எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தினால் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்?

Electric Car Filling Tamil News

இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்றைய (மே 23, 2018) பெட்ரோல் விலை 84 ரூபாய் 99 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் டெல்லியில் இந்த பெட்ரோல் விலை 65 ரூபாயாக இருந்தது. பெரிய நகரங்கள் மற்றும் மத்திய வரிகள் ஆகியவற்றை தவிர்த்து, சர்வதேச எரிபொருள் விலை விண்ணை தொடும் வகையிலேயே உள்ளது. தற்போதைக்கு இந்த விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இந்த விலை உயர்வை கட்டுபடுத்த அரசு எந்த முயற்சியும் செய்யாத நிலையில், விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு சிறந்த மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விளங்கி வருகின்றனர்.

electric-car

பெட்ரோல் விலைவால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்கள், ஆட்டோ மொபைல் வாகனங்கள் பயன்படுத்த  எலெக்ட்ரிக் கார்களே ஒரே மாற்றாக உள்ளது என்றும், இந்த கார்களையே குறைந்த செலவில் இயக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பெட்ரோல் கார் பயன்படுத்தும் போதும் ஆகும் செலவுடன், மகேந்திரா இ20 கார்களை பயன்படுத்தும்  போது ஆகும் செலவுகளை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.

இந்த ஒப்பீடு தோராயமாக 2 கார்களையும்  மாதத்தில் 24 நாட்களுக்கு, வாரத்தில் 6  நாட்கள் என நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க செய்து அதனால் ஆகும் செலவுகளை கணக்கிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் (மகேந்திரா இ20)

முழு வேகம்:  140 கிலோ மீட்டர்

முழு அளவு சார்ஜ் ஆக தேவைபடும் மின்சாரம்: 16.5 யூனிட்கள்

ஒரு கிலோ மீட்டர் பயன்படுத்த ஆகும் மின்சாரத்தின் அளவு: 16.5/140=0.12 யூனிட்

டெல்லியில் அதிகளவு மின்சார கட்டணம் (வீட்டு உபயோகத்திற்கான): ஒரு யூனிட்டுக்கு 6.5 ரூபாய்

ஒரு கிலோ மீட்டர் பயணிக்க ஆகும் மொத்த செலவு : 6.5 ரூபாய் x 0.12 = 0.78 அல்லது  78 பைசா

ஒரு நாளுக்கான மொத்த செலவு: 0.78 ரூபாய் x 50= 39 ரூபாய்

ஒரு மாதத்திற்கான மொத்த செலவு: 39 ரூபாய் x 24= 936 ரூபாய்

மேலே குறிப்பிட்ட கணக்கின்படி, எலெக்ட்ரிக் கார்களை ஒரு மாதம் முழுவதும் இயக்க 936 ரூபாயே போதுமானது என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் இந்த கார்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தின் யூனிட் கட்டணமும் குறைவாக உள்ளது.

பெட்ரோல் கார்கள்

ஒரு லிட்டருக்கு 15 கிலோமீட்டர் மைலேஜ் என்று வைத்து கொள்ளலாம்.

பெட்ரோல் இந்தாண்டு பெட்ரோல் விலை (மே 2018): 77 ரூபாயாக உள்ளது (டெல்லி பெட்ரோல் விலை)

சாராசரி பயன்பாடு (பயணித்த தூரம்/மைலேஜ்): 50/15=3.33 லிட்டர் (நாள் ஒன்றுக்கு)

2018ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு: 77×3.3= ரூ. 254.1

வாரத்தில் சராசரி வேலை நாட்கள்:6 நாட்கள்

மாதத்தில் மொத்த வேலை நாட்கள்: 6×4=24

மொத்தமாக மாதத்திற்கு ஆகும் செலவு: 24×254.1= ரூ. 6,098.4

இரண்டு கார்களுக்கு ஆகும் செலவில் ஏற்படும் வேறுபாடு = ரூ. 6,098.4 -936 =  ரூ. 5,162.4

மேலே உள்ள கணக்கை பார்க்கும் போது, பெட்ரோல் விலை நாள் ஒன்றுக்கு 254.1 ரூபாய், இது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆகும் செலவான 39 ரூபாயை ஒப்பிடும் போது 651.5 சதவிகிதம் அதிகமாகும். இந்த வேறுபாடு ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை அடிப்படையில் கணிக்கப்பட்டதாகும். இந்த கணிப்பு, ஒரு நபர் ஒரே அளவு தூரத்தை பெட்ரோல் கார்களில் பயணம் செய்வது, எலெக்ட்ரிக் காரில்களில்  பயணம் செய்வதை விட 5,162.4 ரூபாய் செலவாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் கார்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேட்டரி மாற்றும் மொத்த செலவைவும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான புதிய லித்தியம் இயான் பேட்டரி விலை, பெட்ரோல் கார்களின் பேட்டரி விலையை விட பாதிக்கும் குறைவாக உள்ளது.

பெட்ரோல் கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களை சார்ஜிங் செய்ய நேரம் செலவிட வேண்டியது அவசியமாக உள்ளது. இதுமட்டுமின்றி, நகர்புரங்களில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜிங் செய்யும் ஸ்டேஷன்கள் அரிதாகவே உள்ளது. மேற்குறிய காரணங்களாலேயே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை தவிர்த்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்படுத்த விரும்புகின்றனர்.