இ-வாகனங்களுக்கு ரூ.1.4 லட்ச வரை அரசு மானியம்; பெட்ரோல் கார்களின் விலை உயர வாய்ப்பு

electric-vehicles-in-india-subsidy-of-1-4-lakh-05

எலக்ட்ரானிக் வாகனங்களின் வேகமாக ஏற்றுதல் மற்றும் உற்பத்தி செய்தல் (FAME-II) இரண்டாம் கட்ட திட்டம் குறித்து மத்திய அரசின் தற்போதைய முடிவின் படி, இ-வாகனங்களுக்கு 1.4 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த மானியம் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, டூவிலர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய செலவின துறை செயலாளர் ஏ.எச் ஜா தலைமையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கமிட்டியுடன் நடந்த கூட்டத்தில்,  இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இந்த கமிட்டி அடுத்த ஐந்தாண்டு காலத்தில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 4,000 முதல் 5,000 ரூபாயாக  உயர்த்தவும் முடிவு செய்தது.

electric-vehicles-in-india-subsidy-of-1-4-lakh-04

You May Like:மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ரெனால்ட் அர்கானா கூபே-கிராஸ்ஓவர்

தற்போதைய முடிவின், மத்திய அரசுக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில் உள்ளதால், இரண்டாம் கட்ட FAME திட்டத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் அளிக்க உள்ளது. FAME II திட்டத்தின் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை 8 மடங்கு உயரும் என்று அரசு எதிர்பார்கிறது. இந்த வாகனங்களை பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே காற்று மாசுகளை குறைப்பதேயாகும். இந்த திட்டத்தைத தொடக்கத்தில் இந்தியாவில் அதிக மாசு அடைந்த 11 நகரங்களில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த 11 நகரங்கள் பட்டியல் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

Electric Cars India 2019 Tamil News

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இந்த மானியம்  எலெக்ட்ரிக் வாகனங்களில் விலையில்  20 சதவிகிதமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களான டாட்டா மற்றும் மகேந்திரா நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்கு  ஒரு லட்ச ரூபாய் முதல் 1.4 லட்ச ரூபாய் வரை சலுகை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Electric Car Filling Tamil News

You May Like:புதிய 2019 பிஎம்டபிள்யூ Z4 பட தொகுப்பு

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் மிகப்பெரிய மார்க்கெட்டாக மாற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ள இந்தியா, வரும் 2030 ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை 0 முதல் குறைந்தது 40 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களை எலெக்ட்ரிக் வானகங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும்,  பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான வரியை உயர்த்தி, இந்த கார்களின் விலையை உயர்த்தவும் நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த இறுதி முடிவு அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த இரண்டாம் கட்ட கொள்கை மசோதாவில், ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் டிரக்களை மானியம் வழங்குவது தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

Electric Car Tamil News

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கும் மானியம் வழங்க முடிவு செய்த மத்திய அரசு, பின்னர் மாவட்டங்களின் மூலம் இயக்கப்படும் பஸ்களுக்கு மட்டுமே மானியம் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில், கார்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், இந்த கமிட்டி, குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கலாம் என்று கூறியது. ஆனாலும், எத்தனை வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

Ather Energy Bike Tamil News

You May Like:வெளியானது புதிய 2019 பிஎம்டபிள்யூ Z4

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு FAME-I-ஐ அறிமுகம் செய்து அது வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை அல்லது இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை தொடரும் என்று அறிவித்திருந்தது.  இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மானியம்  வழங்குவது பேட்டரிகளின் திறனை பொறுத்தே இருக்கும் அதாவது ஒவ்வொரு கிலோவாட் மணிக்கும்(KwH) 10 ஆயிரம் ரூபாய் அளிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இ-கார்கள் 14KwH ஆற்றலுடனும், டூவிலர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முறையே 2KwH மற்றும் 4KwH பேட்டரிகள் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் அந்த வாகனங்கள் 1.4 லட்ச ரூபாய் வரை சலுகை பெறும் என்று தெரிகிறது. இருந்தபோதிலும், உயர்தர கொண்ட கார்களுக்கு அதிகபட்ச சலுகையாக 4 லட்ச ரூபாயாக இருக்கும் என்று தெரிகிறது.