மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு

Navaratri Car Discounts

அக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்படும். இதற்கு கார்கள் விதிவிலக்கு அல்ல, இந்த விழாக்காலத்தை முன்னிட்டு, மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டியோர் கார்களுக்கு 90 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி நிறுவனம் இந்த விழாக்கால சீசனில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4000 ரூபாய் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ராக 50,000 ரூபாய் வரை சலுகை வழங்க உள்ளது.

Navratri Car Discounts upto 90,000

You May Like:விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது

ஹூண்டாய் நிறுவனம், தனது எக்ஸ்சென்ட் கார்களுக்கு 40, 000 ரூபாய் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனசாக 50,000 ரூபாய் வழங்க உள்ளது. இதுமட்டுமின்றி நீங்கள் அரசு அல்லது கார்ப்பரேட் ஊழியர்களாக இருந்தால் கூடுதலாக 5,000 ரூபாய் டிஸ்கவுண்ட் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எலக்டிரா கார்களுக்கு 25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 35,000 ரூபாய் கூடுதல் டிஸ்கவுண்ட் அளிக்க உள்ளது. வெர்னா கார்களை வாங்குபவர்களுக்கு 20 ஆயிரம் வரை சேமிக்கும் வகையில் 20,000 கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனசாக 20,000 ஆயிரம் மற்றும் 20,000 மதிப்பு கொண்ட கூடுதல் டிஸ்கவுண்ட்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம், ஹோண்டா சிட்டி கார்களை வாங்குபவர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனசாக 62,000 ரூபாய் வழங்க உள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்

டொயோட்டா யாரிஸ் கார்களுக்கு 10,000 ரூபாய் மதிப்பு கொண்ட இலவச உதிரி பாகங்கள், ஐந்து ஆண்டு வாராண்டி கிடைக்கும், டொயோட்டா எட்டியோஸ் கார்கள் வாங்கினால் நீகள் 35,000 ரூபாய் வரை சேமிக்கலாம். அதாவது 20,000 கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் 15,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம்.

ஃபோர்ட் ஆஸ்பியர் (பழைய மாடல்) கார்களை வாங்குபவர்களுக்கு 40,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்களுடன் எக்ஸ்சேஞ்ச் போனசாக 40,000 ரூபாய் பெறலாம்.

You May Like:ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ

டாட்டா மோட்டார் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய டிகோர் (பழைய மாடல்) காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 60,000 ரூபாய் வரை சலுகை வழங்க உள்ளது. இதுமட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் போனசாக 20,000 ரூபாய் உடன் கூடுதல் போனசாக 2,500 ரூபாயும் வழங்க உள்ளது.

டாட்டா ஜெஸ்ட் கார்களுக்கு 45,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்களுடன் 25,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறலாம். இதுமட்டுமின்றி அரசு மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு கூடுதல் டிஸ்கவுண்ட்டாக 2,700 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக நிசான் சன்னி கார்களுக்கு 42,00 ரூபாய் கேஷ் டிஸ்கவுண்டுகளுடன் 30,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். மேலும் அரசு மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் வரை கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.