செப்டம்பர் 3ல் வெளியாகிறது மஹிந்திரா மராஸ்ஸோ எம்விவி

Mahindra Marazzo Car News in Tamil

மஹிந்திரா மராஸ்ஸோ எம்விவி கார்கள் வெளியிட்டு தேதி இறுதியாக வெளியிட்டப்பட்டது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மராஸ்ஸோ எம்விவி வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள MPV-யின் பெயரை சமீபத்தில் மராஸ்ஸோ என்று அறிவித்தது. இந்த பெயர் “பாஸ்க்” மொழியில் இருந் பெறப்பட்டது. மராஸ்ஸோ என்பதை ஆங்கிலத்தில் ‘ஷார்க்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Mahindra Marazzo Car News

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பயணிகள் வாகனமாக வெளியாக உள்ள மராஸ்ஸோ எம்விவி-கள், சென்னையில் உள்ள ரிசார்ச் வேலி-யின் உதவியுடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில், பின்னின்ஃபாரினா மற்றும் மஹிந்திராவின் கண்டிவலி வடிவமைப்பு ஸ்டூடியோ ஆகியவற்றுடன் இணைந்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மகேந்திரா நிறுவன தலைமை வடிமைப்பாளர் ஆனந்தன் ராம்கிரிபா, திமிங்கலத்தை போன்றே மராஸ்ஸோ வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளேயும், வெளியேயும், திமிங்கலத்தை நினைவு படுத்தும் வகையிலான வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளது என்றார்.

Mahindra Marazzo

மராஸ்ஸோ எம்பிவி-க்கள் 7 மற்றும் 8 சீட் வடிவமைப்புடன் வெளியாக உள்ளது.. 7 சீட் வகைகளில் கேப்டன் சீட்கள் இரண்டாவது வரிசையிலும், 8 சீட் வகைகளில் பெஞ்ச் சீட்களும் இடம் பெற்றுள்ளன. 7 சீட் கொண்ட கார் வகைகளில் கடைசி சீட்டை அடைய கேப்டன் சீட்களை முன்புறமாக மடக்கி கொள்ளும் வகையில், 8 சீட் வகை கார்களில் பெஞ்ச் சீட்டை 40:20:40 என்ற ஸ்பிலிட்களில் மடக்கலாம்.

Mahindra Marazzo Cabin

கருப்பு-மற்றும்-பளபளப்பான T- வடிவ டாஷ்போர்ட், அலுமினியம் இன்செர்ட்ஸ், லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட் போன்றவற்றை கொண்டுள்ளது.

Mahindra Marazzo

மகேந்திரா நிறுவனத்தின் புதிய காராக வெளிவர உள்ள மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், இந்த இன்ஜின் 121hp மற்றும் 300Nm டார்க்யூவை உருவாக்கும். இந்த கார்கள் தொடக்கத்தில் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளியே வர உள்ளது. அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ABS-களுடன் கூடிய EBD, ஆகியவற்றுடன் வழக்கமாக கிடைக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Marazzo Tail Lamps

தங்கள் நிறுவனத்தின் எந்த காருக்கும் மாற்றாக மராஸ்ஸோ வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனம், மராஸ்ஸோ, அடுத்த தலைமுறை மாருதி சுசூகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.