இந்தியாவில் எஸ்யூவி வெளியாவது உறுதி: டட்சன் நிறுவனம் அறிவிப்பு

Datsun SUV

இந்திய ஆட்டோமோடிவ் மார்க்கெட்டை பிடிக்கும் நோக்கில், புதிய மாடல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாகங்களை அறிமுகம் செய்ய  டட்சன் (Dutson) நிறுவனம் முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து பேசிய நிசான் இந்தியா செயல்பாடுகள் நிறுவன தலைவர் தாமஸ் குயெல் (Thomas Kuehl) , டட்சன் கார் தயாரிப்பாளர்கள், டட்சன் பேட்ஜ்களுடன் கூடிய SUV-களுடன் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த SUV-கள் 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும். இதுபற்றி வேறு எதுவும் தெரிவிக்க முடியாவிட்டாலும், இந்த கார்கள் மார்க்கெட்டில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்லலாம் என்றார்.

விரைவில் வெளியாக இருக்கும் SUV குறித்த தகவல்களை குயெல் வெளியிடவில்லை.  இந்த மாடல்கள் ரெனால்ட்-நிஸான் அலையன்ஸ் CMF-A பிளாட்பாரமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுமட்டுமின்றி ரெனால்ட் MPV கார்களையும் வரும் 2019ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

டட்சன் SUV கார்கள் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் மற்றும் டாட்டா நெக்ஸானின் வடிவமைப்பில் கிராஸ்ஓவர் ஸ்டைலிங் கொண்டதாக இருக்கும். இந்த கார் சிங்கிள் என்ஜின் ஆற்றலுடன், டர்போ-சார்ஜ்டு வெர்சன் கொண்ட Redigo-வின் 1.0 லிட்டர் மோட்டர் கொண்டது. இதில் டீசல் ஆப்சன் எதுவும் இல்லை.

இந்த SUV-கள், நிறுவனத்தின் மாடல் கார்களான டட்சன் பிராண்ட் கார்களை போன்றே 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த விலையை விட அதிகாமாக விலையில் விற்பனை செய்யப்படும் கார்கள் நிஸான் மாடல்களுடன் விற்பனைக்கு வரும்.

2014ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த பிராண்ட் பெரியளவு வெற்றி பெறவில்லை, கடுமையான போட்டிகளுக்கு இடையே தங்கள் பிராண்ட் கார்களுக்கு டிமாண்ட் உருவாக்கும் வகையில் பல்வேறு வழிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும், விழாகால சீசன்களில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிகையை உயர்த்தும் வகையில், டட்சன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாகவே Go மற்றும் Go+ facelift-களை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், உறுதியான புராடைக்ட் போர்ட்ஃபோலியோ எதுவும் இல்லை. ஆகையால், இதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்று குயெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் எங்கள் லைப்சைக்கிள் மேனேஜ்மெண்ட் சிறப்பாக இல்லை, ஆனால், விழாக்கால சீசன் முதல், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றார்.

Go மற்றும் Go+ கார்கள், புதிய டச்ஸ்கிரீன் மற்றும் புதிய முன்புற சீட்களுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டைல்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டட்சன் கார்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Go, Go+ மாடல்களிலும் மேப்டுத்த்ப்பட்ட ABS மற்றும் டுயல் ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முதல் தர எலேக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (EPS) அல்லது வெகிக்கிள் டைனமிக்  கண்ட்ரோல் (VDC) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கார் தயாரிப்பாளர்கள் ஸ்பெஷல் எடிசன் Redigo என்ற சிறிய காரையும் அறிமுகம் செய்ய உள்ளது என்று தெரிவித்துள்ள குயெல், இந்த விழா கால சீசனில் ஸ்பெஷல் எடிசன் Redigo கார்களை வெளியிடப்படும். Redigo வெற்றிகரமான மாடல் இருப்பதுடன், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்றார்.