எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் இந்தியாவின் முயற்சி சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறையால் தாமதம்

Electric Cars India 2019 Tamil News

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அமல்படுத்த  ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் (Energy Efficiency Services Ltd (EESL)) கடந்த மார்ச் மாதம், ஏழு மாத காலத்தில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்க 2-வது பெரிய ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஒப்பந்தம் வெளியானது முதல் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன கனவு நினைவாக தொடங்கியுள்ளது. இந்த ஏஜென்சி இந்தியா  பொதுத்துறை நிறுவனங்கள்களுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகும். இந்த திட்டம் மூலம் அரசு துறைக்கு பயன்படுத்தும் வாகனங்களில் 5 லட்சம் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றவும், வரும் 2030ம் ஆண்டில் மொத்த அரசு வாகனங்களில் 30 சதவிகித வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்ய போதுமான சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பபடாதது இந்த திட்டம் அமல் படுத்துவதை தாமதமாகியுள்ளது.

இதுகுறித்து இந்த ஏஜென்சியின் மேலாண்மை இயக்குனர் சுராப் குமார் தெரிவிக்கையில், வரும் 2019ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் வாகனங்களை பயன்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் தங்களது எலெக்ட்ரிக் கார்களான டாடா டிகோர் தயாரிக்க 11.2 லட்ச ரூபாய் கொடுத்து பெற்று கொண்டது. முதல் ஒப்பந்தப்படி வாகனங்கள் தயாரிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு கடந்த நவம்பர் மாதமாகவும், மீதமுள்ளவைகளை அடுத்த ஆண்டு ஜூன் மாத்திற்குள் தயாரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் சார்ஜிங் செய்ய தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை மாநில அரசுகள் மெதுவாக மேற்கொண்டு வருவதால், கார்கள் டெலிவரி செய்வது தாமதமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் பேசிய அவர், தற்போது தலைநகர் டெல்லியில் 100 கார்களும், தெற்கு பகுதியில் ஆந்திராவில் 100 கார்களும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கார்களுக்கான 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாகப்பட்டுள்ளது. இதில், 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனம் முன்பு சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க ஒப்பந்தம் விடவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 4,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் ஒப்பந்தம் நீக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் 300 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி-என்சிஆர் ஆகிய இடங்களில்  250 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க  மூன்றாவது முறையாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

கார்கள் டெலிவரி செய்யது தாமதமாகியுள்ளதற்கு, இந்த மெதுவான ஆரம்பமே காரணமாகும். தேவைக்கு ஏற்ப வாகனங்கள் தயாரிக்க முன்வந்த போதும் அதற்கு தேவையான பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பு வடிவமைப்பு மிகவும் முக்கியமானதாகும். இதற்கான பணிகள் 60-70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. எப்போது சார்ஜிங் உள்கட்டமைப்பு பணிகள் முழுவதும் நிறைவு பெற்றதும், நாங்கள் கார்களை டெலிவரி செய்யும் பணியை தொடங்குவோம் என்றார்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் மேற்குறிய காரணங்கள் வருத்தத்திற்குரியதாக மாறியுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் டெலிவரி செய்ய ஒப்பந்தம் அளிக்கப்பட்டு திரும்ப பெறுவதே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரித்தால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை படிபடியாக குறையும் என்பதை நாம் மறக்க கூடாது.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க முன்வந்த போதும், இந்த அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்காமல் இருந்ததால், திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் மெர்சடெஸ் பென்ஸ் மேலாண்மை  இயக்குனர் ரோலண்ட் போல்கர் தெரிவிக்கையில், “இந்திய அரசு எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் முயற்சியை விரைவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தின் எலோன் முஸ்க் வெளியிட்ட டுவிட்டரில், “தான் இந்தியாவை நேசிக்கிறான். எதிர்பாராதவிதமாக, இந்திய அரசின் கட்டுபாடுகள் மிகவும் சவாலாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பேசிய ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் அதிகாரி குமார், “எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், எவ்வளவு வேகமாக இந்த கார்கள் பயன்படுத்துவது அமலுக்கு வரும் என்பது அரசின் நடவடிக்கையை பொறுத்தே அமையும். இதுமட்டுமின்றி மாநிலங்களில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியங்கள் அளிக்கப்படவில்லை, மானியங்கள் அளிக்கப்படாததால், தற்போது பெட்ரோல்/டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகமாகவே உள்ளது. இந்த விஷயத்தில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கடந்த நவம்பர் மாதம் FICCI-ராக்கி மவுண்டன் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் எரிபொருளை சேமிக்க, இந்தியா பேட்டரியால் இயங்கும் கார்களுக்கு மாறுவது அவசியமாகும். கடந்த 2017 மற்றும் 2030 ஆண்டுகள் இடையேயான காலகட்டத்தில் தற்போதைய நிலவரப்படி, இந்தியா, 1,600 மில்லியன் மெட்ரிக் டான் எரிபொருள் தேவைப்படுகிறது. இதற்காக இந்தியா, 550 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட  80 சதவிகித எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன நம்பிக்கையை நிறைவு செய்ய 100 சதவிதம் பேட்டரிகள் தயாரிப்பது அவசியமாகிறது. இந்த வாகனங்களுக்கு 2017 மற்றும் 2030ம் ஆண்டுக்குள் 3,500 GWh பேட்டரிகள் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கான மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாயாகும். இது எரிபொருள் இறக்குமதி செய்ய ஆகும் செலவை விட பாதிக்கும் குறைவாகும். இந்த பேட்டரிகள் தயாரிப்பதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள், ஒரு ஜிகா டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்தலை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.