அறிவிக்கப்பட்டது புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான விதிமுறைகள்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் திட்டத்தின் தொடர்ச்சியான 4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில், அதாவது மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அஹமதாபாத், சென்னை, கொல்கத்தா, சூரத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு கொள்கைகளை இந்திய அரசு, இறுதியாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ ஆவணம், கடந்த 14ம் தேதி ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆவணத்தில் சில முக்கிய உண்மைகள், திட்டங்கள் அதற்கான ஆதரவு, நாட்டில் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான விரிவாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

electric car charge

You May Like:ரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு

போக்குவரத்து துறையில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் முடிவுடன், அந்த வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தின் தொடர்ச்சியான 4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில், அதாவது மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அஹமதாபாத், சென்னை, கொல்கத்தா, சூரத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பொது எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் என்ற கனவு நினைவாக உள்ளது.

Electric Cars India

You May Like:பயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி

எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் கிரீன் நம்பர் பிளேட் வழங்கப்படும் என்று இந்தியா அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறித்த மிக முக்கிய அறிவிப்பு கொண்ட சுற்றறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க வழங்கப்படும் டி-லைசென்ஸ் பெறும் நடவடிக்கைகள் விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சார்ஜிங் ஸ்டேஷன்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தை எந்த வகையான மின்சார நிறுவனங்களிடமிருந்தும் இலவசமாக பெற்று கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Electric Car Charging Points

You May Like:ரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்

சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விண்ணப்பம் செய்து விட்டாலே, அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பும் சம்பந்தபட்ட மின்சார ஏஜென்சியிடம் இருந்து அளிக்கப்பட்டு விடும். மேலும் அந்த சுற்றறிக்கையில், தற்போது பெட்ரோல் நிரப்பும் மையங்களாக உள்ள இடத்தில் எலக்ட்ரானிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விண்ணபம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் நிறுவனத்தால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையங்களுக்கு, தனியார் பெட்ரோல் நிலையங்களை விட அதிக முன்னுரிமை அளிக்கப்படும். பெட்ரோல் நிரப்பும் பம்ப்களில் தனியாக எலெக்ட்ரிக் சார்ஜிங் கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

Car Charging Points

You May Like:தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்

தனியார் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விரும்பினால், உங்கள் வீடு, அப்பார்ட்மெண்ட் காம்பிளேக்ஸ், ஆபீஸ் பகுதியை சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு தேவையான அளவில் அமைக்கப்பட வேண்டும். பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறைந்தபட்ச இடம் வசதிகளுடன், சார்ஜிங் கட்டமைப்புகளுக்கு தேவையான வசதிகள் பெற்றிருப்பது அவசியமாகும்.

ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷன்களும் குறைந்த பட்சம் மூன்று அதிவேக சார்ஜர்கள் கொண்டிருக்க வேண்டும். அதில் ஒன்று CCS- ஒருங்கிணைந்த சார்ஜிங் சிஸ்டம் ஸ்டைல் பிளக், மற்றொரு CHAdeMO – சார்ஜ் டி மூவ் முறையில் இது மூவ் யூசிங் சார்ஜ் முறையாகும். அடுத்ததாக டைப்-2 அதிவேக சார்ஜர். முதலில் குறிய இரண்டும், குறைந்த பட்ச அவுட்புட்டாக 50kW மற்றும் 200-1000 வோல்ட், Ty-2 பிளாக்கள் முறிந்த பட்சம் 22kW மற்றும் 380-480 வோல்ட் கொண்டதாக இருக்கும்.

Electric Car Charging at Home

You May Like:ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்குமா? வாகன ஓட்டிகள் கேள்வி

கூடுதலாக, சார்ஜிங் ஸ்டேஷன்களில் கட்டாயமாக இரண்டு மெதுவான/மிதமான சார்ஜிங் பாயின்ட்கள் இருக்க வேண்டும். இதில் ஒன்று பாரத் DC-001 கனெக்ஷன்களுடன் 15kW மற்றும் 72-22 வோல்ட் மற்றும் மற்றொரு பாரத் DC-001 கனெக்ஷன்களுடன் 10kW மற்றும் 230 வோல்ட் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி மேற்குறிய நகரங்களில் அமைக்கப்பட உள்ள எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறைந்தது 3000 மீட்டர் அல்லது 3kms இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Renewable Energy

You May Like:2019 ஜனவரி முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்ஸ்

நெடுஞ்சாலைகளில், அமைக்கப்படும் எலக்ட்ரிக் கார் சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஒவ்வொரு 25kms தொலைவில் அமைக்கப்பட வேண்டும். இதுமட்டுமின்றி எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பதன் மூலம் சிறிய தனியார் மற்றும் பெரிய கமர்சியல் வாகனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Electric Vehicles India

You May Like:ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2

இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் மும்பை-புனே, அஹமதாபாத்-வதோரா, டெல்லி-ஆக்ரா (யமுனா எக்ஸ்.), சூரத்-மும்பை, ஆக்ரா-லக்னோ, டெல்லி-ஆக்ரா (NH2) மற்றும் தெற்கு பெரிபேரல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியதாக இருக்கும். மற்ற பெரிய ரோடுகளான ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு, டெல்லி-ஜெய்பூர் ஹைவே, பெங்களுரூ-மைசூர் ஹைவே மற்றும் மெகா சிட்டியை இணைக்கும் ஐந்து இணைப்பு நெடுஞ்சாலைகளிலும் அமைய உள்ளது.