2018 ஹூண்டாய் கிரட்டா ஃபேஸ் லிஃப்ட் கார்களில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்

Hyundai Creta News

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரட்டா ஃபேஸ் லிஃப்ட் கார்களில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிரட்டா அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது. இந்த புதிய அவதாரத்தில், வெயிலில் இருந்து பாதுகாக்கும் சன்புரூப் முதல் மூடுபனி விளக்குகள் வரை பல்வேறு புதிய வசதிகளுடன், டிரைவர் சீட்டை ஆறு வழிகளில் மாற்றி அமைக்கும் வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி காரின் உட்புறத்தில் சில அழகிய ஆடம்பரமான வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த மே 21ம் தேதி மேம்படுத்தப்பட்ட கிரட்டா பெட்ரோல் கார்களை 9.43 லட்சம் ரூபாய் முதல் 13.59 லட்சம் ரூபாய் விலையிலும்,  டீசல் கார்கள் 9.99 லட்ச ரூபாய் முதல் 15.03 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஷோரூம் விலைக்கு முந்தைய விலை என்பது குறிபிடத்தக்கது.

பல்வேறு அம்சங்கள் இடம் பெற்ற போதும் இந்த காரின் இன்ஜின் மாற்றம் செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினுடனே தொடர்ந்து வருகிறது.

ரூ 9.43 லட்ச ரூபாயில் கிடைக்கும்  ஹூண்டாய் கிரட்டா ஃபேஸ் லிஃப்ட்: கார்களில் இடம் பெற்றுள்ள சில புதிய அம்சங்கள்

வெளிப்புறத்தில்

 • ஃபேஸ் லிஃப்ட்: கார்கள் வெளிபுறத்தில் பார்க்கும் போது அகலமான வாகனம் போன்று தோற்றமளிக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவை பெரியளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 • மூடுபனி விளக்குகள் தற்போது படுக்கை வாக்கில் அமைக்கப்பட்டுள்ளன. இது செங்குத்தாக அமைப்பதை ஒப்பிடும் போது விளக்குகளின் வெளிச்சம் அதிகமாக இருக்கும்.
 • பம்பர் ஒரு சாய்வான தட்டு போன்ற வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 • முன்பக்கம் அதிக கறுப்பு நிறம் கொண்டதாகவும், இதற்கு முன்பு இல்லாத வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 • பக்கவாட்டு அமைப்பு மற்றும் பின்பாக அமைப்பு தற்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள ஒரே மாற்றம் பிரதிபலிப்பான்கள் மாற்றியமைப்பு மட்டுமே. அதுமட்டுமின்றி பின் (fin) ஆண்டெனா வடிவமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
 • தற்போது வீல்களின் டிசைன் அதிகளவிலான கறுப்பு நிறத்துடன் காணப்பட்டாலும், இது காரின் நிறத்துடன் இணைந்து புதிய தோற்றத்தை அளிக்கும்.

 

காரின் உள்புற வடிவமைப்பு

 • 2018 கிரட்டா இரண்டு பிரிவுகளுடன் மெத்தைகள், திரைச்சீலைகள் முதலியவை ஆடம்பரமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்த காரில் 8 இன்ச் அளவு கொண்ட தகவல் அறிவிப்பு சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சிஸ்டம் AUX, GPS, USB மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை இணைக்க உதவும்.
 • கிரெட்டா உயர்ரக காரில்களில் பரந்த அளவிலான சன்புரூப் இடம் பெற்றுள்ளது.
 • கிரட்டா ஃபேஸ் லிஃப்ட்: SUV கார்கள் குரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜ்ஜிங் ஆகியவற்றுடன் வெளிவருகிறது.
 • இந்த கார் ஆறு வழிகளில் எலேக்ட்ரோனிகல் முறையில் மாற்றி அமைத்து கொள்ளும் வசதி மற்றும்  டாடா நிசான் காரில் உள்ளது போன்ற அணிந்து கொள்ளதக்க ஸ்மார்ட் கீ பேன்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

 

காரின் நிறங்கள் 

க்ரேட்டா 2018 புதிய கார் நிறங்களைப் பொறுத்தவரை, பேஷன் ஆரஞ்சு (Passion Orange) மற்றும் மெரீனா ப்ளூ (Marina Blue) ஆகிய நிறங்களுடனும், முந்தைய பதிப்புகளில் வழங்கப்பட்ட எர்த் பிரவுன் (Earth Brown) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue colours) நிறங்களிலும் கிடைக்கிறது. காரின் டாப் பகுதியை கறுப்பு நிறமாக மாற்ற  போலார்  வெள்ளை (Polar White) மற்றும் பேஷன் ஆரஞ்சு (Passion Orange) ஆகிய நிறங்களும் கிடைக்கிறது.