நிசான் கிக்ஸ்-ஐ புக்கிங் செய்து உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட்டை இலசமாக பெறுங்கள்

Nissan Kicks ICCWorld Cup Ticket

புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளன. இதற்கு முன்பு, நிசான் நிறுவனம், கிக்ஸ் எஸ்யூவி-களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்களிடம் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டிஸ்பேட்ஜ் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி நிசான் நிறுவனம் புதிய லக்கி டிரா ஒன்றையும், கிக்ஸ் உரிமையாளர்களுக்காக அறிவித்துள்ளது. இந்த லக்கி டிராவின் படி 500 லக்கி உரிமையாளர்கள், இந்தாண்டில் இந்தியாவில் நடக்க உள்ள ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை காண டிக்கெட் பெறுவார்கள்.

2019 Nissan Kicks

You May Like:அறிமுகமானது ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் மாடல் விலை ரூ.12.75 லட்சம்

நிசான் கிக்ஸ், 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையின் அதிகாரபூர்வ காராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்தில் நிசான் கிக்ஸ் கார்களை புக்கிங் செய்பவர்களுக்கு, இந்த போட்டிக்கான டிக்கெட்டை வெல்லும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. டிக்கெட் பெற உள்ள வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். நிசான் கிக்ஸ் எஸ்யூவி மற்றும் உலக கோப்பை டிக்கெட்டை பெற, நிசான் நிறுவன இணைய தளத்திலோ அல்லது அருகில் உள்ள டீலர்களிடமோ 25,000 ரூபாய் செலுத்தி நிசான் கிக்ஸ் எஸ்யூவி-ஐ புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

All new nissan kicks dashboard

You May Like:மகேந்திர எக்ஸ்யூவி 300-களுக்கான புக்கிங் தொடங்கியது

இந்தியா ஸ்பெக் நிசான் கிக்ஸ், B0 பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச ஸ்பெக் மாடல் வி-பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இந்த B0 பிளாட்பாரம் கூடுதலாக அண்டர்பின்ஸ் ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்சர் மற்றும் நிசான் டெர்ரோனோவா. கிக்ஸ் கார்கள் அறிமுகத்திற்கு முன்பு, டெர்ரோனோவா லைன்-அப்கள் நிறுத்தப்பட உள்ளது.

You May Like:அறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம்

நிசான் கிக்ஸ், 4,384mm நீளமும், 1,813mm அகலம் மற்றும் 1,649-1,656mm உயர்கும் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த கார்கள் 2,673mm நீளம் கொண்ட வீல் பேஸ்-ஐயும் கொண்டிருக்கும். மேலும் இதில் LED புரொஜக்டர் ஹெட்லேம்கள், நான்கு கலர் ஆப்சன்களுடன் கிடைக்க உள்ளது. மேற்குறிய நான்கு கலர்களும் காண்டிராஸ்ட் ரூப் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா பொருத்தப்பட்டிருக்கும்.

2019 Nissan Kicks Sideview

You May Like:ரூ. 1.87 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ்

காரின் இண்டீரியரை பொறுத்தவரை, இந்த வகை கார்களில் முதல் வசதிக்காக, கிக்ஸ் கார்கள் லெதரால் கவர் செய்யப்பட்ட டாஷ்போர்டு, லெதர் சீட்டிங், 3560 டிகிரி வியூ கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர், குரூஸ் கண்ட்ரோல், கார்னிங் லேம்கள் மற்றும் 8 டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், இவை ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இண்டகிரேசன்களுடன் நிசான் கனெக்டும் இடம் பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகளாக, EBD களுடன் கூடிய ABS வழக்கமாக இடம் பெறும் 4 எர்பேக்ஸ், ஹில் ஸ்டார்ட் அசிட் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

2019 Nissan Kicks Rear View

You May Like:அறிமுகமானது பஜாஜ் பல்சர் 220 ABS; விலை ரூ.1.05 லட்சம்

நிசான் கிக்ஸ்களில், இரண்டு வகையான இன்ஜின் ஆப்சன்கள் உள்ளன. இவை 1.5 லிட்டர் H4K பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் K9K dCi டீசல்களாகும், 1,461cc டீசல் இன்ஜின்கள் 110PS ஆற்றலில் 3,850rpm மற்றும் 240Nm டார்க்யூவில் 1,750rpm-லும் இயங்கும். மேலும் இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஹூண்டாய் கிரட்டா, மாருதி எஸ் கிராஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் கார்களுக்கு போட்டியாக இருக்கும் கிக்ஸ் கார்களின் விலை 9.5-12.5 லட்சமாக (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.