பெற்றுள்ளது. மேலும் மூன்று ஸ்போக் மல்டி பங்க்ஷன் கொண்ட ஸ்டீர்யரிங் வீல்களுடன் ஸ்போர்ட்ஸ் லூக்கில் புதிய டிசைனின் உருவாக்கப்பட்டுள்ளது.

Tata-Harrier-in-Red-Rear

You May Like:இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா

மேலும் டாஷ்போர்டில் இடம் பெற்றுள்ள பட்டன்களுக்கும் குறைவாகவே உள்ளது. இந்த பட்டங்கள் மூலம் கிளைமேட்டை கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும். மேலும், இந்த டீசரில், குரோம் சுற்றப்பட்ட ஏர்-கான் வென்ட்களும் உள்ளதை காட்டுகிறது.

https://www.autonews360.com/wp-content/uploads/2018/11/Tata-Harrier-in-Orange-Rear.jpg

You May Like:லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது

டாட்டா மோட்டார் ஏற்கனவே, ஹாரியர் கார்களுக்கான பவர்டிரெயின்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காம்பெக்ட் எஸ்யூவிகள் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இஞ்சின்களுடன், Kryotec பேஜ்ட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் ஜீப் காம்பஸ் போன்ற ஆற்றலில், அதாவது 140bhp ஆற்றலில் இயங்கும். ஹாரியர் கார்களின் ஆற்றல் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டிரான்மிஷன் ஆப்சன்களாக, 6-ஸ்பீட் மெனுவல் இடம் பெற்றிருக்கும். ஆட்டோமேடிக் வெர்சன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Tata-Harrier-in-White-Rear

You May Like:ஜாவா மோட்டார் சைக்கிள் பற்றி முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங் ஏற்கனவே இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களிடம் தொடங்கப்பட்டு விட்டது. 30,000 ரூபாய் செலுத்தி இந்த கார்களை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த கார்களின் விலை 12 முதல் 16 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ் ஷோரூம் விலை). ஹாரியர் கார்களின் டெலிவரி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத்தில் தொடங்கும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.