2019ல் வெளியாக உள்ள ஒரு பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 முன்னோட்டம்

BMW X5 Model

தற்போது அனைத்து விதமான SUV-களை தற்போது கடந்து வந்துள்ள நிலையில், இதை மேலும் சிறப்பாக புதிய தலைமுறை வசதிகளுடன் வருகிறது ஒரு பிஎம்டபிள்யூ எக்ஸ் 5.

பிரபலமான நடுத்தர அளவு கொண்ட ஆடம்பர SUV-கள் வரிசையில் நான்காவது காராக வருகிறது பிஎம்டபிள்யூ எக்ஸ் 5.  இதுமட்டுமின்றி இந்த கார் பெரியளவு கொண்டது.  இந்த காரின் நீளம் 194.3 இன்ச்கள் (மேலே 1.1 இன்ச்கள்) இதன் அகலம் 78.9 இன்ச்கள் (மேலே 2.6 இன்ச்கள்) மற்றும் உயரம் 69 இன்ச்கள் (மேலே 1.0 இன்ச்கள்).

இதன் மூலம் புதிய எக்ஸ்5 பல்வேறு வசதிகளுடன் தற்போதைய மாடலை விட சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு இந்த வாகனம் உண்மையான மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதே காரணமாகும். இது இரண்டு வாகனங்கள் ஒரே பிளாட்பார்மை பகிர்ந்து கொள்ள உதவி புரியாது என்பது குறிப்பிடத்தக்கது

புதிய எக்ஸ்5 CLAR மாடுலர் பிளாட்பார்மை கொண்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் முதலில் 2016 7-சீரிஸ் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த பிளாட்பார்ம் எக்ஸ்5 மாடலுக்காகவும், எக்ஸ்5 எம் கார்களுக்காகவும் மறுவடிமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் லேசானதாகவும், உறுதியுடனும், ஸ்போர்ட்ஸ்  டிரைவிங் திறனுடனும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்5யின் 8 ரிம்முடன் எடை 5,170 பவுண்ட் ஆகும்.

பிஎம்டபிள்யூ தொடக்கத்தில் இரண்டு பவர்டிரெய்ன்களுடன் வெளியாக உள்ளது. அவை, 3.0 லிட்டர் டர்போ சார்ஜ்சுடன் கூடிய இன்லைன்-6, 335 குதிரைத்திறன் மற்றும் 330 பவுண்ட்-அடி சுழற்சி திறன் கொண்டது. இரண்டாவது பவர்டிரெய்ன் 4.4 லிட்டர் டர்போ சார்ஜ்சுடன் கூடிய இன்லைன்-8, 456 குதிரைத்திறன் மற்றும் 479 பவுண்ட்-அடி சுழற்சி திறன் கொண்டது. இதுமட்டுமின்றி இந்த கார்கள் 4.6 செகண்டுகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகமெடுக்கும்.

பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, எட்டு வேக தானியங்கி மற்றும் அனைத்து சக்கர ஓட்டுதலும் நிலையானதாகவே இருக்கும். பின்நாட்களில், பிளாக்-இன் ஹைபிரிட் வசதியும் சேர்க்கப்பட உள்ளது.

அனைத்து சக்கர இயக்கி அமைப்பு, பின்புற வடிவமைப்பு மற்றும் வளைவுகளில் இருந்து வெளியேறும் போது அதிகரித்த கட்டுப்பாட்டை வழங்க பின்புற அச்சு மீது ஒரு மாறுபட்ட லாக் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. கடினமாக சாலையில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்றவாறு பிஎம்டபிள்யூ புதிய எக்ஸ்5 வாகனங்களில் புதிய கடினமாக சாலைகளுக்கான பேக்கேஜ்ஜும் கிடைக்கிறது. மேலும் இந்த காரில், ஏர் சஸ்பென்ஷன், முன்பக்க மற்றும் பின்புற பாதுகாப்பு அமைப்புகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிளஸ்டர் கருவி மற்றும் கடினமான சாலைகளுக்கு ஏற்றவாறு பயணம் மற்றும் இழுவை திறனைக் கட்டுபடுத்தும் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.

உறுதியாக வடிவமைப்புடன் கூடிய புதிய X5 காரில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சமே, ஒற்றை துண்டுடன் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான கிரில் ஆகும். இந்த வாகனத்தின் வீல்கள் 19 முதல் 22 இன்ச் விட்டம் கொண்டது. இதுமட்டுமின்றி, இந்த வாகனம் வழக்கமான LED ஹெட்லைட்களுக்கு பதிலாக புளு வண்ணத்தில், எக்ஸ் வடிவ கருவிகளுடன் கூடிய லேசர் ஹெட்லைட்கள் கொண்டு  அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தின் அகலத்தை அதிகரிக்கும் வகையில், உலோக டிரிம் கூறுகளை இணைக்கும் கோடுகள் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் டிஜிட்டல் முறையிலான கிளஸ்டர் கருவி மற்றும் சென்டர் டிஸ்பிளே, ஆகியவை காரில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ்-க்கு பொருந்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிரைவர், பொரும்பாலான கட்டுபாடுகளை மைய கன்சோலில் இருந்தே இயக்கி கொள்ள முடியும். இதுமட்டுமின்றி புதிய கியர் ஸ்டிக் லிவர், ரோட்டரி டயல் கண்ட்ரோலர் மற்றும் பல பட்டன்களும் இடம் பெற்றுள்ளது.

புதிய எக்ஸ்5 வாகனத்தை வாங்குபவர்கள், பல்வேறு எலெக்ட்ரிக் டிரைவர் உதவியையும் பெற முடியும். பிளைன்ட் ஸ்பாட் கண்டுபிடிப்பு, லேன் மாற்றினால் எச்சரிக்கும் வசதி, முன்புற மற்றும் பின்புற பகுதிகளில் மற்ற வாகனங்கள் மோதாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் வசதி, பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் காரின் அருகே வருவதை அறிவிக்கும் வசதி, பின்புறமாக கிராஸ் செய்யும் போது எச்சரிக்கும் வசதி மற்றும் வேக கட்டுபாடு குறித்த தகவல் வழங்கும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஆடி க்யூ7, லெக்ஸஸ் ஆர் எக்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் GLE, வோல்வோ XC90, மற்றும் விரைவில் வெளியாக உள்ள  காடிலாக் XT6 மற்றும் லிங்கன் ஏவியேட்டர் போன்ற புதிய வாகனங்களுக்கு போட்டியாக இந்த புதிய எக்ஸ்5  இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வாகனத்தின் விலை குறித்த தகவல்கள், வாகனம் வெளியாகும் வரும் நவம்பர் மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகனத்தின் தயாரிப்பு பணிகளை பிஎம்டபிள்யூ எக்ஸ்3, எக்ஸ்4,எக்ஸ்6 மற்றும் விரைவில் வெளியாக உள்ள எக்ஸ்7 ஆகியவற்றை தயாரிக்கும் தெற்கு கரோலினாவின்  ஸ்பார்டன்ன்பர்க் தயாரிப்பு ஆலை மேற்கொள்ள உள்ளது.