தொடங்கியது முற்றிலும் புதிய மாருதி எர்டிகா அதிகாரபூர்வ புக்கிங்

2018 Maruti Suzuki Ertiga

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்களை இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கான சோதனைகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கார்கள் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்களுக்கான புக்கிங்கை மாருதி சுசூகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த கார்களை வாங்க 11,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ள நிலையில், வரும் 21ம் தேதி இந்த கார்களுக்கான அதிகாரப்பூர்வ விலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய எர்டிகா கார்கள், மாறுபட்ட புதிய கலர் உள்ளிட்ட ஐந்து கலர்களில் வெளியாக உள்ளது. அதாவது, இந்த கார்கள், பெர்ல் மெட்டாலிக் அனுபர் ரெட், மெட்டாலிக் மேகா கிரே, பெர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்ட் ப்ளூ, பெர்ல் ஆர்க்டிக் ஒயிட், மெட்டாலிக் ஸ்ல்கி சில்வர் கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது. எர்டிகா கார்கள் அதிகாரப்பூர்வமாக L,V, Z மற்றும் z+ என நான்கு மாறுபட்ட கலர்களில் வெளியாகும். இதுமட்டுமின்றி இந்த கார்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் முற்றிலும் புதிய பெட்ரோல் இன்ஜின்களை V மற்றும் Z வகைகள் மாருதி சுசூகி நிறுவனம் டிசைன் செய்துள்ளது. இருந்த போதும், இந்த கார்களின் டீசல் வகைகளை ஆட்டோமேடிக் இன்ஜின் ஆப்சன்கள் வெளியிடப்படவில்லை.

All-new Maruti Ertiga

முற்றிலும் புதிய எர்டிகா கார்கள், புதிய ஹார்ட்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் வெளியாகியுள்ள ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் இந்த பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டவையாகும். பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார்கள் நீளம் 99mm மற்றும் அகலம் 5mm கொண்டதாக இருக்கும். காரின் வீல் பேஸ் 2,4740mm அளவில் இருந்தாலும் கேபின் மற்றும் புட் ஸ்பேஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எர்டிகா கார்கள் 7 சீட் கொண்டதாக இருந்த போதும், கடைசி வரிசை பயணிகளுக்கும் போதிய இட வசதி கொண்ட காராக இருக்கும்.

முற்றிலும் புதிய எர்டிகா கார்கள், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களை கொண்டிருக்கும். இது இந்திய மார்க்கெட்டில் வெளியான முற்றிலும் புதிய சியாஸ் கார்களை போன்ற ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும். எர்டிகா டீசல் கார்களிலும், 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி எர்டிகா காரின் உள்பகுதி அதிக வசதி கொண்டதாக இருந்தபோதும், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட SHVS மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இந்த வாகனத்தில் இடம் பெற்று உள்ளதாக என்பது தெரியவில்லை.

புதிய எர்டிகா கார்களின் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்ச ஆற்றலில் 105 PS மற்றும் பீக் டார்க்யூவில் 138 Nm கொண்டதாக இருக்கும். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான கார்களின் இன்ஜின்களும் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். 4-ஸ்பீட் டார்க்யூ கன்வெட்டர் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் ஆப்சன்கள் பெட்ரோல் இன்ஜின்களில் மட்டுமே கிடைக்கிறது.

Ertiga

மாருதி எர்டிகா கார்களின் உட்புறத்தில் அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் கலர் டஷ்போர்டுகளுடன் மரத்தாலான இணைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளது. எர்டிகா கார்களின் விலை 6.4 முதல் 10.8 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மகேந்திரா மராசோ கார்களுக்கு போட்டியாக முற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் இருக்கும்.