எரிபொருளை டோர்ஸ்டெப் டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியது இந்தியன் ஆயில்

Indian Oil Doorstep Delivery

புனேவை தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது எரிபொருளை டோர்ஸ்டெப்பில் டெலிவரி செய்யும் முறையை சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் படி, வர்த்த நிறுவனங்களுக்கு டீசல் மட்டுமே டெலிவரி செய்யப்பட உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எரிபொருளை டோர்ஸ்டெப்பில் டெலிவரி செய்யும் பணிகளை சென்னை நகரில் தொடங்கியுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் சார்பில் மொபைல் எர்பொருள் டிஸ்பேன்சர்கள் கொண்ட வாகனங்களை பயன்படுத்த உள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த முயற்சி தமிழ்நாட்டின் தலைநகரில் தொடங்கபட்டது. டோர்ஸ்டெப் டெலிவரி சேவைகளில் பெட்ரோல் நிலையங்களில் உள்ளது போன்ற டீசல் விநியோகிக்கும் இயந்திரங்கள் டேங்கர் லாரிகளில் பயன்படுத்தப்படுகிறது. டீசல் மட்டும் டோர்ஸ்டெப் டெலிவரி செய்யப்படுவதால் வணிக வாகனங்கள் பெருமளவில் இந்தச் சேவையைப் பெற்று பயன்பெறுவார்கள்.

அதே நேரம் குறைந்தது 200 லிட்டர் டீசல் ஆர்டரை அளிக்கும்போது மட்டுமே டோர்ஸ்டெப் டெலிவரி செய்யப்படும். இதுவே 2,500 லிட்டருக்கும் அதிகமாக டோர்ஸ்டெப் டெலிவரி செய்ய வேண்டும் எனில் பெட்ரோலிய மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் முதல் முதலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புனேவில் இந்த முயற்சியை தொடங்கியது. இதற்கு முன்பே, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் போட்டியாளரான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மொபைல் டோர்ஸ்டெப்பில் டெலிவரி செய்யும் பணிகளை கடந்த ஆண்டே தொடங்கியது. இந்த நிறுவனமும் டீசல்களை மட்டுமே புனே மற்றும் மும்பையில் டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.