அறிமுகமானது ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் மாடல் விலை ரூ.12.75 லட்சம்

Honda City ZX MT launched in India

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் கிரேடுகள் சிட்டி செடன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி கார்களின் விலை 12.75 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த் கார்கள் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைகிறது. புதிய ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி வகைகள் பெட்ரோல் மெனுவல் வகையாக மட்டும் கிடைக்கிறது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களுடன் அதிக டிமாண்ட் இருப்பதாலேயே பெட்ரோல் மெனுவல் வகைளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

You May Like:வெளியானது புதிய 2019 லம்போர்கினி ஹர்யாகன் EVO

இந்த புதிய காரின் அறிமுகம் குறித்து பேசிய ஹோண்டா கார் இந்தியா நிறுவன துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல், புதிய இசட்எக்ஸ் வகை ஹோண்டா சிட்டி பெட்ரோல் வகைகளுடன் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கார்களின் டாப்-ஸ்பெக் வகைகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும். கூடுதலாக புதிய கலர்கள் மற்றும் வழக்கமான ரியர் பார்கிங் சென்சார்கள் அதிக உறுதியான காராக இதை மாற்றியுள்ளது என்றார்.

Honda City ZX MT

You May Like:மகேந்திர எக்ஸ்யூவி 300-களுக்கான புக்கிங் தொடங்கியது

ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் கார்கள் பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. அதாவது ஆறு ஏர்பேக்கள், LED ஹெட்லேம்களுடன் டே டைம் ரன்னிங் லைட்கள், LED டூ லேம்ப்கள், LED டைல்லைட்கள் மற்றும் கூடுதலாக லைசென்ஸ் நம்பர் பிளேட் லேம்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் டிராங் லிட் ஸ்பாயிலர்களுடன், LED இலுமிநேசன்களும் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலாக செடான் கார்கள் எலெக்ட்ரிக் சன்ரூப்களுடன் ஒன் டச் ஒபன்/குளோஸ் பங்க்ஷன்களுடன் ஆட்டோ ரிவர்ஸ்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி காரில், டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட்கள், மழை பெய்வதை அறிந்து கொண்டு தானாகவே இயங்கும் வைப்பர்கள் மற்றும் டைமண்ட் கட் 16 இன்ச் அலாய் வீல்கள். மேலும் இந்த காரின் இன்டீரியர்களுடன் மல்டி பங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:அறிமுகத்திற்கு முன்பு வெளியானது புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் டீசர் இமேஜ்

ஹோண்டா சிட்டி தற்போது நான்கு வகைகளை மெனுவல் டிரான்மிஷன்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் -SV, V, VX மற்றும் புதிய ZX டிரிம்களாக கிடைக்கிறது. சிட்டி பெட்ரோல் CVT வகைகள் V,VX மற்றும் ZX வகைகளில் கிடைக்கிறது. இத்துடன் புதிய வகை சிட்டி கார்கள் அதிக வசதிகளுடன், மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோல்ஸ்வேகன் வேன்டோ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.