செம்படம்பர் 1 முதல் கார், பைக்களின் விலை உயர உள்ளது ஏன் தெரியுமா?

நாளை முதல் (செம்படம்பர் 1) முதல், கார் மற்றும் பைக்குகள் வாங்குபவர்கள், பெரியளவில் பட்ஜெட் வைத்திருக்க வேண்டும். ஏன்னென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

You May Like:முழுமையாக குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்டை அறிமுகம் செய்கிறது ஃப்ஹேர் ஹெல்மெட்ஸ்

நாளை முதல் எந்த வகையான வாகனங்கள் வாங்கினாலும், மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய காரின் விலை 24,000 ரூபாய் அதிகமாகவும், புதிய பைக்கின் விலை 13,000 ரூபாய் அதிகமாகவும் இருக்கும்.

You May Like:இ-வாகனங்களுக்கு ரூ.1.4 லட்ச வரை அரசு மானியம்; பெட்ரோல் கார்களின் விலை உயர வாய்ப்பு

காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான IRDAI வெளியிட்டுள்ள சுற்றிக்கையின் படி, அனைத்து ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, மூன்றாம் தரப்பு காப்பீடு பெற்றிருப்பது அவசியமாகியுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு அளித்து வருகின்றன. இது மூன்றாம் தரப்பு காப்பீட்டில் காப்பீடு மற்றும் சொந்த சேத காப்பீடு ஆகியவை சேர்த்தே அளிக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது, ஒருவகையான பொறுப்பு காப்பீடாகும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள், உங்கள் பாதுகாப்புக்கு உதவுவதோடு, உங்களால் ஏற்படுத்தப்படும் சேதத்திற்கும் இழப்பீடு அளிக்கும்.

மூன்றாம் தரப்பு காப்பீடுகளின் மூலம் பணத்தை சேமிக்க வழி எதுவும் உள்ளதா?

You May Like:ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல்ஸ் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது. விலை ரூ. 1.62 லட்சம்

மூன்றாம் தரப்பு காப்பீடுகள் எடுப்பதன் மூலம், சில வரிகளில் இருந்து விலக்கு பெற முடியும். பொதுவான இன்சூரன்ஸ்களில் பிரிமியம் செலுத்தும் போது, 1961 இன்கம்டாக்ஸ் சட்டத்தின் படி, பொறுப்பு காப்பீட்டு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இதனால், இழப்பீடு பெறும் போது, மொத்த வரிகளுக்கான வருவாயை பெறலாம். இருந்தபோதும், இந்த சலுகை புதிதாக வாகனங்களை வர்த்தக பயனுக்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருத்தும்.