லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது

Lamborghini Urus ST-X

லம்போர்கினி நிறுவனம் எதிர்கால ரேஸ் கார் அடிப்படையிலான யுரூஸ் எஸ்யூவி கார்களை முற்றிலும் புதியதாக ST-X என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

லம்போர்கினி நிறுவனம் முதல் முறையாக ஹைபர் காரான ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்ததது. இந்த கார், அவெடடார் SVJ-ஐ அடிப்படையாக கொண்டது. இந்த கார், 770bhp ஆற்றலுடன், லம்போர்கினி ரேஸிங் பிரிவான லம்போர்கினி ஸ்க்வாட்ரா கோர்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

You May Like:முதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி

ஹைபர் கார் வரலாற்றில் முதல் முறையாக ஹைபர் காரான SC18 ஆல்ஸ்டன் காரை டெலிவரி செய்த லம்போர்கினி நிறுவனம், புதிய ரேஸ் கார் பிரிவான ஸ்க்ராடா கோர்ஸ் மூலம் யுரூஸ் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இதை தொடர்ந்து புதிய லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது. இந்த புதிய சூப்பர் யுரூஸ் கார்களுக்கு, ரேஸ் டிராக் அவசியமான ஒன்றாக உள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ்; விலை ரூ. 84.7 லட்சம்

உண்மையில், இந்த கார்களில் எடை குறைப்பு பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிலையில் உள்ளதை விட 25 சதவிகிதம் குறைவாக இருக்கும். புதிய லம்போர்கினி யுரூஸ் ST-X கார்கள், டூவின் டர்போ V8 இஞ்சின்களுடன் 641bhp ஆற்றலில், பீக் டார்க்யூவில் 850Nm கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் ரேஸிங் சீரிஸ் கார்களை போன்று தயாரிக்கப்பட்டு 2020 ஆண்டில் வெளியாகும் என்றும் இதற்காக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் ரேஸ் டிராக்கள் உருவாக்கப்பட உள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள மாற்றங்களில் புதிய கார்பன் பைபர்கிளோட்ன் கூடிய புதிய பெரியளவிலான ஏர் இன்டெக், முழு ரேஸிங் எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் பெரியளவிலான ரியர் விங்க் போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

You May Like:ஜாவா மோட்டார் சைக்கிள் பற்றி முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

லம்போர்கினி யுரூஸ் ST-X கார்கள் FIA அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, ரேஸ் ஸ்பெக்களுடன் ஸ்டீல் ரோல் கேஜ்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள தீ தடுப்பு அமைப்பு மற்றும் பெரிய FT3 ஸ்பெக் பெட்ரோல் டேங்க் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ஜாவா மோட்டார் சைக்கிள்கள்; விலை ரூ. 1.55 லட்சம்

இதுமட்டுமின்றி லம்போர்கினி நிறுவனம் இந்த காரில் 21-இன்ச் சென்டர் லாக் வீல்களுடன் பிரெல்லி டயர்களையும் பொருத்தியுள்ளது. லேசாக உயர்த்தப்பட்ட சஸ்பென்சன் செட்டாப் மூலம், மேடு பள்ளம் மற்றும் தாழ்வான பகுதிகளை நேவிகேட் செய்து கொள்ள உதவும். இதன் மூலம் ரேஸ் பயணங்களில் தொடர்ச்சியாக பயணிக்க முடியும். இறுதியாக, இந்த கார்கள், ஸ்பெஷல் வெர்டே மென்டிஸ் லிவெரி கலரில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.