மாருதி சுசூகி ஆல்டோ K10 மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது; விலை ரூ. 3.65 லட்சம்

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களை புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது. மாருதி நிறுவனத்தின் BSE பைல்லிங்கை பொருத்து, இந்த நிறுவனம் 2019 மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களில், EBD-களுடன் ABS, டிரைவர் சைட் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் அலர்ட், மற்றும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் பெல்ட் ரீமைண்டர் போன்றவை வசதிகளை பொருத்தியுள்ளது.

ஆல்டோ 800 கார்களை தொடர்ந்து, தற்போது புதிய மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களை கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ள மாருதி நிறுவனம், இருந்தபோதிலும், மாருதி 800 கார்களின் அடுத்த பதிப்புகளில் இந்த அப்டேட்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வெளி வந்துள்ள மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களின் விலை 25,000 ரூபாய் அதிகமாக இருக்கும். புதிய விலையின் படி மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களின் விலை 3.65 லட்சம் ரூபாய் முதல் தொடங்கி, 4.44 லட்ச ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது.

Maruti Suzuki Alto K10

You May Like:லேண்ட் ரோவர் வேலர் காரை உள்ளூரில் அசெம்பிள் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது; விலை ரூ. 72.47 லட்சம்

இந்தியாவின் சில பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியான மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்களின் விலை 3.75 லட்ச ரூபாயில் தொடங்கி 4.54 லட்ச ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனையாகிறது. இந்த புதிய விலைகள் கடந்த 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய அப்டேட்கள், எதிர்வரும் பாதுகாப்பு விதிகளான AIS-145 விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.

மாருதி சுசூகி ஆல்டோ K10 கார்கள் மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மாடல்கள் கார்களாக இருக்கிறது. மொத்தத்தில் அனைத்து மாடல்களும் அதாவது புதிய தலைமுறை வேகன் ஆர் முதல் அதற்கு மேற்பட்ட லைன்அப்கள் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் வெளி வருகிறது.

உண்மையில், கடந்த மாதம் மாருதி சுசூகி நிறுவனம், Eeco வேன்களில் இதுபோன்ற பாதுகாப்பு வசதிகளை பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஏர்பேக்கள் குறிப்பிட்ட மாடல்களில் மட்டும் இடம் பெற்றிருக்கும். இந்த வசதிகளுடன் கூடிய Eeco-களின் விலை 400 முதல் 23,000 ரூபாய் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்). இதே போன்று மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்டு மற்றும் மகேந்திரா நிறுவனங்களும் தங்கள் மாடல்களில் பாதுகாப்பு வசதிகளை நிலைப்படுத்தி வருகின்றன.

Maruti Suzuki Alto K10 updated safety features

You May Like:பிஎம்டபிள்யூ இசட்4 ரூ.64.90 லட்ச ரூபாயில் இந்தியாவில் அறிமுகானது

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து மாருதி சுசூகி ஆல்டோ K10 காரின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆல்டோ வகைகளில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் காராக, 2020ம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்பட உள்ள BS-6 விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள், கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பியுச்சர்-S கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டதாக இருக்கும், இதுமட்டுமின்றி சில புரோட்டோடைப் மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதையும் காண முடிகிறது.