கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரித்தது BMW நிறுவனம்

BMW Wireless Charger Tamil News

உலகில் முதல் முறையாக வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யு

உலகில் முதல் முறையாக பிஎம்டபிள்யு நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களுக்கான வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. 530e iPerformance என்ற பெயர் கொண்ட இந்த சார்ஜரை இந்த வாரம் முதல் ஆர்டர் செய்ய முடியும். இந்த சார்ஜரில், இடம் பெற்றுள்ள  கிரவுண்ட்பேட் (Groundpad) என்று அழைக்கப்படும் சார்ஜ் ஸ்டேசன் மூலமே சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த சார்ஜிங் எலக்ட்ரிக் டூத்பிரஸ் சார்ஜர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போன்றே இயங்கும். ஆனால் அதை விட அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லஸ் சார்ஜர் எப்படி இயக்குகிறது

காரின் அடியில் 8 செண்டி மீட்டர் இடைவெளியில் வைக்கப்படும் வயர்லஸ் சார்ஜரில் இடம் பெற்றுள்ள கிரவுண்ட்பேட்டில் இடம் பெற்றுள்ள காயில்கள் மற்றும்  கார் இடையே ஏற்படும் காந்தபுலத்தால் சார்ஜிங் செய்யப்படுகிறது. இந்த காந்த புலம் மூலம் உருவாக்கும் எலெக்ட்ரிக் மின்சாரம் காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்யும்.

3.2 கிலோ வாட் சார்ஜிங் திறன் கொண்ட கிரவுண்ட்பேட் 9.2 கிலோ வாட் வரை சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும்.  இது 85 சதவிகித செயல்திறன் ஆற்றல் கொண்டதாக இருக்கும். சார்ஜிங் செய்ய தொடங்கியது முதல் காரின் பேட்டரி 100 சதவிகித சார்ஜிங் நிறைவு பெறும் வரை   கார் இன்ஜின்கள் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

BMW-wireless-charging-front

வயர்லஸ் சார்ஜரில் இடம் பெற்றுள்ள கிரவுண்ட்பேட், பல்வேறு காலநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி இடங்கள் மற்றும்  கார் நிறுத்தும் இடத்திலும் வைத்து  சார்ஜிங் செய்து கொள்ளலாம். மின்சாரத்தை கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் பேட்கள், மழை மற்றும் பனி போன்றவைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரை பார்கிங் செய்யும் போதும் உதவும் கருவிகளுடன் உருவாகப்பட்டுள்ளதால், இந்த பாதிப்பும் இல்லாமல் இந்த சார்ஜரை பயன்படுத்த முடியும். கார் மற்றும் கிரவுண்ட்பேட் இடையே வை-பை இன்டர்நெட் இணைப்பு ஏற்பட்டதும், காரின் கண்ட்ரோல் பேனலில் கீழே உள்ள கிரவுண்ட்பேட் தெளிவாக தெரியும். இதை பயன்படுத்தி காரின் டிரைவர் காரை சார்ஜ் செய்யும் நிலையில் சரியாக நிறுத்த முடியும்.

கிரவுண்ட்பேட்கள் உற்பத்தி வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள   பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ 530e iPerformance வாகனங்களுக்கான கிரவுண்ட்பேட்கள் தற்போது ஜெர்மனியில் கிடைக்கிறது. விரைவில்,  பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா நாடுகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த கிரவுண்ட்பேட்கள் எப்போது கிடைக்கும் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு மெர்சிடைஸ்-பென்ஸ் தனது எஸ்-கிளாஸ் கார்களுக்கு வயர்லஸ் சார்ஜிங் முறையை கொண்டு வர திட்டமிட்டு இந்தாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பிஎம்டபிள்யு நிறுவனம் இந்த சார்ஜரை அறிமுகம் செய்து உலகில் முதல் முறையாக  எலெக்ட்ரிக் கார்களுக்கான வயர்லஸ் சார்ஜரை அறிமுகம் செய்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.