வெர்னா பதிப்பை வெளியிட்டு 20 ஆண்டை நிறைவை கொண்டாடும் ஹூண்டாய்

ஹூண்டாய் வெர்னா ஆண்டு விழா பதிப்பில், முழுவதும் பிளாக் உள் அலங்காரங்கள் மற்றும் அதிகளவிலான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகமாகி 20ம் ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது முன்னிட்டு ஆண்டுவிழா கொண்டாட்டமாக புதிய ஹூண்டாய் வெர்னா ஆண்டுவிழா பதிப்பை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் வெர்னா ஆண்டுவிழா பதிப்பு, இரண்டு வகையான வெளிப்புற பெயின்ட் ஆப்சன்களுடன் வெளியாகியுள்ளது. இதில் ஒன்றான ஸ்கை ப்ளு நிற கார்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

You May Like:ரூ. 5.53 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது டாட்டா மோட்டார்சின் டியாகோ என்ஆர்ஜி

அணைத்து மாடல்களும் டாப்-ஸ்பெக் வெர்னாவை அடிப்படையாக கொண்டும், முழுமையான பிளாக் நிற உள் அலங்காரங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இதில் கூடுதலாக, முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஃபக்ஸ் பிரஸ் உடன் கூடிய அலுமினியம் ஸ்கீட் பிளேட்கள், ரியர் ஸ்பாயிலர், கான்ட்ராஸ்ட் பிளாக் விங் மிரர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்சன்களுடன், டாப்-ஸ்பெக்களுடன் ப்ளூ நிற உள் அலங்காரங்களை கொண்டுள்ளது. கூடுதலாக ஆண்டுவிழா பதிப்புகளில் சன் ரூஃப் மற்றும் கூலான முன்புற சீட்களையும் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஹூண்டாய் நிறுவனம், தனது ஆண்டுவிழா பதிப்பு வெர்னா கார்களை வாங்குபவர்களுக்கு, மூன்றாண்டு மூன்றாம் தரப்பு காப்பீடுகளை இலவசமாக வழங்குகிறது. மேலும், 20,000 ரூபாய் எக்சேஞ்ச் ஆப்பர் மற்றும் ஃப்ரீபீஸ்களையும் வழங்குகிறது.

You May Like:புதிய வசதிகளுடன் வெளியானது மாருதி சுசூகி எஸ் கிராஸ்; விலை ரூ. 8.85 லட்சம்

ஹூண்டாய் வெர்னா ஆண்டுவிழா பதிப்பின் விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்ற போதும், இது பிரிமியம் காராக இருப்பதாலும், ஸ்டாண்டர்ட் வெர்னா டாப்-ஸ்பெக் காரின் விலையை விட தோராயமாக 35 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like:லெக்ஸஸ் ES 300h ஹைபிரிட் சொகுசு செடான் இந்தியாவில் அறிமுகமானது

இந்தியாவில் ஹூண்டாய் வெர்னா கார்கள், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4; லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார்கள் ஹோண்டா சிட்டி மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சூசுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.