அறிமுகமானது ஆடி எலக்ட்ரிக் PB18 இ-ட்ரான் கான்செப்ட் சூப்பர் கார்

Audi PB-18 E-tron Concept Car

ஆடி நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் PB18 ஈ-ட்ரான் சூப்பர் காரை மான்டேரி கார் வீக்கில் அறிமுகம் செய்துள்ளது. மான்டேரி காலிஃப்-ல் உள்ள லாகுனா சேக்க ரேட்ராக்கில் பல்வேறு செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் முழுவதுமான எலெக்ட்ரிக் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audi PB-18 E-tron Concept Car News

You May Like:மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ரெனால்ட் அர்கானா கூபே-கிராஸ்ஓவர்

ஆடி நிறுவனம், கடந்த 2017ல் ஆடி ஆகோன் காரை அறிமுகம் செய்ததை தொடர்ந்து PB18 ஈ-ட்ரான் சூப்பர் கார்களையும் எலெக்ட்ரிக் கான்செப்ட்டிலேயே உருவாக்கியுள்ளது. ஆனால், முழுவதும் ஆட்டோமேட்டிக்காக செயல்படும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நீண்ட தூர பயணத்துக்கான ஆடம்பர வாகனமாகவும், செல்ப்-பிளேயிங் பிசினஸ் ஜெட் போன்று இந்த கார்கள் ரோட்டில் பயணிக்கும். மேலும் PB18 இ-ட்ரான் சூப்பர் கார்களில் ரேஸ்டிராக்கில் பயணிக்க தேவையான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Audi PB-18 E-tron Car

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இதுகுறித்து பேசிய கலிஃப்-ல் உள்ள மலிபுவின் லோஃப்டின் பகுதியில் அமைந்துள்ள ஆடி நிறுவன வடிமைப்பு தொழிற்சாலையின் தலைவர் கேலி புஜின், இந்த காரை ஒட்டி செல்லும் டிரைவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிப்பதுடன், ரேசிங் கார்களான ஆடி R18 ஒட்டி செல்வது போன்ற அனுபவத்தையும் அளிக்கும். இதுமட்டுமின்றி காரின் உள்வடிவமைப்பும், டிரைவர்களுக்கு வசதியாகவே இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் PB18 இ-ட்ரான் சூப்பர் கார்களை தினமும் பயன்படுத்தும் வகையிலும், டிரைவர்களுக்கு மட்டுமின்றி பயணம் செய்யும் பயணிகளுக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Audi PB-18 E-tron Concept Car News

You May Like:ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர் பட தொகுப்பு

ஆடி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக வெளியாகியுள்ள எலக்ட்ரிக் PB18 ஈ-ட்ரான் சூப்பர் கார்கள் சான்பிரான்சிஸ்கோவில் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்த கார்கள் ஜாகுவார் எக்ச்லேன்ட் I பேஸ் மற்றும் டெஸ்லா மாடல் எக்ஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Audi PB-18 E-tron Concept

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இந்நிலையில், PB18 ஈ-ட்ரான் சூப்பர் கார்கள், அகலமாகவும், தட்டையான தோற்றத்திலும் இருப்பதோடு, ஹை-இன்டன்சிட்டி விண்ட் டணல்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை லீ மேன்ஸ் எண்டுரன்ஸ் ரேஸ்களுக்கு முன்பு செய்யப்படும் சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் ஜன்னல்கள் உட்புறமாக மடங்கும் வகையில் இருப்பதோடு, 22-அங்குல வீல்கள் மற்றும் 19-அங்குல கார்பன் பிரேக்குகள் ஆகியவற்றை கொடுள்ளது. இதன் மூலம் இந்த காரை பெரும்பாலும் டிரக்களில் ஒட்டி செல்லாலம் என்ற போதிலும், சாலைகளிலும் ஒட்டி செல்ல ஏற்றதாகவே இருக்கிறது.

Audi PB-18 E-tron Concept Car

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஆடி எலக்ட்ரிக் PB18 ஈ-ட்ரான் சூப்பர் கார்களில் அமைக்கப்பட்டுள்ள டிரைவர் சீட் மற்றும் காக்பிட் ஆகியவை தேவைக்கேற்ப நகர்த்தி கொள்ளும் வகையில் வடிவகைகப்பட்டுள்ளது. இது உள்புறமாக, மோனோகோக் ஷெல்லில் ஒருங்கிணைக்கப்படும், பக்கவாட்டாகப் பிரிக்கப்பட்டும் உள்ளது. இந்த காரில் டிரைவர் மட்டுமே பயணிக்கும் போதும் மோனோகோக் ஷெல்களை நகர்த்தி நடுவில் பொருத்த கொள்ள முடியும். இப்படி பொருத்துவது ரேஸ்டிராக்கில் பயணிக்க மிகவும் பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால், டிரைவர் சீட்கள் மடித்து கொண்டு, பயணிகளுக்கு இடவசதி அளிக்கவும் முடியும்.

Audi PB-18 E-tron News

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஆடி எலக்ட்ரிக் PB18 ஈ-ட்ரான் சூப்பர் காரின் ரியர் பகுதியை பொறுத்தவரையில், தட்டையான ரெட் பேண்ட் லைட்கள் காரின் அகலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது காரின் ஹரிசாண்டல் பாடியை, மிகவும் அழகாக காட்டும். ரியர் டிப்யூசர் ஏர் அவுட்லெட்கள் உயர்ந்த நிலையில் பொருத்தப்பட்டிருந்தாலும், இது மெக்கானிக்கல் முறையில் கீழ்புறமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக ரியர் ஸ்பாயிலர்களும் வெளிப்புறமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Audi Unveils Electric PB18 e-tron

You May Like:$7.8 மில்லியன் விலையில் அறிமுகமானது புகாட்டி டிவோ

காரின் அடிப்புறம் மற்றும் பாடியில், மூன்று அதிசக்தி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மோட்டார் முன்புறத்திலும், இரண்டு மோட்டார்கள் பின்புற பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் 150kW ஆற்றலை முன்புற ஆக்சில்களுக்கும் மற்றும் முன்புற மோட்டார் 450kW ஆற்றலை ரியர் பகுதிக்கும் அளிக்கும், இதன்மூலம் 500kW ஆற்றலை டிரைவர் தற்காலிகாமாக 570kW வரை அதிகரிக்க முடியும். இந்த கார்கள் 2 செகண்டுகளில் 0 முதல் 100km/h (62.1 mph) வேகத்தை எளிதாக எட்டும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Audi PB-18 Car News

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இந்த கார்கள், முழுவதும்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 310 மைல்கள் வரை பயணிக்கும். மொத்தமாக 800 வோல்ட் சார்ஜ்-ஆக 15 நிமிடங்களே போதுமானதாக இருக்கும். தற்போது உள்ள எலெக்ட்ரிக் கார்கள் சார்ஜ் ஆக எடுத்து கொள்ளும் நேரத்தை ஒப்பிடும் போது, இதுவே மிக விரைவான சார்ஜிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த கார்களின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்ற தகவலை ஆடி நிறுவன அதிகாரிகள் உறுதியாக சொல்லவில்லை.