2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 27.83 லட்சம்

2019 Toyota Fortuner Launched in India

டொயோட்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக அதன் அதிக அளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் வகைகள் 27.83 லட்ச ரூபாய் முதல் தொடங்கும். அதாவது அடிப்படை மாடல் 4×2 டீசல் வகைகள் இந்த விலையில் கிடைக்கும். இதை தொடர்ந்து டாப் எண்ட் மாடல்கள் 33.60 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும் இவை ஆட்டோமேடிக் வகையாக இருக்கும். இந்த விலைகள் அனைத்து எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டொயோட்டா நிறுவனம் தனது டீசல் கார் வகைகளில் ஃபார்ச்சூனர்களில் மட்டுமே இன்ஜினை மேம்படுத்தியுள்ளது. இருந்த போதும் பெட்ரோல் 2.7 எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் இன்டீரியர்களில் மட்டுமே மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவை மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.

2019 Toyota Fortuner SUV

You May Like:மாருதி சுசூகி செலீரோ மற்றும் செலீரோ எக்ஸ் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது

2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் தற்போது அழகிய இன்டீரியர் அப்ஹோலஸ்டிரிகளுடன் டீசல் வகைகளாக கிடைக்கிறது. இதில் உள்ள சீட்கள் தற்போது அழகிய லெதர்களுடன் ஃபார்ச்சூனர் பேட்ஜ் எம்போஸ் செய்யப்பட்டுள்ளது. புதிய 2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் வெப்பத்தை தாங்கும் தன்மையுடன், குறிப்பாக நாட்டின் வட, வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் வெப்பநிலையை தாங்கும் தன்மையுடன் இருக்கும்.

2019 Toyota Fortuner Dashboard

You May Like:ஜீப் காம்பஸ் ஸ்போர்ட்ஸ் பிளஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ 15.99 லட்சம்

2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் டீசல் கார்களில் எந்த மெக்கானிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த கார்கள் 2.8 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் மோட்டார்களுடன் 175bhp ஆற்றலில் 3400rpm-லும் பீக் டார்க்கான 420Nm-ல் 1400 முதல் 2600rpm-லும் இயங்கும். இந்த புதிய இன்ஜின் மெனுவல் டிரான்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2019 Toyota Fortuner Rear

You May Like:வோக்ஸ்வாகன் போலோ, அமீயோ, வெண்டோ பிளாக் அண்ட் ஒயிட் எடிசன் அறிமுகமானது

இதே இன்ஜின்கள், ஆட்டோமேடிக் டிரான்மிஷன் உடன் இணைக்கும் போது, 30Nm டார்க்களிலிருந்து 450 Nm டார்க்க்கு இடைப்பட்ட அளவில் 1600rpm மற்றும் 2400rpm-களுக்கு இடைப்பட்ட அளவில் இயக்கும் வகையில் டூயூன் செய்யப்பட்டுள்ளது. 2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் வகை கார்கள், மார்க்கெட்டில் இருக்கும் கார்களின் விற்பனையில் 70 சதவிகிதத்தை எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.