ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிப்ட் வரும் 15ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது

Ford Figo Facelift India Launch

வரும் 15ம் தேதி ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிப்ட் அறிமுகமாக உள்ள நிலையில், ஃபோர்டு நிறுவன டீலர்கள் இந்த கார்களுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளனர். இந்த கார்களை வாங்கி கொள்ள 10,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன், மேம்படுத்தப்பட்ட இன்டீரியர்களுடன் மிட்-சைக்கிள் ரீபிரஸ் செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிப்ட் கார்களில், முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது, மேலும் ஹனிகோம் முன்புற கிரில், டூவிக்டு ஹெட்லைட் மற்றும் புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் கேபின்கள் புதிய வசதிகளுடன், அதாவது புதிய அப்ஹோலஸ்ட்ரி மற்றும் ஃபோர்டு ஸின்க்3 இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் 6.5 இன்ச் டச்ஸ்கிரீன் இவை ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்.

Ford Figo Facelift India Launch

You May Like:2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை இந்த காரில் டூயல் ஏர்பேக்ஸ், ABS மற்றும் EBD, ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ஸ்பீட்-அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் ரீமைண்டர் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். டாப் ஸ்பெக் வகைகளில் கூடுதலாக நான்கு ஏர்பேக்கள் இருக்கும், இவை ஆஸ்பயர் மற்றும் ப்ரீஸ்டைல் கிராஸ் ஹாட்ச்கள் போன்றே இருக்கும்.

ஃபோர்டு ஃபிகோ பேஸ் லிஃப்ட்களில், ஆஸ்பயர் பேஸ்லிப்ட்களில் உள்ள அதே இன்ஜின்-கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். மேலும் இதில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்சன்கள், அதாவது, 96hp, 1.2 லிட்டர் மோட்டர் மற்றும் 123hp, 1.5 லிட்டர் மில்களும் உள்ளன. 1.2 லிட்டர் யூனிட்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில் 1.5 லிட்டர்கள் 6-ஸ்பேட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் மட்டுமே கிடைகிறது. 100hp/215Nm, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் முந்தைய மாடல்களில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன், முன்புற வீல்களுக்கு 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் பவர் அனுப்பும்.

Ford Figo Facelift India Launch date revealed

You May Like:மாருதி சுஸுகி வேகன்ஆர் S-CNG ரூ. 4.84 லட்ச விலையில் அறிமுகமானது

ஸ்பை படங்களில் இருந்ததை போன்று புதிய ப்ளூ வகை ஃபிகோ கார்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த வகைகள் கிளாஸி பிளாக் பினிஷ்சில் முன்புற கிரில், மிரர் கேப் மற்றும் ரூப்களுடன் இருக்கும் என்று தெரிகிறது. கூடுதலாக இதில் பிளாக் அவுட் அலாய் வீல்கள் மற்றும் பிளாக் டேக்கால்கள் சைடு மற்றும் புட் லிப்களில் இருக்கும். இந்த வகைகள் வேறுவிதமான அப்ஹோல்ஸ்திரி இன்டீரியர்களை கொண்டிருக்கும்.

Ford Figo Facelift Price in India

You May Like:ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்

ஃபோர்டு நிறுவனம் தனது விலையில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆஸ்பயர் மற்றும் எண்டோவர் கார்களுக்கான விலைகளுடன் வெளியேறும் மாடல் விலையையும் ஒப்பிட்டு ஃபோர்டு ஃபிகோ பேஸ்லிப்ட் விலையை நிர்ணயம் செய்யும் என்று தெரிகிறது. இந்த கார்கள், மாருதி சுசூகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் வோக்ஸ்வாகன் போலோ கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.