தமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு?…. முழு விபரம்

Petrol Diesel Prices Hiked

கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இன்று வரை ஓயாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜூலை 30-தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் உயர்ந்தது. அதை தொடர்ந்து ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனையானது. அதன் பிறகு தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு பெட்ரோல் விலையும், 10 நாட்களுக்கு டீசல் விலையும் எவ்வித மாற்றமுமின்றி இருந்தது. அந்த 12 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்வை காணத் தொடங்கியது. அதிகபட்சமாக பெட்ரோல் விலை 51 காசுகளும், டீசல் விலை 56 காசுகளும் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை மக்களை இந்த விலை உயர்வு வாட்டி வதைத்து வருகிறது.
Petrol GST News in Tamil

You May Like:ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வாகனச் செலவோடு முடிந்துவிடுவதில்லை. வேளாண்மை, தொழில்துறை, சேவைப்பணித் துறை என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்த விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகப்படுத்தி, உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்விலும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் விலை 238% விலை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. GST News in Tamil

You May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வாகனச் செலவோடு முடிந்துவிடுவதில்லை. வேளாண்மை, தொழில்துறை, சேவைப்பணித் துறை என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்த விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகப்படுத்தி, உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்விலும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் விலை 238% விலை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை அடுத்து, உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில் இந்தியா அளவுக்கு எந்த நாட்டிலும் விலை உயர்வு இல்லை. மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, மாநில அரசு விதிக்கும் வாட் வரி ஆகியவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம். பெட்ரோல், டீசல் மீது அரசு விதிக்கும் வரிகளைத் தளர்த்திக்கொண்டால், அவற்றின் விலையை 30% குறைக்க முடியும்.
Petrol-Diesel-Tax

You May Like:ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்

பெட்ரோல், டீசல் விலையில் அரசு விதிக்கும் வரிகள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்

2017, ஜூன் 16-ம் தேதி கணக்கீட்டின் படி, கச்சா எண்ணெய் சர்வதேச விலை 47 டாலர். இந்திய மதிப்பில் 3,050 ரூபாய்.

1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர்.

இதன் படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு – 19.18 ரூபாய்.

இதன் பிறகு, நுழைவு வரி (Entry Tax), சுத்திகரிப்பு (Refinery Processing), இறக்குமதி செலவு (Landing Cost) மற்றும் இதர இயக்கச் செலவுகள் (Operational Costs with Margins) சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது.

மார்ஜின், போக்குவரத்து, சரக்கு விலை (Margin, Transportation, Freight cost) சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது.

சுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.27.51

இதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் சுங்க வரி (Excise Duty) லிட்டருக்கு ரூ.21.48

வாட் வரிக்கு (VAT) முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.48.99

பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் லிட்டருக்கு ரூ.2.57

வாட் வரிக்கு முன் பெட்ரோல் செலவு (தோராயமானது) லிட்டருக்கு ரூ.51.56

கூடுதலாக, வாட் வரி (டில்லி) 27% (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்) மற்றும் 25 பைசா (செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி) சேர்த்து லிட்டருக்கு ரூ.13.92

ஆக, 2017-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி இறுதியில், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விலை – ரூ.65.48

இதுவே சென்னையில் என்று எடுத்துக் கொண்டால் இங்கு வாட் வரி 34%-க்கு வரி விதிக்கப்படுகிறது.

ஆக ஒட்டுமொத்தத்தில் ரூ.27.51 என்று இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இறுதியில் பல வரிகள் சேர்க்கப்பட்டு ரூ.68.02 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரிகள் மட்டும் ரூ.40.51 -க்கு வசூலிக்கப்படுகிறது.
Diesel Tax in Tamil Nadu

You May Like:ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்

பொதுவாக மத்திய அரசின் சுங்க வரி விதிப்பாலும், மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் ஒட்டு மொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையைவிட மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக வரி விதிக்கிறது. இப்போது, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும்.
Petrol Price in Chennai

You May Like:விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்

தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் டீசல் விலையில் ரூ.2 முதல் 4 வரை குறைத்துள்ளனர். தமிழகமும் அதைப் பின்பற்றி டீசல் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேற்றைய விலை பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேயில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Petrol price in Tamil Nadu

You May Like:நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி

பெட்ரோல் டீசல் விலை குறைவு அறிவிப்பு வெளியாகுமா?

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையில், மத்திய கலால் வரி இணைகிறது. பெட்ரோலுக்கு, 19.50 ரூபாயும், டீசலுக்கு, 15.33 ரூபாயும், கலால் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், தமிழக அரசின், ‘வாட்’ எனும் மதிப்பு கூட்டு வரியும் சேர்க்கப்படுகிறது. இதில், பெட்ரோலுக்கு, 34 சதவீதமும், டீசலுக்கு, 25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், ‘டீலர் கமிஷன்’ சேர்ந்து, அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, விலை தொடர்ந்து உயர்வதால், வாட் வரியிலிருந்து, அதிகபட்சம், 2 சதவீதம் வரை குறைக்க, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் படி, பெட்ரோல் வரி, 32 சதவீதமாகவும், டீசல் வரி, 23 சதவீதமாகவும் குறையும். இதன் அடிப்படையில், அதிகபட்சம், 1.20 காசு வரை, விலை குறையும். இதனால், தமிழக அரசுக்கு, பெட்ரோல் வருவாயில் மாதத்துக்கு, 30 கோடி ரூபாயும்; டீசல் வருவாயில், மாதத்துக்கு, 60 கோடி ரூபாய் வரையும், இழப்பு ஏற்படும். இது தொடர்பான ஆலோசனையில், அரசு ஈடுபட்டு உள்ளது. விரைவில், அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கலாம்.