2018 LA ஆட்டோ ஷோவில் வெளியானது ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி

Hyundai Palisade SUV Revealed

2020 ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி மூன்று பிரீமியம் வரிசை கொண்ட எஸ்யூவிகளை தென்கொரியா கார் தயாரிப்பாளர்கள் இறுதி 2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள், முழுவதும் புதிய சேஸ்கள், 8 சீட்களுடன் எஸ்யூவிகள், புதிய லெவல் ஆல்-ரோடு, ஆல்-வெதர் கேப்பசிட்டி, டெக்னாலஜி, பாதுகாப்பு, திறன்களுடன் முழு பேக்கேஜ்க்களுடன் கட்டிங் எட்ஜ் டிசைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Hyundai Palisade SUV Front

You May Like:5 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்த மாருதி சுசூகி பலேனோ

தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் உல்சன் அடிப்படையிலான தொழிற்சாலையில் பாலிசாட் கார்கள் தயாரிக்கப்பட்ட உள்ளது. இந்த் எஸ்யூவிகள் அமெரிக்காவில் வரும் 2019ம் ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதும், நிசான் பாத்பைண்டர், போர்டு எக்ஸ்புளோரர் மற்றும் டொயோட்டா எக்ஸ்புளோரர் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். தற்போது பாலிசாட் கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு இல்லை.

Hyundai Palisade SUV Dashboard

You May Like:இந்தியாவில் தொடங்கியது புதிய தலைமுறை போர்ச்சே கார்களுக்கான புக்கிங்

இந்த காரின் வெளிப்புற டிசைன் மற்றும் ஸ்டைல்கள், HDC-2 கிராண்ட்மாஸ்டர் கான்செப்ட்டில் கவரப்பட்டு உருவாக்கப்பட உள்ளது. இருந்தாலும், கார் தயாரிப்பாளர்கள் சில பிராக்டிக்கல் மாற்றங்களை செய்துள்ளனர். ஹூண்டாய் பாலிசாட் கார்களின் முன்புறத்தில் LED ஹெட்லேம்களுடன் இரண்டு வெர்டிக்கல் புரொஜெக்டர் எலமென்ட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Hyundai Palisade SUV Side View

You May Like:90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

காரின் ஸ்டைலை பொறுத்தவரை, LED டர்ன் சிக்னல் மிரர்கள், உறுதியான C-பில்லர்கள், பெரியளவிலான 20 இன்ச் அலாய் வீல்களுடன், 245/50 டயர்கள், பனரோமிக் ரியர் கிளாஸ் மற்றும் வெர்டிக்கல் LED ரியர் டைல்லேம் டிசைன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த எஸ்யூவிகள் டிராக் கோ-எபிசியன்ட்(0.33) அளவுகளை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி ரியர் ஸ்பாயிலர் சைட் கிரானிஸ், வேகமான A-பில்லர் ஆங்கிள், ஏரோ அண்டர்சைடு பேனல்கள், ரியர் வீல் ஏரோ டிபேக்டர்கள் மற்றும் முன்புற கூலிங் பகுதியும் இடம் பெற்றுள்ளது.

Palisade SUV

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

ஹூண்டாய் புதிய எஸ்யூவிகள் உயர்தரம் கொண்ட வசதிகளாக, டாஷ் போர்டு இண்டகிரேட்டட் 12.3 இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிநவீன நேவிகேஷன் சிஸ்டம்களுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, பிரத்தியோகமான பிளைன்ட் வியூ மானிட்டர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, இரண்டு சன் ரூப்கள், ஷிப்ட்-பை-வயர் சிஸ்டம் மற்றும் இன்பினிட்டி ஆட்டோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ சிஸ்டம் குவாண்டம்லாஜிக் கொண்ட சவுண்ட் டெக்னாலஜி மற்றும் கிலாரி-பை ஆகியவை இடம் பெறும்.

Hyundai Palisade

You May Like:வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்

பிரீமியம் தரம் கொண்ட நப்பா லெதர் சீட் அப்ஹோலஸ்டிரி, இதில் உள்ள இன்ஸ்டுரூமென்ட் பேனலில் வுட்கிரைன் டிரிம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே டச்சில் அசைக்கப்படும் இரண்டாவது வரிசை சீட் மற்றும் இரண்டாவது வரிசை கேப்டன் சேர்களில் உயர் தரம் கொண்ட வெண்டிலேட் செய்யப்பட்ட சீட் மேற்புறமும் இடம் பெறும்.

Hyundai Palisade SUV Rear

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

ஹூண்டாய் பாலிசாட் கார்கள், 3.8 லிட்டர் V6 டைரக்ட் இன்ஜெக்ட்டட் பெட்ரோல் இன்ஜின்களுடன், 219bhp ஆற்றலில் 6000rpm கொண்டதாக இருக்கும். பீக் டார்க்யூ 355Nm-ல் 5,000rpm கொண்டிருக்கும். இந்த காரின் இன்ஜின்கள் 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்களுடன் மல்ட்டி-பிளேட் டார்க்யூ கன்வெர்ட்டர் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த எஸ்யூவிகள், 2 வீல் டிரைவ் மற்றும் HTRAC 4-வீல் ஆப்சன்களில் வெளிவர உள்ளது.

Hyundai Palisade Rear

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்