அடுத்த ஆண்டில் எலெக்ட்ரிக் SUV-கள் அறிமுகம்: ஹுண்டாய் நிறுவனம் உறுதி

Hyundai SUV

அடுத்த ஆண்டு எலெக்ட்ரிக் SUV-களை அறிமுகம்  செய்யப்படும் என்று வெளியான தகவலை ஹுண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

2018 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கிடையே புதிதாக 8 தயாரிப்புகளை கொண்டு வர திட்டமிட்டுள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (HMIL), அடுத்த ஆண்டு ஜனவரி முதல், தற்போது உள்ள ஆண்டு உற்பத்தி திறனான 7 லட்சம் யூனிட்களை, 7.5 லட்சம் யூனிட்களாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

தென் கொரியாவின் மிகப் பெரிய ஆட்டோ நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம், தனது இந்திய தொழிற்சாலையில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை  அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலையை, உலகளவில் உள்ள பிராந்திய தலைமையகங்களில் ஒன்றாகவும், உள்ளூரிலேயே நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தும் தொழிற்சாலையாகவும் மாற்றப்பட  உள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக  இயங்கி வரும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஒட்டுமொத்தமாக 8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை வரும் 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்  10 மில்லியன் மைல் கல்லை கடக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

HMIL நிறுவன மேலாண்மை இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒய்.கே. க்கூ (Y.K.Koo) தெரிவிக்கையில், SUV-க்கள் உள்ளிட்ட 8 புதிய தயாரிப்புகளை 2018 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த அறிமுகம் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு தேவையான அனைத்து யூனிட்களையும் முதலிலேயே இறக்குமதி செய்ய உள்ளோம் என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கிடைக்கும் மார்க்கெட் ரெஸ்பான்ஸ் மற்றும் அரசின் ஆதரவு ஆகியவற்றை பொறுத்து இந்த EVs-களை சென்னை தொழிற்சாலையில் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இந்தியாவில் உள்ள 15 நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் SUV-களின் விலை மற்றும் விற்பனை இலக்கு ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்கால இந்தியாவின் முக்கிய தொழிற்நுட்பமான EV-க்கள்  உள்ளதை ஹுண்டாய் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது என்று கூறிய அவர், தங்கள் நிறுவனம் ஹைபிரிட் வாகனங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

EV-களில் புதிய தொழில்நுட்பம் மட்டுமே தங்களின் நோக்கமாக உள்ளது என்று தெரிவித்த அவர், இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் அமல்படுத்த அரசின் ஆதரவு தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி இந்த வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தங்கள் நிறுவனத்தால்,  இந்தியாவில் SUV-க்கள் அறிமுகம் செய்யப்படும் போது,  வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீட்டிலேயே சார்ஜிங் செய்யும் கிட்(Home Charging Kit)-ஐ வழங்கப்படும் என்றார்.

கடந்த ஜூலை 2ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள ஹுண்டாய் நிறுவனம் பிராந்திய தலைமையகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்,  வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள நிறுவனத்தின் இரண்டு பிராந்திய தலைமையகங்களுடன் இந்தியாவில் உள்ள தலைமையகமும் இணைத்து, இது  மூன்றாவது தலைமையகமாக கருதப்படும் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சி பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கி பேசிய க்கூ(Koo), உள்ளூர் மார்க்கெட்டில் 10 ஆண்டுகள் வரை, நீண்ட கால திட்டங்களை  செயல்படுத்தும் பணிகளால் தங்களுக்கு அதிக பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதற்கு முன்பு, தாங்கள், மூன்றாண்டு வரை கொண்ட  குறுக்கிய கால திட்டத்தை செயல்படுத்துவதையே இலக்காக கொண்டிருந்தோம் என்றார்.

இதன்  மூலம் HMIL-லின் சேல்ஸ், மார்க்கெட்டிங், விற்பனைக்கு பிந்தைய சர்விஸ், தயாரிப்பு, கார்பரேட் பிளானிங் போன்றவைகளையும் இந்தியாவில் செயல்படுத்த உள்ளது. HMIL-லின் சேவையில், இறக்குமதி மற்றும் பொருட்கள் திட்டமிடல், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சேவை அளிப்பது போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.   மேற்குறிய பணிகளை செயல்படுத்துவதன் முக்கிய நோக்கமே, எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தொடர்வதே என்று தெரிவித்த அவர், இந்தியாவில் பெற்ற அனுபவத்தின் மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிராந்திய தலைமையகத்திற்கு ஒரு தலைவரே போதும் என்று தெரிய வந்துள்ளது என்றார்.

இதற்கு முன்பு மேற்குறிய இரண்டு பிராந்திய தலைமையகங்களும் தனித்தனியாக தலைவர்கள் இருந்து வந்தனர். இவர்களில் ஒருவர் தயாரிப்பு பணியையும், மற்றொருவர் மார்க்கெட்டிங் பணியை பார்த்து வந்தார்.

இந்தியாவில் ஒரே தலைவர் முறையை கொண்டு வருவதன் மூலம், தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் இடையேயான நிர்வாக முடிவுகளை விரைவாக எடுப்பதுடன், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் க்கூ(Koo) தெரிவித்துள்ளார்.

வரும் 2019ம் ஆண்டு வரை, பிராந்திய தலைமையகங்களை ரஷ்யா மற்றும் தென் அமெரிக்கா போன்ற மற்ற மார்க்கெட்டுகளுக்கும்,  விரிவு படுத்த ஹுண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் திறன் மேம்பாடு குறித்து பேசிய அவர், சென்னை தொழிற்சாலையில் வரும் 2019ம் ஆண்டு முதல் தங்கள் உற்பத்தியை 50,000 யூனிட்களாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், அடுத்த ஆண்டின்,  மொத்த ஆண்டு உற்பத்தி திறன்,  இந்தாண்டில் உள்ள 7 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் யூனிட்களாக உயரும். இதை மனதில் கொண்டு, புதிய தயாரிப்புகளை அதிகளவில் தயாரித்து, குடும்பத்தினர் எளிதாக வாங்கும் வகையில் வரும் தீபாவளி முதல் விற்பனையை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

2018 மற்றும் 2020 ஆண்டுகள் இடையே எட்டு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் தங்கள் இலக்கில், இரண்டு தயாரிப்புகள் புதிய பிரிவுகளிலும், ஐந்து தயாரிப்புகள் முழுவதுமாக மாடல் மாற்றம் பெற்றதாகவும், ஒரே ஒன்று எலெக்ட்ரிக் SUV-ஆகவும் இருக்கும் என்றும் க்கூ தெரிவித்துள்ளார்.

நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள இலக்கு குறித்து பேசிய அவர், தற்போதைய தயாரிப்பு திறன் அடிப்படையிலேயே, அடுத்த ஆண்டு 50,000-ஆக உயர்த்தப்படும். இதே நிலையில் தயாரிப்பு பணிகள் மேற்கொளளப்பட்டால் வரும் 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த தயாரிப்புகள் 10 மில்லியன் மைல்கல்லை எட்டும் என்று நினைக்கிறோம் என்றார்.