இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை ஹோண்டா பிரயோ அறிமுகமானது

Honda Brio 2019 Tamil News

ஹோண்டா நிறுவனம், புதிய தலைமுறைக்கான பிரயோ கார்களை இந்தோனேசியாவில் நடந்த ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா பிரயோ, ஹோண்டா சிறிய RS கான்செப்ட் கார்களை போன்றே இருந்ததால் அதிகமானவர்களை கவர்ந்தது. இந்த கார் ஹோண்டா அமாஸ் காரில் உள்ளதை போன்று உள்ளது. இந்த புதிய மாடல்கள் இந்தாண்டின் இறுதியில் அல்லது 2019ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மார்க்கெட்களில் விற்பனைக்கு வரும்.

Honda Brio Car Latest News in Tamil

ஹோண்டா அமாஸ் மற்றும் புதியதாக வெளியே வர உள்ள ஹோண்டா பிரயோ இரண்டும் இன்ஜின் மற்றும் இன்டீரியர் போன்றவற்றில் ஒரே பிளாட்பார்மை பகிர்ந்து கொண்டுள்ளன. பிரயோ-வின் வெளிப்புறத்தில் இடம் பெற்றுள்ள பிராண்ட் கிரில் மற்றும் ஹெட்லேம்ஸ், அமாஸ்-சில் உள்ளதை போன்றே இருக்கிறது. இது முன்புற பம்பர்கள், டோர் ஹான்டில்கள், சைட் சாப்டர் லைன், ORVMs போன்றவற்றை பார்க்கும் போது வெளிப்படையாக தெரிகிறது.

Honda Brio 2019

கேபின் உள்புறத்தில், புதிய ஹோண்டா பிரயோ ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன், சென்டர் கன்சோலில் இடம்பெற்றுள்ள டச்ஸ்கிரின் இன்போடென்மென்ட் சிஸ்டம் கேபினுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சீட்கள் அழகை அதிகரிக்க செய்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் இந்த மாடல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Honda Brio Car News in Tamil

இன்ஜினை பொறுத்த வரையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதே இன்ஜினையே இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் இந்தியாவில் வெளியாக உள்ள பிரயோ-வின் குறித்த விபர குறிப்புகளை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. எனினும் இந்த கார்கள் டிரான்ஸ்மிஷன் ஆப்சன்கள் 5 ஸ்பீட் மெனுவல் கையேடு கியர்பாக்ஸ் மற்றும் CVT ஆகியவை அடங்கியதாக இருக்கலாம் என்று தெரிகிறது.