$7.8 மில்லியன் விலையில் அறிமுகமானது புகாட்டி டிவோ

Bugatti Divo Unveiled

கலிபோர்னியாவில் பெப்பில் பீச் கன்சூஸ் டி எலகன்ஸின் ஒரு பகுதியான தி காவில் நடந்த விழாவில் புகாட்டி டிவோ கார்கள்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறித்து புகாட்டி நிறுவனம் தெரிவிக்கையில், டிவோ கார்கள் எங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய கோச்பில்டிங் முறையையே மாற்றி அமைத்து விட்டது. இதில் தனித்துவமிக்க பாடிகளுடன், ஏற்கனவே உள்ள சேஸ்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். கூடுதலாக, ஸ்போர்ட்ஸ் டிசைன், இதில் மதிப்பு மிக்க 44 டைல் லைட் பின்கள், இந்த காரின் பாடி, மொத்தமாக 456 கிலோகிராம் டவுன்போர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிரோன் காரை விட 90 கிலோ அதிகமாகும்.

Bugatti Divo Unveiled Side View

இதுதவிர புதிதாக, ரீபுரோபைல்டு ஏர் கார்டைன்கள் உள்ளன. இவற்றில் அகலமான முன்புற ஸ்பெல்லர், மேம்படுத்தப்பட்ட கூலிங் பிரேக்கள், மாற்றியமைப்பட்ட ரியர் டிப்யூசர், நான்கு எக்ஸ்ஹாஸ்ட் பைப்கள், மற்றும் மாற்று வேலை செய்யப்பட்ட உயரம் மற்றும் ஆங்கிள் அஜஸ்ட் செய்யும் ரியர் ஸ்பயிலர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை 1.83 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். இது சிரோன்களை விட 23 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதுமட்டுமின்றி காரின் ரூப்-ல் NACA ஏர் டக்ட் உள்ளது. மேலும், 8.0 லிட்டர் குவாட்-டர்போ W16 இன்ஜினுடன், இதன் மூலம் 1103kw (1500PS) ஆற்றல் மற்றும் 1600Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது.

Bugatti Divo Unveiled Dashboard

புகாட்டி நிறுவனம், காரின் எடையை 35 கிலோகிராம் வரை குறைத்துள்ளது. இதற்காக காரில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள், புதிய லைட்வெயிட் வீல்கள், கார்பன்பைபர் இன்டர்கூல் கவர், பிக்சட் பிராண்ட் டிப்யூசர் பிளாப்ஸ், குறைந்த சத்ததிற்கான இன்சுலேசன் மற்றும் சென்டர் கன்சோல் இருந்த ஸ்டோராஜ் பகுதி மற்றும் கதவுகள் நீக்கப்பட்டுள்ளது போன்றவை அடங்கும். இந்த மாற்றங்களுடன், வெளியாகியுள்ள டிவோ, வோல்க்ஸ்வேகன் குரூப்பின் நார்டோ டெஸ்ட் டிராக்கில், சிரோன் கார்களை விட எட்டு செகண்ட் வேகமாக பயணம் செய்துள்ளது.

Bugatti Divo Unveiled Rear

இந்த டிவோ காரின் அதிகபட்ச ஸ்பீட் லிமிட்டாக 380km/h ஆக உள்ளது. இது எலேக்ட்ரோனிக் முறையில் 420km/h இருக்கும். மேலும் டிவோ காரில் கம்பைன்ட் ப்யூயல் ரேடிங் 22.5L/100km ஆக இருக்கும். கார் நகர சாலைகளில் பயணிக்கும் போது இந்த கார்கள் 35.2L/100km ஆகவும், ஹைவேகளில் 15.2L/100km-ஆக இருக்கும்.

Bugatti Divo Unveiled Front View

இந்த டிவோ காரின் விலை 5 மில்லியன் யூரோ (7.8 மில்லியன் டாலர்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக 40 கோடி ரூபாயாக இருக்கும். பல்வேறு வசதிகள் கொண்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான இந்த கார்களில், மொத்தமாக 40 யூனிட்கள் மட்டுமே தயாரிக்க உள்ளதாக புகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.