நடிகர் அஜீத்தின் ஆலோசனையில் சாதனை படைத்த சென்னை எம்.ஐ.டி, கல்லூரி மாணவர் குழு

actor ajith drone drone mission

நடிகர் அஜித், தான் நடித்த விவேகம் படத்தில் ட்ரோன் ஒன்றை ரிமோட் மூலம் இயக்கி, ட்ரோன் இயக்குவதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளியுலகுக்கு தெரிய படுத்தினார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
Ajith mentored MIT's UAV team

You May Like:உலகின் அதிவேகமான ஃபெராரி கார் இந்தியாவில் அறிமுகமானது

இயற்கை பேரிடர் சமயங்களில் மக்களை மீட்க உதவ சிறிய அளவிலான ஆளில்லா விமானங்கள் பயன்படுத்த உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. மீட்புப் பணிகள் மட்டுமன்றி ஆராய்ச்சி பணிகளுக்கும் இந்தக் குட்டி விமானங்கள் பயன்படுகின்றன. ஆளில்லா விமானங்கள் உதவியுடன் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் இந்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன.
Mission Daksha

You May Like:ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். கடந்த மே மாதம் இந்த் ‘தக்ஷா’ குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் இணைந்தார். இந்த ‘தக்ஷா’அணி குழுவுக்கு ட்ரோன் தயாரிக்கும் முறைகள் பற்றி நடிகர் அஜித் கற்று கொடுத்ததுடன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்.UAV Medical Express Challenge 2018

You May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியானது. இந்த சாதனையைத் தொடர்ந்து தக்ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

You May Like:தமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு?….முழு விபரம்

இந்த போட்டியில் பங்கேற்கும் ட்ரரோன்கள் வெகு தொலைவில் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் ஒருவருக்கு விரைவில் மருத்துவ உதவி கிடைக்க பறந்து செல்ல வேண்டும். மேலும் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவரிடம் இருந்து அவரது ரத்த மாதிரியை எடுத்து கொண்டு வர இந்த ட்ரோன்களை பயன்படுத்துவார்கள். அந்த ட்ரோன் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தூரம் பறந்து ரத்த மாதிரியை பெற்றுக்கொண்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே பறந்து வர வேண்டும்.
Madras MIT won 2nd

You May Like:விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்

இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது. இந்தப் போட்டியில் தக்ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூஏஎஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது. விமானத்தின் பறக்கும் திறனைப் பொறுத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றுள்ளது.

தக்ஷா குழுவின் ட்ரோன் உலகில் நீண்ட நேரம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் ஆளில்லா ட்ரோன் எனவும் கருதப்படுகிறது. இந்த ட்ரோன் தயாரிக்கும் தொழிற்நுட்பத்தை நடிகர் அஜித்தின் தலைமையில் இயங்கிய குழு இந்திய ராணுவத்திற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சாகசங்களை தக்ஷா படைத்து வருவதால் அஜித்துக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும் வகையில் விருது வழங்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது.