பி.எம்.டபிள்யூ 620டி கிரான் துர்ரிசோ ரூ. 63.90 லட்சம் விலையில் அறிமுகமானது

புதிய என்ட்ரி லெவல் வகையாக வெளியாகியுள்ள 6 சீரிஸ் GT லைன்-அப்களுடன், பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 620டி வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ கார்கள் 63.50 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது.

6GT கார்களில் ஏற்கனவே 630d GT டீசல் ஆடம்பர கார் வகைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்கள் மற்றும் புதிய 620 டி கிரான் துர்ரிசோ ஆகியவை சென்னையில் உள்ள உள்ளூர் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகிறது. புதிய மாடல்களுக்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்றுகொள்ளத்தக்க வெர்சன்களான புதிய பி.எம்.டபிள்யூ 620டி GT கார்களில் உள்ள அனைத்து அத்தியாவசியமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வசதிகள் ஆகியவை ஜெர்மன் மாடல்களில் இருந்தே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

BMW 620d Gran Turismo

You May Like:பிஎம்டபிள்யூ இசட்4 ரூ.64.90 லட்ச ரூபாயில் இந்தியாவில் அறிமுகானது

இது குறித்து பேசிய பிஎம்டபிள்யூ இந்தியா – செயல் தலைவர், டாக்டர். ஹான்ஸ்-கிறிஸ்டி பேர்ட்ஸ் தெரிவிக்கையில், பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ கார்களை இந்திய ஆடம்பர கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது நேர்த்தியான வாகனமாக இருப்பதுடன், அதிக ஆடம்பர வசதிகள் கொண்ட நவீன காராகவும் இருந்து வருகிறது. இந்த காரின் ஸ்டைல்கள் புதிய டிரெண்டை உருவாக்கும் வகையில் இருக்கும். பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ கார்கள் திறமையான காராக இருப்பதுடன் என்ட்ரி-லெவல் டீசல் இன்ஜின்களுடன், உறுதியான போர்டோபோலியோவுடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் கிரான் துர்ரிசோ காராக வெளி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ வகைகள் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாடல்களில் ஐந்து வகையான ஆடம்பர வசதிகளுடன், இரண்டு பகுதியாக பனரோமா கிளாஸ் ரூப்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய ரியர் சீட்களுடன் சன்-பிளைன்ட் ரியர் சைடையும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

BMW 620d Gran Turismo

You May Like:2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 27.83 லட்சம்

மேலும், இதில் ரியர் சீட் எண்டர்டெயின்மென்ட் புரோப்பசனால் சிஸ்டம்களுடன் 10.2 இன்ச் கலர் ஸ்கிரீன் முன்புற சீட்டின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ளூரே பிளேயர், மொபைல் போன்களுக்கான HDMI கனெக்சன்களுடன் பல்வேறு வகையான MP3 பிளேயர்களுடன் கூடிய கேமிங் கன்சோல்களும் உள்ளன.

பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் GT வகைகளின் டிசைன்கள் கடந்த ஆண்டி மேம்படுத்தப்பட்டது மேலும் 620 டி கிரான் துர்ரிசோ மாடல்கள் பிரேம்கள் இல்லாத விண்டோஸ், நேர்த்தியான கூபே கொண்ட ரூப்லைன் மற்றும் ஆட்டோமேடிக் டைல்கேட்களுடன் உள்ளது.

மேலும் இதில் அகலமான கிட்னி கிரில்களுடன் எம்போஸ் செய்யப்பட்டுள்ளதோடு, அகலமான அடப்டிவ் LED ஹெட்லைட்களுடன் பிஎம்டபிள்யூ-வின் பீம்கள் மற்றும் கார்னிங் லைட்களும் பொருத்தப்பட்டுள்ளது. 620 டி கிரான் துர்ரிசோ கார்களில் ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆடம்பர லைன் வகைகளுடன் டாஷ் போர்டுகளுடன் கூடிய பேக்கேஜ்கள் காருக்கு பிரிமியம் தோற்றத்தை அளிக்கிறது.

BMW 620d Gran Turismo India Launch

You May Like:2019 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அறிமுகமானது; விலை ரூ. 14.93 லட்சத்தில் தொடங்குகிறது

பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ காரின் உள்புறத்தில், லெதரால் கவர் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், அமியன்ட் லைட்னிங்லுடன் பிரத்தியோகமான கலர்கள் கொண்ட சிறந்த மரத்திலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகைகளில் பிரத்தியோகமாக பெர்ல் குரோம் பினிஷ் ஹைலைட்டாக இருக்கிறது.

பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ காரின் பவர்டிரெயின்களை பொறுத்தவரை, 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டூவின் டர்போ டீசல் இன்ஜின்களுடன் 188bhp மற்றும் 400Nm பீக் டார்க்கில் 1750-1500rpm-லும் இயங்கும். பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ கார்கள் 0-100 Kmph வேகத்தை 7.9 செகன்ட்களில் எட்டி விடும்.

இந்த இன்ஜின்கள் 8 ஸ்பீட் ஸ்டெப்டிரோனி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குரூஸ் கண்ட்ரோல்களுடன் மல்டி டிரைவிங் மோடுகளான ஸ்போர்ட்ஸ், கம்போர்ட், கம்போர்ட்+, எக்கோ புரோ மற்றும் அடப்ப்டிவ் மோடுகளும் உள்ளன. இந்த கார்களில் அடப்டிவ் 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்சண்களுடன் ஆட்டோமேடிக் செல்-லெவலிங் செயல்பாடுகளுடன், மேம்படுத்தப்பட்ட கம்போர்ட் ரைடு வசதிகளுடன் கிடைக்கிறது.