ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50

Jaguar XJ50

ஜாகுவார் நிறுவனம் தனது 50 ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கும் நோக்கில், தனது புதிய வகை காரான XJ-வை, XJ50 என்று பெயரிட்டு அறிமுகம் செய்துள்ளது.

ஜாகுவார் இந்தியா நிறுவனம் தனது புதியவகை XJ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாகுவார் XJ50 கார்கள், ஜாகுவார் நிறுவனத்தின் 50 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார்களின் விலை 1.11 கோடி ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை)

You May Like:கோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்

புதிய ஜாகுவார் XJ50 கார்களை வழக்கமான மாடல் காருடன் ஒப்பிடும் போது, பல்வேறு வகையான மேம்பாடுகளுடன் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இந்த கார்கள் டீசல் இன்ஜின் ஆப்சன்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. புதிய ஜாகுவார் XJ50 கார்கள் நான்கு கலர் கலரில் கிடைக்கிறது. இந்த் கார்கள், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சிரீஸ், ஆடி ஏ 8 மற்றும் லெக்ஸஸ் LS500 கார்களுக்கு போட்டியாக இருக்கும். .

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி

கூடுதலாக புதிய ஜாகுவார் XJ50 கார்களில் ஸ்பெஷல் பிராண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது. இவை டாப் ஸ்பெக் ஆட்டோபயோகிராபி வகைகளில் இடம் பெற்றிருக்கும். மேலும் இதில் ஸ்பெஷல் 10 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய குரோம் ரேடியேட்டர் கிரில்களுடன் குரோம் சுற்றிலும் இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய பேட்ஜ்ஜிங்காக XJ50 லோகோவும் பொருத்தப்பட்டுள்ளது.

Jaguar XJ50 features

You May Like:2019 ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ காரானது நிசான் கிக்ஸ்

புதிய XJ50 அறிமுகம் குறித்து பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவன உயர்அதிகாரி ரோகித் சூரி, ஜாகுவார் XJ கார்கள் முழுமையாக ஆடம்பர கார்களுக்கான அம்சங்களை கொண்டிருக்கும். இதை உணர்த்தும் வகையிலேயே XJ50 கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக ஸ்டைல் கொண்ட சாலுன் கார்களை நினைவு கூறும் வகையில் இந்த கார்கள் வெளியிடப்பட்டுள்ளது.

You May Like:ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS

ஜாகுவார் XJ50 கார்களின் மேம்படுத்தப்பட்ட இன்டீரியர் டிசைன்களுடன் புதிய சாஃப்ட் கிரைன் டைமண்ட் வடிவிலான சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஜாகுவார் லீபேர் லோகோகள் ஹெட்ரெஸ்ட்சில் எம்போஸ் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த காரில் ஸ்பெஷல் லோகோ ஒன்றும் ஆர்ம்ரெஸ்ட்களின் நடுவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஒளிரும் ஸ்கேல் தகடுகளில் மின்னும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ஜாக்குவார் XJ50 கார்களில் பிரைட் மெட்டல் பெடல்கள் மற்றும் ஆனோடைஸ்டு கியர் ஷிஃப்ட்னர்களும் உள்ளது.

Jaguar XJ50

You May Like:2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV