மகேந்திரா எஸ்யூவிகளுக்கான ஆண்டு இறுதி டிஸ்கவுண்ட் மற்றும் ஆப்பர்கள்

Mahindra SUVs Year End Discounts

2018ம் ஆண்டு இறுதியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மகேந்திரா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்சென்டிவ்கள் முதல் முதலீடுகள் வரை ஆப்பர்களை அளிக்க உள்ளது. வாடிக்கையாளர்கள், இந்த ஆட்டோ தயாரிப்பாளர்களிடம் இருந்து 15 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரையிலான டிஸ்கவுண்ட் மற்றும் பெனிபிட்களை பெறலாம்.

மகேந்திரா நிறுவனம் வழங்கும் டிஸ்கவுண்ட்கள் குறித்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா அல்ட்ராஸ் G4 (Mahindra Alturas G4 ) வாங்கி ரூ.1 லட்சம் வரை சேமிக்கலாம்

மகேந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவிகளாக வெளி வந்துள்ள இந்த கார்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை பெனிபிட்களை பெறலாம். இரண்டுடிரிம் லெவல்களில் அதாவது அடிப்படையில் 2WD மாடல் மற்றும் முழுவதும் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட 4WD டிரிம்களாக அல்ட்ராஸ் G4 விற்பனையாகி வருகிறது. மேற்குறிய இரண்டு வகைகளும்,181hp, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் மெர்சிடைஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 7-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்களுடன் இருக்கும்.

Mahindra Marazzo Year End Discounts

மகேந்திரா மாராசோ (Mahindra Marazzo) வாங்கி ரூ.15,000 வரை சேமிக்கலாம்

மகேந்திரா நிறுவனத்தின் புதிய மாடலாக அறிமுகான மாராசோ எஸ்யூவி-க்கள் இந்தியாவில் முதல் முறையாக பாதுகாப்பில், நான்கு ஸ்டார் ரேடிங் பெற்றுள்ளது. மேலும் இந்த கார்களை எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்குபவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் பெனிபிட்டாக பெறலாம். இந்த MPV-க்கள் நான்கு டிரிம்களில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த கார்கள் 123hp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களை கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 6-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Mahindra XUV500 Year End Discounts

மகேந்திரா XUV500 (Mahindra XUV500) வாங்கி ரூ.79,000 வரை சேமிக்கலாம்

XUV500 கார்கள் மகேந்திரா நிறுவனத்தின், அல்டுராஸ் G4 அறிமுகம் வரை வெளியாகவில்லை. மகேந்திரா டீலர்கள், இந்த எஸ்யூவிகளுக்கு 70 ஆயிரம் வரை பெனிபிட் பெறலாம். ஏழு சீட் கொண்ட எஸ்யூவி-க்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வெர்சன் 140hp, 2.2 லிட்டர் இன்ஜின்களுடனும், டீசல் வெர்சன் 155hp, 2.2 லிட்டர் இன்ஜினுடனும் கிடைக்கிறது. இதற்கு முந்தைய மாடல்கள் 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடனும், பின்னர் 6-ஸ்பீட் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்சன்கள் மற்றும் AWD ஆப்சன்களுடன் வெளியானது.

Mahindra scorpio Year End Discounts

மகேந்திரா ஸ்கார்பியோ (Mahindra scorpio) வாங்கி ரூ.85,000 வரை சேமிக்கலாம்

ஸ்கார்பியோ கார்கள், மகேந்திரா நிறுவன கார்களின் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலான தொடர்ந்து ஒரே நிலையாக விற்பனையாகி வரும் கார்களாக இருந்து வருகிறது. இந்த கார்களுக்கு மகேந்திரா டீலர்கள் 85 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பெனிபிட்டை அளிக்க முன் வந்துள்ளனர். கடினமான தன்மை கொண்ட எஸ்யூவி-யாக இருந்து வரும் ஸ்கார்பியோ, கார்களை தினமும் பயன்படுத்துவர்களுக்கு ஏற்றதாக இருந்த போதும், டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் மோசமான வடிவமைப்பு காரணமாக முக்கிய பகுதிகளில் சில குறைகள் உள்ளன. இருந்தபோதும் இந்த கார்களின் அடிப்படை வகைகள், 75hp, 2.5 லிட்டர் டீசல்களுடனும், உயர்ந்த ஸ்பெக் கொண்ட மாடல்கள் 2.2 லிட்டர் இன்ஜின்களுடன் 120hp மற்றும் 140hp ஆற்றல் கொண்டதாக விற்பனையாகி வருகிறது.

Mahindra Bolero Year End Discounts

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) வாங்கி ரூ.50 ஆயிரம் வரை சேமிக்கலாம்

பொலிரோ கார்கள், விலை குறைந்ததாக இருப்பதுடன் நீடித்து உழைக்கும். இதனாலேயே இந்தியாவின் நகர்புறங்களில் பிரபலமான காராக இந்த கார்கள் விளங்கி வருகிறது. மகேந்திரா டீலர்கள், ஸ்டாண்டர்ட் பொலிரோ கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பர் பெனிபிட்டை வழங்க உள்ளனர். பவர் பிளஸ் வகைகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை பெனிபிட் கிடைக்கும். ஸ்டாண்டர்ட் பொலிரோ-க்கள், ஐந்து டிரிம் லெவல்கள் மற்றும் 63hp, 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டதாக இருக்கும். மற்றொரு வகையாக பவர் பிளஸ்கள் மூன்று டிரிம் லெவல்கள் மற்றும் அதிக திறன் கொண்ட 71hp, 1.5 லிட்டர் டீசல் யூனிட்களுடன் இருக்கிறது. இரண்டு மாடல்களும் மெனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

Mahindra KUV100 NXT Year End Discount

மகேந்திரா KUV100 NXT (Mahindra KUV100 NXT) வாங்கி ரூ.70 ஆயிரம் வரை சேமிக்கலாம்

மகேந்திரா நிறுவனம் இந்த கார்களுக்கு 79 ஆயிரம் மதிப்பு கொண்ட பெனிபிட்களை அளிக்கிறது. இந்த கார்க்ளுக்காக 46 ஆயிரம் ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்களுடன் எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட்டாக 28 ஆயிரத்து 750 ரூபாய் பெற முடியும். கூடுதலாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம். இந்த KUV-கள் ஐந்து வகைகளில், பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின்களுடன் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு விற்பனையாகிறது. AMT வகைகளும் தற்போது கிடைக்கிறது.

Mahindra TUV300 Year End Discount

மகேந்திரா TUV300 (Mahindra TUV300) வாங்கி ரூ.65,000 வரை சேமிக்கலாம்

மகேந்திரா TUV300 கார்களை வாங்குபவர்களுக்கு டிஸ்கவுண்ட்டாக 65 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் 46 ஆயிரம் ரூபாய் கேஷ் டிஸ்கவுண்ட்களுடன் 15 ஆயிரம் எக்சேஞ்ச் டிஸ்கவுண்ட்களும் கிடைக்கும். இது மட்டுமின்றி கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டாக 4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குறைந்த ஸ்பெக் கொண்ட கார்கள் 84hp, 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடன் இருக்கும். ஹையர் ஸ்பெக் கொண்ட வகைகள் 100hp ஆற்றல் கொண்ட மோட்டாருடன் இருக்கும். இந்த TUV300 கார்கள், இதே ஸ்பெக் கொண்ட நெகசான் மற்றும் விட்டாரா ப்ரெஸ் கார்களுக்கு போட்டியாக உள்ளது.

Mahindra TUV300 Plus Year End Discounts

மகேந்திரா TUV300 (Mahindra TUV300 Plus) பிளஸ் வாங்கி ரூ.70,000 வரை சேமிக்கலாம்

நவீனமான மற்றும் மகேந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு மாற்றாக வெளியான TUV300 பிளஸ் கார்கள் 120hp, 2.2லிட்டர் டீசல் மோட்டார்களுடன், 6-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஏழு சீட் கொண்ட எஸ்யூவி-களை தற்போது வாங்குபவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட்கள் கிடைக்கும். இந்த காரின் வகைகளை (P4, P6 மற்றும் P8) பொருத்து ஆப்பர்கள் மாறுபடும்