ரூ 1.7 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ஹூண்டாய் டஸ்கன்

2019 Hyundai Tucson Car News

எஸ்யூவிகளின் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ள ஹூண்டாய் நிறுவனம், தனது டஸ்கன் கார்களுக்கு 1.7 லட்ச ரூபாய் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், புதிய டஸ்கன் கார்கள் இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடி, தற்போது டீலர்களிடம் ஏற்கனவே உள்ள ஸ்டாக்களை விற்பனை செய்யும் நோக்கிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் தவிர்த்து, நிறுவனம் சார்பில் இலவச இன்சூரன்ஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக முறையே 90 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 Hyundai Tucson Car News

தற்போதைய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. பெட்ரோல் வெர்சன், 2.0 லிட்டர் இன்ஜின், இது 153bhp ஆற்றலம் மற்றும் 400Nm உச்சபட்ச டார்க்யூவை கொண்டுள்ளது. டீசல் வெர்சன், 2.0 லிட்டர் இன்ஜின், இது 182bhp ஆற்றல் மற்றும் 400Nm உச்சபட்ச டார்க்யூ-வை கொண்டுள்ளது. இரண்டு வைப்பரண்டுகளிலும் 6 ஸ்பீட் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் ஆப்சன்களை கொண்டுள்ளது. ஐந்து சீட் கொண்ட எஸ்யூவிகள் டுயல் பிராண்ட் ஏர்பேக்ஸ், வழக்கமான ABS மற்றும் EBD ஆகியவற்றை கொண்டுள்ளது. டாப் ஸ்பெக் மாடல்கள் ஆறு ஏர்பேக்ஸ்களை கொண்டதாக இருக்கும்.

2019 Hyundai Tucson Car News

கடந்த மே மாதம் முதல் புதிய டஸ்கன் கார்கள் அழகிய வடிவமைப்புடன் கூடிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்கள் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிதாக 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 Hyundai Tucson

தள்ளுபடி விபரம்:

மொத்த தள்ளுபடி ரூ.1.7 லட்சம்
எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ. 30,000
இலவச இன்சூரன்ஸ் ரூ.90,000 மதிப்பு கொண்டது
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 30,000