ஃபோர்ஸ் குர்கா ஏபிஎஸ் ரூ.11.05 லட்ச விலையில் அறிமுகமானது

ஃபோர்ஸ் மோட்டார் ஏபிஎஸ் வசதிகளுடன் கூடிய குர்கா ஆப்-ரோடு கார்கள் 11-05 லட்ச ரூபாயில் குர்கா எக்ஸ்பிளோரர் 3-டோர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

ABS வசதிகளுடன் கூடிய குர்கா எக்ஸ்புளோரார் என்ற பெயரில் 5 டோர்களுடனும், டாப் ஸ்பெக் எக்ஸ்டிரிம் 3 டோர்களுடன், விலைகள் முறையே 12.55 லட்சம் மற்றும் 13.30 லட்ச ரூபாயில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்ட குர்கா வகைகள், ஏபிஎஸ் பொருத்தப்படாத வகை இல்லாத கார்களை விட 30,000 ரூபாய் அதிகமாக இருக்கும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்கா எக்ஸ்பிஎடிசன் (3 டோர் மற்றும் 5 டோர் வகைகள்) கார்களில் ஆண்டி பிரேக்கிங் சிஸ்டம் இருக்காது,

Force Gurkha ABS

You May Like:மாருதி சுசூகி ஆல்டோ K10 மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது; விலை ரூ. 3.65 லட்சம்

கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ஃபோர்ஸ் நிறுவனம் உயர்தரம் கொண்ட குர்கா எக்ஸ்டிரிம்களை 12.99 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்தது. புதிய ரேஞ்ச் டாப்பிங் குர்கா வகைகள் 140hp, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளியானது. ஆனால் எக்ஸ்பிஎடிசன் மற்றும் எக்ஸ்பிளோரர் வகைகள் 85hp மற்றும் 2.5 லிட்டர் டீசல் வகைகளில் கிடைக்கிறது.

எக்ஸ்டிரிம் வகைகளில், வெளிப்புறத்தில் சிறியளவிலான மாற்றங்களுடன், திரும்புவதை அறிவிக்கும் LED இண்டிகேட்டர்கள், புதிய ஸ்டீல் பம்பர்கள் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தடிமனான புட்போர்டு, பல்வேறு வகையான விங் மிரர் மற்றும் டேக்கால் பொருத்தப்பட்டுள்ளது.

Force Gurkha ABS Launched in India

You May Like:லேண்ட் ரோவர் வேலர் காரை உள்ளூரில் அசெம்பிள் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது; விலை ரூ. 72.47 லட்சம்

குர்கா ஏபிஎஸ் கார்களின் டெலிவரி வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ள டீலர்கள், இந்த கார்களுக்கான புக்கிங்கை ஏற்கனவே தொடங்கி விட்டனர்.

எதிர்வரும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப புதிய கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதுடன், இந்த கார்கள் வரும் ஜூலையில் டெலிவரி செய்ய உள்ளதாக ஃபோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மாடல்களில் பாதுகாப்பு அம்சங்களாக டிரைவர் சைட் ஏர்பேக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் ரீமைண்டர் போன்றவைகளும் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் குர்கா வகைகளின் விலை விபரம்

வகைகளின் விலை (ஏபிஎஸ் அல்லாதவை)

குர்கா எக்ஸ்பிஎடிசன் 3-டோர் ரூ. 9.75 லட்சம்
குர்கா எக்ஸ்பிஎடிசன் 5-டோர் ரூ. 9.99 லட்சம்
குர்கா எக்ஸ்பிளோரர் 3-டோர் ரூ. 10.75 லட்சம்
குர்கா எக்ஸ்பிளோரர் 5-டோர் ரூ. 12.25 லட்சம்
குர்கா எக்ஸ்டிரிம் 3-டோர் ரூ. 12.99 லட்சம்

வகைகளின் விலை (ஏபிஸ் உடன் கூடிய விலை)

குர்கா எக்ஸ்பிஎடிசன் 3-டோர்
குர்கா எக்ஸ்பிஎடிசன் 5-டோர்
குர்கா எக்ஸ்பிளோரர் 3-டோர் ரூ. 11.05 லட்சம்
குர்கா எக்ஸ்பிளோரர் 5-டோர் ரூ. 12.55 லட்சம்
குர்கா எக்ஸ்டிரிம் 3-டோர் ரூ. 13.30 லட்சம்