விரைவில் டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் இணைப்பு: ரவி சங்கர் பிராசாத் தகவல்

Union Minister Ravi Shankar Prasad

106வது இந்திய அறிவியில் மாநாட்டில், பேசிய இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மோட்டார் வாகனங்களுக்கான லைசென்ஸ்களுடன் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.

Driving Licence Aadhaar Link

வாகனங்களுக்கான டிரைவிங் லைசென்ஸ்களுடன் ஆதார் கார்டை இணைப்பதை இந்திய அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய போது இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய அவர், “ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணையும், வாகன ஓட்டுநர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

தற்போது விபத்துகளை உண்டாக்கும் நபர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து மாற்று உரிமத்தையும் அவர்கள் பெற்று விடுகின்றனர். இதனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பது எளிதாகி விடுகிறது. ஆனால் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படும் போது சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

அவர் தனது பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. மாற்று ஓட்டுநர் உரிமம் பெற அவர் விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கெனவே ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு புதிய உரிமம் தரக்கூடாது என ஆதார் கார்டை பதிவு செய்துள்ள கம்ப்யூட்டர் எச்சரிக்கும்.

எனவே ஓட்டுநர் உரிமம், ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. நாட்டில் இதுவரை 124 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக இந்தியாவில் லைசென்ஸ் வழங்குவது ஒருங்கிணைப்பு செய்யப்படாத பணியாகவே நடந்து வருகிறது. தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள முறைகள் மூலம் இந்த பணிகள் டிஜிட்டல் மயமாக்கபட உள்ளது. இருந்தபோதும் இந்த பணிகளை முழுவதும் ஒருங்கிணைப்பு செய்ய நீண்ட நாட்கள் ஆகும்.

இதுமட்டுமின்றி, இந்தியா அரசு சார்பில் டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களுக்காக சிறந்த உபகரணங்களை டிரைவிங் பயிற்சி பள்ளிகளில் அமைக்க உள்ளது. மேலும், பல்வேறு முறைகள் டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த முறைகள் கடைபிடித்து லைசென்ஸ் பெறுபவர்கள் திறமையாக டிரைவிங் செய்யும் அளவு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதன் மூலம், இதற்கான முழுமையான பணிகள் இன்னும் இந்தியா முழுவதும் செய்து முடிக்கப்படவில்லை என்று தெளிவாகிறது.