இப்போது சந்தா அடிப்படையில் கிடைக்கிறது ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய ஹூண்டாய் சந்தா உரிமையாளர் ஸ்கீமை அறிமுகம் செய்துள்ளது. ரேவ் நிறுவனத்துடனான பார்ட்னர்ஷிப் உடன், சந்தா அடிப்படையில் ஓனர்ஷிப் மாடல்கள் கார்களை வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் வாகனங்களை தயக்கமில்லா ஓனர்ஷிப் அனுபவத்தை அளிக்கிறது. மேலும் வளைந்து கொடுக்கக்கூடிய மற்றும் லிமிடெட் கமிட்மென்ட்டில் இது கிடைக்கும்.

ஹூண்டாய் சந்தா ஸ்கீம் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறு நகரங்களான டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, புனே, பெங்களுரூ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கிடைக்க உள்ளது. இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஓனர்ஷிப் திட்டங்களை அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கும்.

Hyundai Cars on Subscription

You May Like:2019 ஹோண்டா சிவிக் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 17.70 லட்சம்

வாடிக்கையாளர்கள் குறுகிய அல்லது நீண்ட கால சந்தா திட்டங்களை ஹூண்டாய் வகைகளை பொருத்து, ஜீரோ டௌன் பேமென்ட்டில் பெற்று கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் ஓராண்டு சந்தா அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாவை புதிய கார்களுக்கும் பெற முடியும். இதுமட்டுமின்றி ஆப்சனாக இன்சூரன்ஸ் இல்லாமலோ அல்லது பராமரிப்புகளுக்கான குறுகிய கால சந்தா திட்டமோ இடம் பெறும். மேலும் ஹூண்டாய் நிறுவனம், சந்தா திட்டத்தில் கிடைக்கும் மாடல்களுக்கு வெயிட்டிங் பிரியட் இல்லாமல் இருக்கும்படி செய்துள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சந்தா அடிப்படையிலான ஓனர்ஷிப்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர உள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக கார் தயாரிப்பாளர்களான ஸ்கோடா, டொயோட்டோ மற்றும் விரைவில் வெளியாக உள்ள MG பிராண்ட்களும் இதே போன்ற திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.