அமெரிக்காவில் குறையும் பெட்ரோல் விலை

Petrol price falls down in the US

அமெரிக்காவில் டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி, கார்களில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பெட்ரோல் விலை இறங்கு முகத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலை 2 டாலரை விடவும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் ஒரு காலன் ( 3.79 லிட்டர்கள்) பெட்ரோலின் சராசரி விலை 2 டாலர்கள் 37 சென்ட்களாக உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 170 ரூபாய்.

அமெரிக்காவில் பெட்ரோல் விலை சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஊருக்கும் உள்ளூர் வரி தனியாக இருக்கும். ஒரே ஊரிலே அருகருகே உள்ள பெட்ரோல் பம்புகளில் கூட வெவ்வேறு விலையாக இருக்கும். நாட்டில் உள்ள மொத்த பெட்ரோல் பம்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்திய நிலவரப்படி ஒரு காலன் பெட்ரோல் 2 டாலர் 25 சென்ட்கள் ஆக இருந்துள்ளது.

You May Like:தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டெக்சாஸில் ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பம்பில் அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த விலையாக காலனுக்கு 1 டாலர் 65 சென்ட்கள் ஆக உள்ளது. அதே சமயத்தில், நாட்டிலேயே அதிகபட்ச விலையாக இருக்கும் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு காலன் 3 டாலர் 40 சென்ட்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த விலை சாதாரண வகை பெட்ரோலுக்கு மட்டுமே. உயர் வகைகள் விலை கூடுதல். மேலும் டீசல் விலை அமெரிக்காவில் எப்போதும் பெட்ரோலை விட அதிகமாகவே இருந்து வருகிறது.

ஹைப்ரிட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பெட்ரோல் தேவை அமெரிக்காவில் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

You May Like:தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை ஏறும் போது, அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஏறினாலும், இறங்கும் போது அதே வேகத்தில் பெட்ரோல் விலையும் இறங்கி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.