ரூ. 13.99 லட்ச விலையில் அறிமுகமானது மகேந்திரா ஸ்கார்பியோ S9

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் புதிதாக வகை கார்களாக நீண்ட தூரம் பயணம் செய்யும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை புதிய S9 வகையாக அறிமுகம் செய்துள்ளது. மகேந்திரா ஸ்கார்பியோ S9 டிரிம்கள் 13.99 லட்ச ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம் விலை டெல்லியில்) மற்றும் இந்த விலை S11 டிரிம் லைன்-அப்களை விட குறைவாகவே உள்ளது.

ஸ்கார்பியோ S9 கார்கள் உண்மையில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியிடப்பட்டு தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மகேந்திரா நிறுவன புதிய ஸ்கார்பியோ S9 எஸ்யூவிகளை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நிறுவனம் டீலர்ஷிப்களிடம் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய கார்கள் சிறந்த வசதிகளுடன், மற்ற எஸ்யூவி வாகனங்களுடன் போட்டியிடும் வகையிலும் s11 வகையை விட குறைந்த அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய .ஸ்கார்பியோ S9 டிரிம்கள், S11 வெர்சன் விலையை விட 1.4 லட்ச குறைவாகவும், S7 டிரிம்களை விட 60 ஆயிரம் ரூபாய் அதிகமாகவும் இருக்கும்.

ஸ்கார்பியோ S9 அறிமுகம் குறித்து பேசிய மகேந்திரா நிறுவன, சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஆட்டோமேட்டிவ் பிரிவு தலைவர் விஜேய் ராம் நகரா, இந்த ஆட்டோ துறையில் ஸ்கார்பியோ கார்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், எஸ்யூவி பிரிவில் தொடர்ந்து டிமாண்டை உருவாக்கி வருகிறது. புதிய ஸ்கார்பியோ S9 கார்கள் பல்வேறு புதிய வசதிகளுடன், கவர்ந்திழுக்கும் விலையில், உண்மையான எஸ்யூவி கார் என்று வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் ஆற்றல், திரில் டிரைவிங் மற்றும் அட்வென்சர் பயண அனுபவம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்றார்.

புதிய மகேந்திரா ஸ்கார்பியோ S9 கார்களில் ஸ்டாடிக் பெண்டர் புரொஜெக்டர் ஹெட்லேம்கள், LED லைட் கைடுகள், ORVMs-களுடன் கார் திரும்புவதை உணர்த்தும் இன்டிக்கேட்டர்கள், பனிகால லேம்ப்கள், ஹைடிராலிக் பென்னட், மற்றும் குஷன் சஸ்பென்ஷன்களுடன் அசிஸ்ட் ஆண்டி-ரோல் தொழில்நுட்பம் போன்றவை இடம் பெற்றுள்ளது. புதிய எஸ்யூவிகளில், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், 5.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் இதில் நேவிகேஷனும் இடம் பெற்றுள்ளது ஆனாலும், வாடிக்கையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் விஷயமாக, இந்த புதிய காரில் ஆப்பிள் கார்பிளே அல்லது ஆண்டிராய்டு ஆட்டோ போன்றவை பொருத்தப்படவில்லை.

மேலும் கூடுதலாக இதில், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்ட்டட் ஆடியோ கண்ட்ரோல், இண்டேல்லிபார்க், எபிஎஸ்களுடன் டூயல் பிராண்ட் ஏர்பேக்ஸ் போன்ற வசதிகளை கொண்டிருக்கும். ஏழு சீட் எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த் எஸ்யூவிகளில், 3வது வரிசை சீட்களை தேவைக்கும் இடவசதிக்கும் ஏற்ப மாற்றி கொள்ள முடியும்.

புதிய மகேந்திரா S9 கார்களில் 2.2. லிட்டர் mHawk டீசல் இன்ஜின்களுடன் 140bhp மற்றும் 320 Nm பீக் டார்க்யூவில் இயங்கும். மேலும் இந்த இன்ஜின் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். புதிய மகேந்திரா S9 எஸ்யூவிக்கள் டாட்டா சஃபாரி ஸ்டோர்ம், ஹூண்டாய் க்ரீட்டா, ரெனோல்ட் டஸ்டர் மற்றும் டாடா ஹாரியர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.