வெளியானது அடுத்த தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா

2020 Hyundai Sonata

தற்போது நடந்து வரும் 2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை கவர ஹூண்டாய் நிறுவனம் தனது எட்டாவது தலைமுறை சொனாட்டா செடான்களை காட்சிக்கு வைத்துள்ளது. 2020 ஹூண்டாய் சொனாட்டா கார்களின் புகைபடங்கள் அடுத்த மாதம் நடக்க உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோவில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முற்றிலும் புதிய மாடல்களாக அறிமுகமாக உள்ள இந்த ஹூண்டாய் சொனாட்டா கார்கள், கடந்த ஆண்டு நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட லீ பில் ரெஃப் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உறுதியான ஸ்போர்ஸ் லைன்களுடன், எம்போஸ் செய்யப்பட்ட கிரில்களுடன் இதற்கு முந்தைய மாடல்களை விட அதிக டெக்னாலஜி வசதிகளுடன் வெளியாகியுள்ளது.

2020 Hyundai Sonata

You May Like:2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்

புதிய கார்கள் அதிகளவிலான விகிதங்களில், அதிக கேபின் ஸ்பேஸ்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் பிரபலமாக இருந்து வரும் ஹூண்டாய் சொனாட்டா கார் மாடல்களை அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். இதே போன்று எட்டாம் தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார்களும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வர உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார்களின் கான்செப்ட்கள், புதிய மாடல் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், 2020 சொனாட்டா கார்கள் புதிய ஸ்டைல்களுடன் ‘சென்சேவ்வஸ் ஸ்போர்ட்ஸ்னஸ்’ என்ற அடைமொழியுடன் வெளியாகிறது. இவை நான்கு டோர் கொண்ட கூப் மாடல்களாக இருக்கும். மேலும் இதில் பெரியளவிலான கேச்காட் கிரில், எம்போஸ் செய்யப்பட்ட அப்-பிராண்ட்களுடன் சிலிம்மான ஹெட்லைட் மற்றும் LED-களும் பொருத்தப்பட்டுள்ளது.

Hyundai Le Fil Rouge Concept

You May Like:மாருதி சுஸுகி வேகன்ஆர் S-CNG ரூ. 4.84 லட்ச விலையில் அறிமுகமானது

சொனாட்டா கார்களில் ஹிட்டன் லைட்டிங் லேம்ப்கள், கிரானிக் பொருட்களுடன் சுவிட்ச் ஆப் செய்வதும், லிட் செய்தால் தானாகவே எரியும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் டிசைன் சென்டர் தலைவர் மற்றும் சீனியர் விபி சாங் யப் லீ தெரிவிக்கையில், குறைக்கப்பட்ட ஓவர்ஹேங், ஸ்லோபிக் ரூப்லைன் மற்றும் லோ டேக் லிட் போன்றவை சரியான பேலன்சில் உருவாக்கப்பட்டது என்ற பீல்-ஐ உங்களுக்கு அளிக்கும். மேலும் ஹூண்டாய் சிக்னேச்சர் குரோம் அசெட்களுடன் தற்போது நீண்ட காலத்திற்கும் மாறாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய ஹூண்டாய் சொனாட்டா கார்கள் 45mm நீளமும், 25mm அகலமும் கொண்டிருப்பதுடன், இதன் வீல் பேஸ் 35mm அளவில் இருப்பதுடன், கேபினில் இன்னும் தாராளமாக ரூம் ஸ்பெக்ஸ் இருக்கும் வகையில் உள்ளது. இதில் உள்ள அல்ட்ரா-ஓயிடு டைல்லைட்கள் காரை மேலும் அகலமானதாக உணர செய்கிறது.

Hyundai Sonata

You May Like:ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்

இந்த காரின் கேபினில் முழுமையாக அப்கிரேட் மற்றும் ஸ்போர்ட்ஸ் வசதி கொண்ட ஏர்கிராப்ட்களை போன்ற டிசைனில் விங் வடிவில் டாஷ்போர்டுகளும் இருக்கும். டாஷ் மற்றும் HAVC வென்ட்கள் கம்ப்ரஸ் செய்யப்பட்ட உயரத்தில் பொருத்தப்பட்டு, காரை குறைந்த எடை கார் என்ற பீல்-ஐ உருவாக்க செய்கிறது. பெரியளவிலான டச் ஸ்கிரீன்களை ஹூண்டாய் நிறுவனம் தொடர்ச்சியாக தவிர்த்து வருகிறது. இது கார் ஒட்டி செல்பவர்களுக்கு கவன சிதறலை உண்டாக்கும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

8th Generation Hyundai Sonata

You May Like:2019 ஜெனிவா ஷோவில் வெளியானது டாட்டா பஸ்ஸார்ட் – ஹாரியர் ஏழு சீட்டர்

இருந்த போதும் இதில் சிறியளவிலான இரண்டு டிஸ்பிளேகளுடன் தனித்துவமிக்க எஸ் கர்வ் ஒன்று உள்ளது. இந்த கார்களில், மூட் லைட்டிங், புதிய பேப்பரிக் மற்றும் லெதர் அப்ஹோலஸ்ட்ரி சாய்ஸ்கள், மேலும் புதிய காரில், இந்த வகை கார்களின் முதல் முறையாக, நியர் பீல்ட் கம்யுனிகேஷன் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜியில் உள்ள ஸ்மார்ட்கீ-யை பயன்படுத்தி உங்கள் காரை லாக் செய்யவோ அல்லது ஆன்லாக் செய்யவோ முடியும்.
இந்த காரின் பிளாட்பாரம், பவர்டிரெயின் மற்றும் ஆற்றல் குறித்த தகவல்கள் அடுத்த மாதம் இந்த மாடல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது, வெளியிடப்படும் என்று தெரிகிறது.